இந்தியாவின் ஜெயசூர்யா திருஷ் காமினி!


உலக கோப்பையில் சதமடித்த முதல் இந்தியப் பெண் திருஷ் காமினி முருகேசன்!

திருஷ் காமினி! இதுதான் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர். சென்னை வைஷ்ணவா கல்லூரி மாணவியான இவர் தனது ஒன்பதாவது வயது முதல் கிரிக்கெட் ஆடி வருகிறார். பள்ளிஅளவிலான போட்டிகள் மாவட்ட அளவிளான போட்டிகளில் பங்கேற்ற இவர்.இப்போது இந்திய அணியில் இடம்பெற்று கலக்கி வருகிறார்.
   இடதுகை பேட்ஸ் உமனான இவர் வலதுகையில் லெக் ஸ்பின் பந்தும் வீசி கலக்குவார்.ஆகவே ஆல்ரவுண்டர் என்று சொல்லலாம். இவர் இந்திய உடையணிந்து ஸ்டைலாக களம் புகும் போது இலங்கை அணியின் ஜெயசூர்யா ஞாபகம் பலருக்கும் வரும். அவரைப்போலவே இடது கை மட்டையாளர்.
   இப்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் துவக்க வீரராக களம் புகுந்து சதம் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை உலக கோப்பை போட்டிகளில் இந்திய பெண்கள் யாரும் சதம் அடித்தது இல்லை. இந்தியாவின் மிதாலிராஜ் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்துள்ளார். அந்த சாதனையை முறியடித்து சதம் அடித்து சாதித்துள்ளார்.
 அத்துடன் முதல் விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தும் சாதனை படைத்துள்ளனர்.
 தனது 16 வயதில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஆடிய காமினி சிறந்த ஜுனியர் வீராங்கணை 2007-08 சிறந்த சீனியர் வீராங்கனை 2009-10 விருதுகளை வென்றுள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக அசத்தி 8 விக்கெட்களும் 135 ரன்களும் குவித்து இந்த விருதை பெற்றார்.
   தற்போது உலகக் கோப்பை போட்டியில் சதம் அடித்து சாதனை படைத்த இவரை பி.சி.சிஐ கண்டு கொள்ளவே இல்லை. சாதனை சதம் அடித்த இவருக்கு பாராட்டுக்கள் கூட கிடைக்கவில்லை! மீடியாக்கள் கூட ஆண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் அளவுக்கு இதை பெரிது படுத்த வில்லை!
   மற்ற பெண்களை போல சொந்த ஆர்வத்தில் தான் காமினி கிரிக்கெட் விளையாடி வருகிறார். அணிக்காக எந்த இடத்திலும் களம் இறங்கும் காமினி சதம் அடித்து துவக்க இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இனிவரும் போட்டிகளில் கலக்கலாக விளையாடி இந்தியாவிற்கு உலக கோப்பையை பெற்றுத்தருவார் என்று நம்பலாம்! சபாஷ் காமினி!  தளிர் வலைப்பூவும் அதன் நண்பர்களும் உங்களை பாராட்டுகிறோம்! தொடரட்டும் உங்கள் அசத்தல் விளையாட்டு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. காமினிக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!