மதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்! காந்தியவாதி சசிபெருமாள்!


காந்தியவாதி சசிபெருமாளை உங்களுக்குத்தெரியுமா? அவர் நடத்தி வரும் மதுவிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிவீர்களா?
   நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! எனக்கே இன்று முகநூலில் கார்டூனிஸ்ட் பாலாவின் பக்கத்தை பார்த்தபோது சசிபெருமாளையும் அவர் நடத்தி வரும் போராட்டத்தை பற்றியும் தெரியும். தமிழகத்தில் ஒரு காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து அரசு மாய்ந்து மாய்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடித்து சிறையில் தள்ளியது.
  மது குடிக்க பெர்மிட் என்று ஒன்று கொடுத்து அதை வைத்திருப்பவர்கள்தான் குடிக்கலாம் என்று ஒரு சட்டம் இருந்தது. அந்த பெர்மிட்டை பெற பிரபலங்கள் கூட மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று மது ஆறாக  பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் ஓட வேண்டிய ஆறுகளும் குளங்களும் வற்றி வரண்டு கிடக்க மது ஆறு மட்டும் வெள்ளப்பெருக்கில் இருக்கிறது.
   சின்னஞ்சிறு குழந்தைகள் கூட டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு அலம்பல் பண்ணும் அதிசயக் காட்சிகளை காண்கிறோம். பல இடங்களில் பள்ளி மாணவர்கள் சரக்கடித்துவிட்டு பள்ளிக்கு வருகிறார்கள். நாளிதழ்களில் இதை புகைப்படமாக காணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் இவ்வளவு வியாபாரம் செய்து விட வேண்டும் என்று டார்கெட் நிர்ணயித்து டாஸ்மாக் ஊழியர்களை கெடுபிடி செய்கிறது அரசு.
   அவர்களும் நிர்ணயித்த அளவை விட அதிகம் விற்பனை செய்து சாதனை செய்கிறார்கள். ஆனால் இந்த சாதனையின் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனையை அரசோ அதிகாரிகளோ அறிந்ததாக தெரியவில்லை! குடியை அரசே ஊக்குவிப்பது மிகவும் கேவலமான விஷயம் அன்றோ! எத்தனை கூலித்தொழிலாளர்கள் தான் சம்பாதித்த காசை டாஸ்மாக்கில் கப்பம் செலுத்தி விட்டு வீட்டுக்கு வெறுங்கையோடு செல்கிறார்கள் தெரியுமா? எத்தனை தாய்மார்கள், பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? இதையெல்லாம் கொஞ்சம் கூட உணராமல் மேலும் மேலும் குடியை ஊக்குவித்து வரும் தேசத்தில் காந்தியவாதியான சசிபெருமாளையும் அவர் நடத்தும் போராட்டத்தையும் அரசு ஒரு பொருட்டாக கருதாதுதான்.
  இதோ கார்டூனிஸ்ட் பாலா பகிர்ந்ததை பகிர்ந்து கொள்கிறேன்! இதைப்படித்து ஒரு சில குடிமகன்களாவது திருந்தினால் சரி!
    காந்தியவாதி பெரியவர் சசி பெருமாள் கடந்த ஜனவரி 30 தேதி பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மெரீனா காந்தி சிலையின் கீழ் உண்ணாவிரதம் இருந்தார். உடனே பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். ( கவர்மெண்டே சாராய வியாபாரம் செய்வது பொதுமக்களுக்கு இடையூறு இல்லையாம்.. ) சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடரவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இப்போது விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் 29 வது நாளாக தொடர்ந்து மதுவிலக்கை வலியுறுத்தி சசி பெருமாள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது.

அவரது கோரிக்கைக்கு வலு சேர்க்க நம் ஆதரவு அவசியம். அதே சமயம் இப்போது இந்தியாவில் ஆட்சி செய்பவர்கள் வெள்ளையர்கள் அல்ல.. ஜனநாயக மன்னர்கள். வெள்ளையர்களிடம் உண்ணாவிரத்திற்கு இருந்த மரியாதை இந்த களவாணிகளிடம் துளியும் கிடையாது..

செத்தா செத்துட்டுப்போ.. அப்பாடா.. தொல்லை விட்டது என்றுதான் இந்த யோக்கியர்கள் நினைப்பார்கள் என்பதை காந்தியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அரசின் சாராய வியாபாரத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தை வேறு வடிவில் தொடருவோம்

   காந்தியவாதி சசி பெருமாளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! மது அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. இதுவரை அந்த காந்திய வாதியை கண்டு கொண்டதாய் தெரியவில்லை சார் ///

    ReplyDelete
  2. இன்று நாட்டில் நடக்கும் பல தவறான செய்கைகளுக்கும் , விபத்துகளுக்கும் மதுதான் முக்கியகாரணம் .. என்றுதான் இது ஒழிய போகிறதோ ?? போராடும் நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமையான பதிவு, இதுவரை இவரைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை! ரொம்ப நன்றி தெரிந்துக்கொண்டேன்.

    ReplyDelete
  5. அவரை எல்லாம் ஓரமா நின்னு வேடிக்கை பாக்கக் கூட எவனும் வரமாட்டான். இதே ஒரு நடிகன் உண்ணாவிரதம் இருந்தா பெரிய செய்தியா மாறி இருக்கும்.ஆயிரம் பேர் கூடவே உட்கார்ந்துடுவான்.

    ReplyDelete
  6. இதே வட நாட்டில் இருந்தால் உடனே எல்லாப் பத்திரிக்கைகளும் அவரைப் பேட்டி எடுத்திருக்கும்.... நமக்காகத்தான் இந்தப் போராட்டமே என குறைந்த பட்சம் குடிகாரர்களின் மனைவிகளாவது யோசித்து ஆதரவளிக்கலாம்....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2