Posts

Showing posts from January, 2018

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 30

நொடிக்கதைகள்! பகுதி 30 1.விதை:   உங்க “செமன்”ல போதுமான உயிரணுக்கள் இல்லை! டெஸ்ட் ட்யுப் பேபிதான் முயற்சிப்பண்ணனும் என்று டாக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் .விதையில்லா பழங்களை இறக்குமதி செய்யும் வியாபாரி. 2. ஏமாற்றம்:     இடைத்தேர்தல் ரத்தாகாமல் நல்லபடியாக நடந்து முடிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர் தொகுதி வாசிகள்! 3. சாட்டிங்க்!    இப்ப பேசறதுக்கு நேரம் இல்லை! உன் வாட்சப் நம்பர் சொல்லு! சாட்டிங்க்ல வரேன்! என்று அவசர அவசரமாக நம்பரை ஸ்டோர் செய்து கொண்டு நகர்ந்தான் சதிஷ்! 4.சுமை!    மலைக்கோயிலில் சுமக்க முடியாமல் சுமந்து வந்த சுமையை இறக்கி வைத்து பெருமூச்சு விட்டனர் டோலி சேவகர்கள்! 5. வரன்!  “வயசு கூடிக்கிட்டே போவுது! இன்னும் கல்யாணம் குதிர்ந்த பாடில்லை! வந்த வரனெல்லாம் தட்டிக்கிட்டே போவுது!  தலையிலும் லேசா நரை விழ ஆரம்பிச்சிருச்சு! என் மகனுக்கு சீக்கிரம் ஒரு பொண்ணை தேடிக்கொடு தெய்வமே! கோயிலில் புலம்பிக்கொண்டிருந்தாள் அந்த தாய். 6. ஓட்டு!     ”மறக்காம நம்ம சின்னத்துக்கு ஓட்டு போட்டுடுங்க! உங்களுக்கு காலம் முழுவதும் சேவை செய்வேன்” என்று ஓட்டுக்கேட்ட வேட்பாள

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
மவுனப்பொழுது! முள்ளாய் குத்துகிறது! கடிகாரத்தின் ஓசை! எண்ணிக்கை குறைகையில் ஏறுகிறது மகிழ்ச்சி! மலைக்கோயில்! இருண்ட பொழுது! அழகாக்கின! நட்சத்திரங்கள்! ஆடை கட்டியதும் ரசிக்கப்படவில்லை! தேநீர்! வீழ்ந்ததும் உயிர்த்தெழுந்தது பூமி! மழைத்துளி! மேயும் ஆடுகள்! பசுமை இழந்தது! பூமி! கோயில் கோபுரம்! கூச்சலிடும் புறாக்கள்! வெடிச்சத்தம் உறுத்திக்கொண்டே இருந்தது கழற்றும்வரை கைவிரல் மோதிரம்! திருடனுக்கு! புதிய ஊர் நட்பு பாராட்டியது! தேநீர்க்கடை! விளக்கின் அடியில் ஒளிந்தன! வெளிச்சம் தேடிய பூச்சிகள்! கிழித்து எறிந்தார்கள்! வருத்தப்படவில்லை! நாட்காட்டி! நள்ளிரவில் பிரசவம்! நாடெங்கும் கொண்டாட்டம்! புத்தாண்டு! பனி விலகியதும் தெளிவானது பூமி! தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

ஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா தரிசனம்!

Image
ஆனந்த வாழ்வளிக்கும் ஆருத்ரா தரிசனம்! ஒவ்வொரு ஆண்டும் ஹேமந்த ருது தனுர் மாசத்தில்  (மார்கழி மாதம்) பௌர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாள். ஆருத்ரா தரிசன நாளாகும். ஆருத்ரா அபிஷேகம் நடராஜப்பெருமானுக்கு செய்விக்கப் படுவதாகும். உலகையே ரட்சித்து இயக்கி கொண்டிருக்கும் எம்பெருமானின் அருந்தவக் கோலம்தான் நடராஜப்பெருமான் கோலம். அத்தகைய நடராஜப்பெருமானுக்கு குறிப்பிட்ட திதி, மற்றும் நட்சத்திரங்களில்தான் அபிஷேகம் செய்விக்கப்படவேண்டும் என்ற ஆகம விதிகள் உள்ளன. அதில் ஆனிமாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் வரும் ஆனித் திருமஞ்சனம் என்னும் வைபவமும் மார்கழி திருவாதிரை நாளில் வரும் ஆருத்ரா அபிஷேகமும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆனந்த வாழ்வளிக்க கூடிய ஆருத்ரா அபிஷேகத்தினை சிவாலயங்களில் தரிசித்து பிறவிக்கடன் நீங்கி சுகம்பெற கோடானு கோடி பேர் காத்திருப்பர். தமிழகத்தில் தில்லை சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த விழாவானது சிவாலயங்கள் அனைத்திலும் கொண்டாடப்படக்கூடிய விழா ஆகும். சேந்தனார் என்னும் சிவபக்தர் , தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார் . சிவனடியார்கள