தினமணி இணையதளக்கவிதை
தினமணி கவிதை மணியில் இந்த வாரம் வெளியான எனது கவிதை கருவில் தொலைந்த குழந்தை: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 12th May 2018 06:32 PM | அ+ அ அ- | கருவொன்று உருவாகையில் ஊற்றெடுக்கும் வெள்ளம்! உருவாக்கம் கொடுக்கையில் உபத்திரவங்கள் அள்ளும்! முழுதாக முடிக்க நினைக்கையில் பழுதாகி பாதியில் நிற்கும் படைப்பு! உழுது விளைந்த நிலத்தில் கொல்லியாய் பூச்சிகள் போல எழுத விளைந்த மனத்தில் கொல்லியாய் வறட்சி! கருவிலே தொலைந்த குழந்தையின் காணாமுகமாய் உருவிலே வடிக்க முடியா படைப்புக்கள் பாதியில்! தெருவிலே வரையும் ஓவியம் மிதிபட்டு மறைந்து போவது போல கருவிலே உருவாகும் கற்பனைகள் காட்சிகள் எண்ணங்கள் உடைபட்டு சிதைந்து போகும்! இயற்கையும் சூழலும் இனிமையான பொழுதும் கிடைக்கையில் எண்ணப்பிரவாகையில் உதிக்கும் முத்துக்கள் நல்ல கருவாகும்! கருவான பின்னாலே மனதிலே சஞ்சலமும் சலனமும் மறைந்து நின்றால் மகிழ்வாக பிறந்திடும் படைப்பு! சஞ்சலங்கள் துன்பங்கள் சலனங்கள் சலிப்புக்கள் பெருகிவிட்ட மனதினிலே கருவிலே தொலைந்த குழந்தைபோல கலைந்து போகிடும் நல்ல படைப்புக்கள்!