Posts

Showing posts from August, 2016

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 17

Image
நொடிக்கதைகள்!   பகுதி 17 வாஸ்து!     பிரபல அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்கு ப்ளான் போட்டுத்தரும் இஞ்ஜினியர் குமார் தன் புது வீட்டிற்கு ப்ளான் போட்டுத் தரும்படி வாஸ்து ஜோஸியரிடம் கேட்டுக்கொண்டிருந்தான். ஓசி!     எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? காலையிலே வந்து கடையை திறந்தாத்தானே வியாபாரம் நல்லா நடக்கும்? சலூன் கடை வாசலில் காத்திருந்தவன் கோபத்துடன் கேட்டுவிட்டு சரி சரி அந்த பேப்பரை இப்படிக் கொடு என்று பேப்பரை விரித்து வாசிக்க ஆரம்பித்தான். பழங்கதை!        இப்படித்தான் போனவருஷம் விடாது அடை மழை பேய்ஞ்சது….! என்று ஆரம்பித்த அப்பாவிடம் சரி சரி! அதெல்லாம் பேஸ்புக் மெமரீஸ்லே பார்த்து ஷேர் பண்ணிட்டேன்! விடு விடு! உன் பழங்கதையை என்றான். மடிப்பு!      ”ஒரு நாளைக்கேனும் உங்க துணிகளை நீங்க மடிச்சு வைச்சுக்க கூடாதா?” என்றவளிடம் ”அப்புறம் நீ எதுக்கு இருக்கே? ”என்று கெத்தாக கேட்டவன் துணிக்கடையில் நுழைந்ததும் மடித்து வைக்க ஏராளமான புடவைகள் காத்து இருந்தன. க்ளீன் போல்ட்!    சாக்லெட் நிறைய சாப்பிட்டா பல் சொத்தையாயிரும்னு சொல்லி எனக்கு மட்டும் சாக்லெட் வாங்கி வ

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
புதிய வீட்டில் கண்ணீர் சிந்தினர் ஹோமப் புகை! வெள்ளம் பாய்ந்தது மகிழ்ந்தார்கள்! ஒளி! எல்லா ரகசியங்களும் உறங்குகின்றன இருட்டு! கேள்விக்கணைகள் துளைக்கிறது சிதறுகின்றது அறிவு! குழந்தையின் வினா! விழிகள் மூடியதும் விரிந்தது காட்சி! கனவு! காதலி வருகை! கனிந்தது சூரியன்! மேகம்! தடம் புரண்டது தொடர்வண்டி! பாதையில் மனிதன்! எறும்புகள்! தென்றல் வந்ததும் தேய்ந்து போனது சூரியன்! ஒளிந்து கொண்டதும் ஓடிப்போனது தூக்கம்! காற்று!  ஆடும் வீடுகள் ஆனந்தமானது மனசு! தூக்கனாம்குருவி கூடு! மறைந்த சூரியன்! காட்டிக் கொடுத்தன பறவைகள்! உச்சியில் உதயமானது உப்புநதி! வியர்வை! அலுக்கவில்லை பயணம்! குழந்தைகள் உலகம்! துகில் உரித்தார்கள் பசி அடங்கியது! வாழைப்பழம்! சிதறிய மணிகளை சேகரித்தன சிப்பாய்கள்! வயலில் பறவைகள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? நூல் விமர்சனம்

Image
  அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? இந்த புத்தகத்தை வாங்கி வாசித்து இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும். நண்பர் பி. கருணாகரன் அவர்களை முகநூல் மூலம் அறிந்து நட்பு பாராட்டி அவரது இரண்டு நூல்களை வாங்கினேன் ஒன்று அவர் நிருபராய் பணியாற்றியபோது ஏற்பட்ட பரபரப்பான அனுபவங்களை சொல்லும் காகிதப் படகில் சாகசப் பயணம். இப்போது இதழியல் படிக்கும் நிருபர்களாய் இருக்கும் பலருக்கும் பாடமாய் அமைய வேண்டிய புத்தகம். மற்றொன்று அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனங்களும் எப்படித் தோன்றின? என்னும் குழந்தை இலக்கியம். குழந்தைகளே உலகின் முதல் விஞ்ஞானிகள் என்று எழுதி கையோப்பம் இட்டு அனுப்பி இருந்தார் பெ. கருணாகரன். அது எவ்வளவு பெரிய உண்மை! அத்தகைய குழந்தைகளுக்கு கதை சொல்லுவது என்றால் எவ்வளவு பெரிய விஷயம். ஆனால் அதை அவ்வளவு எளிமையாக சொல்லி முடிக்கின்றார் பெ. கருணாகரன். அரும்பு என்னும் சிறுவர் இதழில் வெளிவந்த கதைகளை தொகுத்து நூலாக்கி இருக்கிறார். இதில் மற்றொரு மகிழ்ச்சியான ஆச்சர்யமான விஷயம்.இந்த நூலில் உள்ள பதிமூன்று கதைகளுக்கும் படங்கள் வரைந்தவர்கள் குழந்தைகளே!  நீண்ட முன்னுரையில் குழந்தை

நன்றி கொன்ற விலங்கு! பாப்பாமலர்!

Image
நன்றி கொன்ற விலங்கு! பாப்பாமலர்! ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு அடர்ந்த காடு இருந்தது. அந்த காட்டில வேடன் ஒருத்தன் இருந்தான். அவன் வில்லில் இருந்து அம்புகள் புறப்பட்டால் எந்த விலங்கும் செத்துவிடும். குறி தவறாமல் எய்யக் கூடியவன். கருணையே இல்லாத கொடியவன்.   ஒரு நாள் அவன் வேட்டைக்குப் புறப்பட்டான். அன்னிக்கு அவனுக்கு நேரமே சரியில்லை! பகல் முழுதும் அலைந்தும் ஒரு விலங்கும் அவனுக்கு சிக்கவே இல்லை! உணவில்லாமல் பசி வேறு அவனை கொடுமைப் படுத்தியது. வெயிலில் அலைந்தமையால் தாகம் வேறு. கையில் கொண்டுவந்திருந்த நீரெல்லாம் காலியாகிவிட்டது. பொழுதும் இருட்ட மிகவும் சோர்வோடு தன்னோட இருப்பிடத்துக்கு புறப்பட்டான்.   அந்த நேரம் பார்த்து திடீர்னு மேகங்கள் சூழ்ந்துகிச்சு! இடி முழங்கிச்சு! “சோ’ன்னு மழை கொட்ட ஆரம்பிடுச்சு. அவன் மழையில் முழுக்க நனைந்து விட்டான். கையில் இருந்த வில் அம்பு எல்லாம் அடித்த சூறாவளி மழையில நழுவிடுச்சு! ஒதுங்கக் கூட இடம் இல்லை. குளிருல நடுங்கிட்டு இருந்தான். அந்த சமயம் “பளிச் பளிச்”னு இருட்டுல ரெண்டு புள்ளிகள் மின்னுச்சு! அது ஒரு புலி! அது வேடன் மேல பாய தயாரா நின்னுச்சு!   

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 76

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 76 1.    மன்னா! நம் சிப்பாய்கள் எதிரியிடம் விலை போய்விட்டார்கள்! ”சீப் பாய்கள்” ஆகிவிட்டார்கள் என்று சொல்லுங்கள்! 2.    தலைவர் தன் வாழ்நாள்ல போலீஸ் ஸ்டேஷன் படி ஏறினது இல்லையாமே! ஆமாம்! எப்பவும் குண்டு கட்டா தூக்கிட்டுதான் போவாங்க! 3.    மன்னர் ரொம்ப செல்பிஷ்ஷா இருக்கிறார்னு தளபதியார் புலம்பறாரே! நாட்டிய பெண்களோடு செல்ஃபி எடுக்கும்போது தளபதியை உடன் சேர்த்துக்கொள்வதில்லையாம்! 4.    தலைவர் ரெகுலரா பாட்டுக்கிளாஸ் போறார்னு சொல்றியே எங்கே? சட்ட சபைக்குத்தான்! 5.    தலைவர் கையில கிடாரோட எங்க கிளம்பிட்டார்…? சட்ட சபைக்குத்தான்! 6.    நகைக் கடன் தரோம்னு சொன்னோம் அதுக்காக நீங்க உங்க சொந்தக்காரங்க வீட்டு கல்யாணத்துக்கு போட்டுகிட்டு போறதுக்கெல்லாம்  நகை இரவல் கேக்கிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை! 7.    திருடனை பிடிக்காம விடமாட்டேன் என்று மன்னர் கர்ஜிக்கிறாரே எந்த திருடன்?          மன்னர் கிரிமினல் கேஸ் விளையாடுகிறார் அதைத்தான்         சொல்கிறார்  8.    தலைவர் ஏன் ரொம்ப வருத்தமா இருக்கார்?   போட்டி சட்டசபை

கனவு மெய்ப்பட்டது! இந்த வார விகடனில் எனது ஜோக்!

Image
ஏறக்குறைய எனது இருபது வருட கனவு இன்று பலித்துள்ளது. குறைந்தது என்னுடைய பன்னிரண்டாவது வயதில் இருந்து ஆனந்தவிகடன் வாசிக்கிறேன். அதில் வரும் படைப்புக்களை பார்த்து பிரமித்துப் போயிருக்கிறேன்! பின்னாலில் நான் கையெழுத்துப் பிரதி எழுத ஆரம்பித்த போது விகடனில் ஏதாவது ஒருவகையில் நம் பெயர் இடம்பெற வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன். ஆனால் சிறுவர் கதைகள் எழுதியமையால் விகடனுக்கு ஏதும் அனுப்பியது இல்லை! இடையில் எழுத்து வாசம் மறந்து போய் ஒரு கேப் வந்துவிட்டது. 2011 முதல் வலைப்பூவில் மீண்டும் எழுதினாலும் பத்திரிக்கைகளுக்கு எழுத முயற்சித்தது இல்லை! பாக்யா எஸ்.எஸ் பூங்கதிர் சார் ஊக்கத்தினால் பாக்யாவிற்கு சில ஜோக்ஸ் எழுதி அனுப்ப பிரசுரம் ஆனது. அதைத் தொடர்ந்து வாரமலரில் ஒன்றிரண்டு பிரசுரம் ஆனது. ஆனால் எனது கனவு ஆனந்தவிகடனில் எனது ஜோக் வரவேண்டும் என்பதுதான். கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து முயற்சித்து கொண்டு இருந்தேன். இதுவரை இருநூறுக்கும் அதிகமான ஜோக்ஸ் அனுப்பி இருப்பேன்! ஒன்று கூட பிரசுரம் ஆகாமல் இருந்தது. வாராவாரம் நமது ஜோக் கண்டிப்பாக வரும் என்று விகடன் வாங்கி புரட்டி பார்ப்பேன்

அவசர அவசரமாய் நொடிக்கதைகள்! நொடிக்கதைகள் பகுதி 16

Image
நொடிக்கதைகள்! பகுதி 16. அவசரம்! இன்னும் ஐந்து நிமிடம் தான் இருக்கிறது! பாடவேளை முடியப்போகிறது..! அவசர அவசரமாக அந்த கணக்கை போர்டில் போட்டு முடிக்கவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது. டீ எடுத்து வந்த சேட்டனிடம் புன்னகையுடன் ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு காப்பி பண்ணிக்கோங்க! என்று மாணவர்களிடம் சொன்னவர் டீ அருந்த சென்றார். அவசரம்!      சிவப்பு விளக்கு ஒளிர்வதை முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த வாகனங்கள் பச்சை ஒளிர்ந்ததும் சடுதியில் பறந்தன அவசரமாய்! அவசரம்!     தேர்தல் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக சென்ற வாகனங்கள் ஒதுங்கி வழிவிட்டன ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு! அவசரம்!    அவசரமாய் ரத்தம் தேவைப்படுவதாக வந்த பேஸ்புக், வாட்சப் தகவல்களைஅவசரமாய் ஷேர் செய்த பலரும் தங்கள் இரத்தத்தை ஷேர் செய்ய விரும்பவில்லை! அவசரம்:        சர்வதேசப் போட்டியில் வென்றவன் தம் ஜாதிக்காரனாக இருக்க வேண்டும் என்று அவசரமாய் தேடிக்கொண்டிருந்தார்கள் கூகுளில் அவசரம்!    அவசர அவசரமாய் பந்தல் போட்டு சாமி சிலை வைத்தார்கள் அவசரத்திற்கு உதவும் என்று ஆக்ரமித்த அரசு நிலத்தில்! அ

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1.கொஞ்சி கொஞ்சி அழைத்தன பறவைகள்! தாமதமான நிலவு! 2. மறைந்து போனது   கடமைக்குவியலில்   கற்பனை! 3. முத்தமிட்டும்   சத்தம் கேட்கவில்லை!   எறும்புகள்! 4. எவ்வளவு குடித்தாலும்    திருப்பித் தருகிறது பூமி!    தண்ணீர்! 5. தகிக்கும் கோடை!   தடுத்து நிறுத்தின    மரங்கள்! 6. உணர்வால்    உயிர் பெறுகின்றது   காற்று! 7. பகலும் இரவும்   கூடியதில் பிறந்தது   வெண்ணிலா!  8. துளைத்து எடுத்தும்    வலிக்கவில்லை!    விழிகள்! 9. வளர வளர   கேள்விகள் கூடுகிறது!   குழந்தை 10. தொலைதூர இசை!     கடத்தி வருகிறது!      காற்று! 11. எண்ணி சலித்தன பறவைகள்!     வானில் மின்னிய     நட்சத்திரங்கள்! 12  . பூத்தன      மணக்கவில்லை!       நட்சத்திரங்கள்! 13.  குளித்துக் கொண்டே இருந்தாலும்      குளிரவில்லை!     கடலில் சூரியன்!  14.  கறுத்த மேகங்கள்      விரட்டி அடித்தன காற்று!      குளிரவில்லை பூமி! 15. வீழ்வதை     ரசித்தது கூட்டம்     அருவி! 16.காதல்தூதுவன் ஆனது   காற்ற