தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!


1.கொஞ்சி கொஞ்சி
அழைத்தன பறவைகள்!
தாமதமான நிலவு!

2. மறைந்து போனது
  கடமைக்குவியலில்
  கற்பனை!

3. முத்தமிட்டும்
  சத்தம் கேட்கவில்லை!
  எறும்புகள்!

4. எவ்வளவு குடித்தாலும்
   திருப்பித் தருகிறது பூமி!
   தண்ணீர்!

5. தகிக்கும் கோடை!
  தடுத்து நிறுத்தின
   மரங்கள்!

6. உணர்வால்
   உயிர் பெறுகின்றது
  காற்று!

7. பகலும் இரவும்
  கூடியதில் பிறந்தது
  வெண்ணிலா!

 8. துளைத்து எடுத்தும்
   வலிக்கவில்லை!
   விழிகள்!

9. வளர வளர
  கேள்விகள் கூடுகிறது!
  குழந்தை

10. தொலைதூர இசை!
    கடத்தி வருகிறது!
     காற்று!

11. எண்ணி சலித்தன பறவைகள்!
    வானில் மின்னிய
    நட்சத்திரங்கள்!

12  . பூத்தன
     மணக்கவில்லை!
      நட்சத்திரங்கள்!

13.  குளித்துக் கொண்டே இருந்தாலும்
     குளிரவில்லை!
    கடலில் சூரியன்!

 14.  கறுத்த மேகங்கள்
     விரட்டி அடித்தன காற்று!
     குளிரவில்லை பூமி!

15. வீழ்வதை
    ரசித்தது கூட்டம்
    அருவி!

16.காதல்தூதுவன் ஆனது
  காற்று
 பூத்தன பூக்கள்!
 

1.   மரங்களின் பின்னால்
மறைந்திருக்கின்றன
ஊர்கள்!

2.    வெள்ளுடை தேவதை விஜயம்
   கண் சிமிட்டி களித்தன நட்சத்திரங்கள்!
    நிலா!

3.   துரத்தி வருகிறது!
தெரிந்தும் தொலைந்து போகிறோம்!
 காலம்!

4.   கொள்ளை போனது
நஷ்டப்படவில்லை!

குழந்தையின் சிரிப்பு!

Comments

  1. 16+4ம் ரசிக்க வைத்தது !
    #முத்தமிட்டும்
    சத்தம் கேட்கவில்லை!
    எறும்புகள்!#
    அந்த சத்தத்தை கேட்கனும்னு உங்களுக்கு நீண்ட ஆசை போலிருக்கு :)

    ReplyDelete
  2. தளிர்க் கவிதைகள் அனைத்தும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நன்றாக இருக்கின்றன அனைத்தும் சுரேஷ்

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை. பாராட்டுகள் சுரேஷ்.

    ReplyDelete
  5. வெண்ணிலா அருமை! வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2