தேன்சிட்டு மலர்ந்த கதை!
தேன்சிட்டு மலர்ந்த கதை ! வருடம் 1993. அப்போது ப்ளஸ் டூ முடித்து இருந்தேன் . சிறுவனிலிருந்து இளைஞனாக மாறும் காலம் . அதுவரை சிறுவர்களுக்கான இளந்தளிர் என்ற கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை நடத்திவந்தேன் . இளைஞனாக மாறும் காலம் வந்ததால் இளைஞர்களுக்கான கையெழுத்து பத்திரிக்கை ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது . தோழன் ஜெயேந்திர குமாருடன் ஆலோசித்தேன் . ஆரம்பிக்கலாம் . ஆனா தொடர்ந்து நடத்த முடியுமா ? ன்னு கேட்டான் . ஏனெனில் நான் மாதமிருமுறை இதழாக நடத்த வேண்டுமென்றேன் . அது முடியுமா ? என்றான் . முடியும் என்று சொன்னேன் . அப்போது நான் பி . காம் கரஸ்பாண்டெட் கோர்ஸ் சேர்ந்திருந்தேன் . அதனால் வீட்டில் வெட்டியாக நிறைய பொழுதை செலவழித்தேன் . அதனால் கொஞ்சம் உபயோகமாக பொழுதை கழிக்க உத்தேசித்து இதழ் தயாரிக்க முடிவெடுத்தேன் . 16 பக்கங்கள் . முன்று மூன்று பக்கங்களில் இரண்டு சிறுகதை . ஒரு இரண்டு பக்கத்திற்கு கவிதை . இரண்டு பக்கத்திற்கு ஜோக்ஸ் , கடைசிப்பக்கம் என்று ஒரு பக்கம் சிறு கட்டுரை . ஒரு மூன்று பக்கத்திற்குத் தொடர்கதை என்று முடிவு செய்தோம் . மீதமுள்ள பக்க...