Posts

Showing posts from November, 2017

குமுதத்தில் வெளியான எனது ஜோக்!

Image
போன வார குமுதத்தில் நீண்ட நாட்களுக்குப்பிறகு எனது ஜோக் வெளியானது. கொஞ்சம் சலித்து போன சமயத்தில் ஒரு தூண்டில் போட்டாற்போல மீண்டும் ஜோக் எழுத உற்சாகம்தொற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் முன்பு போல எழுத முடிவதில்லை. எனினும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் அல்லவா? தொடர்ந்து முயல்வோம்!  குமுதம் ஆசிரியர் குழுவினருக்கும் பதிவிட்டு வாழ்த்திய ஏந்தல் இளங்கோ சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி!

இந்த வாரத்தில் இந்துவில் வெளியான எனது பஞ்ச்கள்!

Image
தமிழ் இந்து நாளிதழில் இந்த வாரம் வெளியான எனது பஞ்ச்கள் கீழே! ஆதரவு நல்கும் இந்து குழுமத்திற்கும் ஊக்கப்படுத்தும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

இந்த வாரம் திங்களன்று கவிதை மணி இணைய தளத்தில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்! முகப்பு     ஸ்பெஷல்ஸ்     கவிதைமணி என் முதல் கனவு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  25th November 2017 03:52 PM   |    அ+ அ  அ-     |   ஒவ்வொரு நாளும் ஒர் கனவோடு விடிகிறது! ஒவ்வொன்றும் புதிது புதிதாய்! ஒளிப்படமாய் மனதில் ஓடினாலும் வெளிப்படையாய் சொல்ல மறக்கிறது! ஆழ்மனதில் புதைந்த நினைவுகள் கண் மூடி உறங்குகையில் கனவாக ஓடி மகிழ்விக்கின்றன! எல்லோருக்கும் ஓர் முதல் கனவிருக்கும்! எல்லோருக்கும் அது நினைவாவதில்லை! நடிக்க விரும்புபவனுக்கு ஹீரோ ஆவது முதல் கனவாயிருக்கும்! படிக்க விரும்புபவனுக்கு பாடத்தில் முதலிடம் வருவது முதல் கனவாயிருக்கும்! தொழிலில் சாதிக்கத் துடிப்பவனுக்கு தொழிலதிபர் ஆவது பெருங்கனவாயிருக்கும்! என் முதல் கனவு என்பதெல்லாம் எழுத்தறிவிக்கும் ஆசான் ஆவது! வகையாய் வாய்ப்புக்கள் தவறியபோது வருந்தினேன் கனவு கலைந்து!  முதல் கனவு  கலையலாம்  முடிவு வரை தொடரும் கனவுகள்  என்றாவது ஒருநாள்

தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள் வெளியாவது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்தவாரம் என் மகள்கள் பெயரிலும் இரு கவிதைகள் எழுதினேன். எனது ஒன்று என மூன்று கவிதைகள் பிரசுரம் ஆயின. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்! யாருமில்லாத மேடையில்: எஸ். வேதஜனனி By  கவிதைமணி   |   Published on :  19th November 2017 04:52 PM   |    அ+ அ  அ-     |   யாருமில்லாத மேடையில் அரங்கேறுகிறது வாழ்க்கை நாடகம்! நாளொரு காட்சிகள்! பொழுதொரு வசனங்கள்! இயக்கி வைக்கிறான் இறைவன்! நாடக மேடையில் விமர்சனம் உண்டு! நடக்கும் வாழ்க்கையிலும் விமர்சனம் உண்டு! நாடக மேடைக்கு பார்வையாளர்கள் உண்டு! வாழ்க்கை நாடகத்தில் பார்வையாளர் நாமே!  மேடை நாடகத்திற்கு கட்டணச்சீட்டு! வாழ்க்கை நாடகத்திற்கு பயணச்சீட்டு! நாளொன்று கழிகையில் செலாவணி ஆகிறது மேடைக்காட்சிகள்! நெடுந்தொடர் ஆயினும் நிறைவே பெறுவதில்லை வாழ்க்கை நாடகம்! யாருமில்லா மேடையில்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  19th November 2017 02:49 PM   |    அ+ அ  அ-     |   ரசிக்க யாருமில்லைதான்! ஆனாலும் அழகாய்

இந்து தமிழ் நாளிதழில் வெளியான முகப்பு பஞ்ச்

Image
இந்து தமிழ் நாளிதழில் நேற்று வெளியான பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் எனது கருத்து இடம்பெற்றுள்ளது. பதிவிட்ட பூங்கதிர் சாருக்கும் வாழ்த்துக்கள் நல்கிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!

Image
கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழில் நவம்பர் மாத இதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின. பிரசுரித்த ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழக எழுத்தாளர் குழுவில் பதிவிட்ட முத்து ஆனந்த் சாருக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்

பாவையர் மலர் இதழில் வெளியான எனது கவிதை!

Image
பாவையர் மலர்   நவம்பர் மாத  இதழில் எனது கவிதை பிரசுரமானது. பிரசுரித்த ஆசிரியர் திருமதி வான்மதி மேடம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் பகிர்ந்த தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

கொலுசு மின்னிதழில் வெளியான எனது ஹைக்கூக்கள்!

Image
நவம்பர் மாத கொலுசு மின்னிதழில் எனது சில ஹைக்கூக்கள் பிரசுரமாயின! பிரசுரம் செய்த கொலுசு மின்னிதழ் ஆசிரிய குழுவினர். வாழ்த்துக்கள் வழங்கிய தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்! இதே மின்னிதழில் எனது சிறுகதை ஒன்றும் பதிவானது. அது

தினமணி கவிதைமணியில் இந்தவாரம் வெளியான என் கவிதை!

தினமணி கவிதை மணியில் இந்தவாரம் வெளியான எனது கவிதை! தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு நல்கும் தினமணி குழுமத்தினருக்கும் எழுத ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலையக நண்பர்களுக்கும் அன்பின் நன்றிகள்! உன் குரல் கேட்டால்:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  12th November 2017 02:32 PM   |    அ+ அ  அ-     |   உன் குரல் கேட்கையில் பாடும் குயில்களும் பாட்டை நிறுத்தி சற்றே ஆவலுடன் செவிமடுக்கும்! உன் குரல் கேட்கையில் ஓடும் நதிகளும் ஒருநிமிடம் ஓசையின்றி நின்று போகும்! உன் குரல் கேட்கையில் செடியில் மொட்டுக்கள் மெல்ல இதழ்விரித்து புன் சிரிக்கும்! உன் குரல் கேட்கையில் ஆடும் மயிலினங்கள் மகிழ்ந்து மகிழ்நடனம் புரியும்! உன் குரல் கேட்கையில் வானில் ஓடும் முகிலினங்கள் குளிர்ந்து மழை பொழியும்! உன் குரல் கேட்கையில் பாடும் புல்லினங்கள் பரவசமாகி கானம் சேர்ந்திசைக்கும்! உன் குரல் கேட்கையில் பசுவின் மடியில் தானாய் பால் சுரக்கும்! உன் குரல் கேட்கையில் முரடனின் மனதில் கூட அருள் சுரக்கும்! ஒடுங்கும் முதுமை கூட உன் குரல் கேட்டால் ஓடி ஆ

மீண்டும் பாக்யாவில் ஜோக்ஸ்!

Image
சென்ற வார பாக்யாவில் எனது ஜோக்ஸ்கள் மூன்று பிரசுரம் ஆனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது நகைச்சுவைகள் பாக்யாவில் இடம்பெற்றதில் மகிழ்ச்சி! பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் நண்பர் எஸ்.எஸ். பூங்கதிர் சாருக்கும். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவில் இதை பதிவிட்டு வாழ்த்திய வேளாங்கண்ணி சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் மிக்க நன்றிகள்! கீழே ஜோக்ஸ் இந்து  தமிழ் நாளிதழிலும் போன வாரம் செவ்வாயன்று ஒரு முகப்பு பஞ்ச் இடம்பெற்றது. உடனே பகிரமுடியவில்லை! அது கீழே! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!

இன்றைய தினமணி கவிதை மணியில் எனது கவிதை!

இன்றைய தினமணி கவிதை மணி இணையதளக் கவிதைப் பக்கத்தில் வெளியான எனது கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து என்படைப்புக்களை வெளியிட்டு வரும் தினமணி குழுமத்திற்கு மிக்க நன்றி! கவிதையை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் வலையக நட்புக்களுக்கு மனமார்ந்த நன்றி! மேகத்தில் கரைந்த நிலா:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on :  04th November 2017 05:43 PM   |    அ+ அ  அ-     |   கிராமத்து இரவொன்றின் நீள்பொழுதில் தனியனாய் எனக்கு நீண்ட துணையாக வருகின்றது நிலா! அதன் மோனத்தில் வசீகரித்து மூழ்கையில் வதனத்தில் உதிக்கிறது ஓர் புன்னகை! நடுவானில் கம்பீரமாய் ஒளிவீச சுற்றிலும் மின்மினிகளாய் நட்சத்திரங்கள்! இரவின் கருமையை இரவின் தனிமையை அழகாக்கிய நிலவை ரசிக்கையில் ஆபத்தொன்று சூழ்ந்தது! கருமேகக் கூட்டமொன்று உருவாகி நிலவினை விழுங்க வேகமெடுத்தது! பதறிப்போனேன்! ஆனால் பதறவில்லை நிலா! மேகம் நெருங்க நெருங்க ஒளியிழந்தது பூமி! தன் காதலியை காக்க முடியாமல்! மேகம் சிறிது சிறிதாய் நிலவை விழுங்க நிமிடங்கள் நீண்டது! கருமேகத்தினுள் ஓளிவெள்ளம் பாய்ச்சி கரைந்து மறைந்த நிலா மெல்ல தலைகாட்டியது!

இன்றைய இந்து நாளிதழில் எனது பஞ்ச்!

Image
இன்று வெளியான இந்து தமிழ் நாளிதழ் பஞ்ச்சோந்தி பராக் பகுதியில் எனது பஞ்ச் இடம்பெற்றுள்ளது. முதல் தகவல் தந்த சிவகுமார் நடராஜன் சாருக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் தொடர்ந்து எனது படைப்புக்களை வெளியிட்டு வரும் இந்து தமிழ் நாளிதழ் குழுமத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! பஞ்ச் கீழே! தங்களின் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!