தினமணி கவிதைமணியில் இந்தவாரம் வெளியான என் கவிதை!

தினமணி கவிதை மணியில் இந்தவாரம் வெளியான எனது கவிதை! தொடர்ந்து வெளியிட்டு ஆதரவு நல்கும் தினமணி குழுமத்தினருக்கும் எழுத ஊக்கமளிக்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்தினருக்கும் வலையக நண்பர்களுக்கும் அன்பின் நன்றிகள்!


உன் குரல் கேட்டால்:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 12th November 2017 02:32 PM  |   அ+அ அ-   |  
உன் குரல் கேட்கையில்
பாடும் குயில்களும் பாட்டை நிறுத்தி
சற்றே ஆவலுடன் செவிமடுக்கும்!

உன் குரல் கேட்கையில்
ஓடும் நதிகளும் ஒருநிமிடம்
ஓசையின்றி நின்று போகும்!
உன் குரல் கேட்கையில்
செடியில் மொட்டுக்கள் மெல்ல
இதழ்விரித்து புன் சிரிக்கும்!
உன் குரல் கேட்கையில்
ஆடும் மயிலினங்கள் மகிழ்ந்து
மகிழ்நடனம் புரியும்!
உன் குரல் கேட்கையில்
வானில் ஓடும் முகிலினங்கள்
குளிர்ந்து மழை பொழியும்!
உன் குரல் கேட்கையில்
பாடும் புல்லினங்கள் பரவசமாகி
கானம் சேர்ந்திசைக்கும்!
உன் குரல் கேட்கையில் பசுவின்
மடியில் தானாய்
பால் சுரக்கும்!
உன் குரல் கேட்கையில்
முரடனின் மனதில் கூட
அருள் சுரக்கும்!
ஒடுங்கும் முதுமை கூட
உன் குரல் கேட்டால்
ஓடி ஆர்ப்பரித்து வரவேற்கும்!
ஓடி ஆடி அகம் மகிழச்செய்யும்
ஒப்பற்ற குழந்தையின் குரல்
கேட்டால்
பெற்றோர் மனம் புல்லரித்து ஆர்ப்பரிக்கும்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2