Posts

Showing posts from September, 2014

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! சிறகடித்தது பறக்கமுடியவில்லை! செடியில் இலை! கீழே விழுந்ததும் ஆசுவாசம்! நிழல்! வளரவளர குறைகின்றன கற்பனைகள்! குழந்தைகள்! பூத்தது ஆனாலும் பறிக்க முடியவில்லை! குழந்தையிடம் குறும்பு! ஒட்டி உறவாடினாலும் தட்டிவைத்தார்கள்! காலில் தூசு! இருபுறமும் நம்பிக்கை நடுவே கரை! அலை, மக்கள்! சிவந்த சூரியன்! கவிழ்ந்த பூமி! அந்திமாலை! ஓட்டம் எடுத்ததும் நகரத்துவங்கியது படகு! காற்று! கடத்தி வந்து காதில் போட்டது காற்று! இசை! ஓலமிட்டதை ஊர்க்கூடி ரசித்தது! கடல்! ஓசையின்றி சிரித்தன! ஒருநூறு மொட்டுக்கள்! நந்தியாவதனம்! மிதிபடவே வளர்க்கிறார்கள்! புல்வெளி! நட்டுப் பராமரித்தும் வளரவே இல்லை! மின்கம்பம்! பிடித்துக்கொண்டால் விடுவதேஇல்லை குழந்தைகளிடம் பிடிவாதம்! ஒரே பருக்கைதான்! நிறைந்துபோனது மனசு! குழந்தை ஊட்டிய சோறு! விழவைத்து முத்தம்! குழந்தைக்கு கொடுக்கிறாள்! பூமித்தாய்! கண் அயர்கையில் விழிக்க ஆரம்பிக்கின்றது நகரம்! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு கு

அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்!

Image
அம்மாவின் கைதும் அல்லக்கைகளில் ஆர்பாட்டமும்! மைக்கேல் டி குன்ஹா இந்த பெயரை இனி அம்மா கனவிலும் கூட மறக்கமாட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் எல்லோருமே சொல்லிக் கொண்டிருந்தது அம்மாவுக்கு பெரிய தண்டனை கிடைக்காது. அப்படியே தண்டணை என்றாலும் சிறிய அளவில்தான் இருக்கும். அல்லது அபராதம் மட்டுமே இருக்கும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதற்கேற்றார் போலவே வழக்கின் தீர்ப்பும் 22 ம் தேதியில் இருந்து 27ம் தேதிக்கு மாற்றப்பட்டது.    சில அதிமுக விசுவாசிகள் அம்மா விடுதலை என்றெல்லாம் பேனர் அடித்து ஒட்டி கொண்டாடினார்கள். பல லட்சக் கணக்கில் பட்டாசுகள் வாங்கிவரப்பட்டன விடுதலையானதும் கொண்டாடி மகிழ. இவையெல்லாம் வெறும் கனவாகிப் போய்விட்டது.   பதினொறு மணி தீர்ப்பு தள்ளிப்போய் மூன்று மணி அளவில் குற்றவாளி என்று அறிவித்து பின்னர் 4 மணிக்குமேல்தான் தண்டணை அளிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் தண்டணை, 100 கோடி ரூபாய் அபராதம். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட போதே அம்மாவின் கண்கள் கலங்கி விட்டன. சமாளித்து கைக்குட்டையினால் துடைத்துக் கொண்டார். இரண்டு வருடங்களுக்குள் தண்டனை இருக்கும் என்று எதிர்பார்ப்பி

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 17

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 17 எல்லாத்துக்கும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்னு பொலம்பிக்கிட்டு இருக்கியே என்ன விஷயம்? கல்யாணமாகி வந்தா மாமியார் கூட சண்டை போடலாம்னு பார்த்தா நான் எது சொன்னாலும் சரின்னு ஒத்துக்கிறாங்க! சண்டை போடுற மாமியார் கிடைக்கவும் ஒரு அதிர்ஷ்டம் வேணும்னு புலம்பிக்கிட்டு இருக்கேன்! மண்டபத்துல புதுசா நாலு ஜோடிகளை சேர்த்துவச்சேன்! அடடே! கல்யாண மண்டபத்துலேயே இன்னும் நாலு கல்யாணமா? ஊகும்! புதுசா நாலு ஜோடி செருப்புக்களை  சேர்த்துவச்சேன்னு சொல்ல வந்தேன்! தலைவர் பேரைக் கேட்டாலே ஜட்ஜ் கூட மிரண்டு போயிருவாரு! அவ்வளவு செல்வாக்கா? நீ வேற அவ்வளவு வாய்தா வாங்கி வச்சிருக்காரு! ஃப்ரி எஸ்.எம்.எஸ் பண்ணி ஒரு பொண்ணை லவ்விக்கிட்டு இருந்தியே இப்ப என்ன ஆச்சு? ஃப்ரி சிம் கொடுக்கிற ஆள் சிக்கினதும் அந்த பொண்ணு கழண்டுக்கிச்சு! மன்னருக்கு உடலெல்லாம் காதுகள் என்று எவ்வாறு சொல்கிறாய்?     எதிரி மன்னன் அவன் நாட்டில் முரசு கொட்டுவதைக் கேட்டு இப்படி கால்கள் நடுங்குகிறதே! மன்னா! மன்னா! நட்பு பாராட்டி நூறு புறாக்களை அனுப்பிய பக்கத்

தோத்திரம் செய்பவர்களுக்கு ஒரு தோத்திரம்!

Image
தோத்திரம் செய்பவர்களுக்கு ஒரு தோத்திரம்! நான் இந்து மதத்தை சேர்ந்த ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் பிற மதங்களை இதுவரை தூஷித்தது இல்லை! நம் மதம் போல் அவர்களுக்கும் அவர்களுடைய மதம் உயர்ந்தது என்று நினைத்து இருந்தேன். எனக்கு இஸ்லாமிய கிறித்தவ, ஜைன மத நண்பர்களும் படிக்கும் காலத்திலும் பின்னரும் உண்டு.     ஒரு லிமிட் தாண்டி யாரும் யாருடைய மதத்தையும் விமரிசித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் எங்கள் ஊர் அருகில் இருக்கும் ஒரு தர்காவில் ஆண்டுக்கொரு முறை நடக்கும் திருவிழாவிற்கு ஒரு பாய் எங்கள் வீட்டிற்கு வந்து நன்கொடை வாங்கிச் செல்வார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொன்னேரியில் பாய் ஒருவர் வைத்திருந்த பெட்டிக்கடையில்தான் நியுஸ்பேப்பர் வாங்கிக் கொண்டிருந்தோம். இப்படி இஸ்லாமியர்களோடு எந்த முரண்பாடும் ஏற்பட்டது இல்லை.    கிறித்தவர்களும் கூட நிறைய மிஷினரிகள் அமைத்து மருத்துவ சேவை செய்து வந்தார்கள். சோழவரம் அருகே ரெய்னி ஆஸ்பிடல், அழிஞ்சிவாக்கம் அருகே ஒரு மருத்துவமனை என்று குறைந்த கட்டணம் அல்லது இலவச மருத்துவம் செய்து வந்ததால் அவர்கள் மீதும் எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது

மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை!

Image
மங்களங்கள் நல்கும் மஹாளய அமாவாசை! புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படும். இதற்கு முன் வரும் கிருஷ்ண பட்ச  (தேய்பிறை) பிரதமை முதல் மஹாளய அமாவாசைக்கு பின் வரும் சுக்லபட்ச பிரதமை வரை மஹாளய பட்சம் எனப்படும். இந்த பதினைந்து தினங்களில் நமது முன்னோர்களை நினைத்து தர்ப்பணங்கள் செய்து தானங்கள் செய்து பின்னர் உணவருந்த வேண்டும். இந்த நாட்களில் முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணங்களே முக்கியத்துவம் பெறுவதால் மங்கலகாரியங்கள் செய்தல் கூடாது.  சீமந்தம், வளைகாப்பு, நாமகரணம் போன்றவை விதிவிலக்குகள் ஆகும்.      மஹாளய பட்சத்தில் மஹாபரணி, அஷ்டமி, ஏகாதசி போன்ற திதிகளில் தர்ப்பணம் செய்வது மிகுந்த பலனைத் தரும். மேலும் பிதுர் லோகத்தில் வாழும் பிதுர்கள் இந்த பதினைந்து தினங்கள் நம்மோடு நம் இல்லத்தில் வந்து தங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருமணம் தள்ளிப்போதல், குழந்தைப்பேறின்மை, சரியான வேலைவாய்ப்பு இல்லாமை போன்றவைகளுக்கு பிதுர் தோஷமே காரணம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.    வாழும் காலத்தில் பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் இறந்த பின்னரும் அவர்களது திதிகள

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! மூடி வைத்த வீடு! குடிபுகுந்தது! ஒட்டடை! கும்மிருட்டு கூட்டி வந்தது! பயம்! தொலைவில் பூத்தன! வாசமில்லா மலர்கள்! நட்சத்திரங்கள்! தூண்டில் போடாமலே சிக்கின மீன்கள்! நட்சத்திரங்கள்! தாகம் தீர்த்தவனை வெட்டிப்போட்டார்கள்! இளநீர்! சிதறும் ஒளியில் சீறிப்பாய்ந்தன வாகனங்கள்! மழலையிடம் பூக்கிறது மாசில்லாத புன்னகை! குழிவிழுந்ததும் குதூகலம்! குழந்தையின் சிரிப்பு! தும்பிகள் அழைத்ததும் தூறல் ஆரம்பித்தது மழை! சிறைபிடித்தது விலங்கிடவில்லை! குழந்தையின் சிரிப்பு! ரசமில்லை! ரசிக்க முடியவில்லை! கண்ணாடியில் முகம்! முரட்டுத் தழுவல்! சிக்கிக் கொண்டது கொடி! காற்று! இரவு முழுதும் சப்தம்! கேட்க ஆளில்லை! சில்வண்டுகள்! சேற்றில் பூத்தன இறகுள்ள பூக்கள்! கொக்குகள்! வண்டுகள் இசையில் வளைந்து கொடுத்தன மலர்கள்! கள்வனே ஆனாலும் கடவுளும் அவனே! காற்று! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!

கத்தரிக்காய் மூளி! பாப்பா மலர்!

Image
கத்தரிக்காய் மூளி! பாப்பா மலர்! சயனாவரம் என்ற கிராமத்தில் மாடசாமி என்பவன் வசித்துவந்தான். அவனது மனைவி மேகலா. மாடசாமி ஓர் அப்பாவி. யார் எதை சொன்னாலும் அப்படியே நம்பிவிடுவான். சூது வாது தெரியாதவன். தாய் சொல்லை தட்டாதவன். அவனுடைய தாயான மகாதேவி மருமகள் மேகலாவை படாத பாடு படுத்துவாள்.      உட்கார்ந்தால் குற்றம், நிமிர்ந்தால் குற்றம், படுத்தால் குற்றம் என்று குற்றம் கண்டுபிடித்து பெயர்வாங்கும் புலவர்கள் வகையைச் சேர்ந்தவள் மகாதேவி. மேகலாவோ இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் குடும்ப வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். ஆனாலும் மகாதேவிக்கு ஏனோ மேகலாவை பிடிக்கவில்லை. சதா திட்டிக்கொண்டே இருப்பாள்.     சமையலுக்குக் கூட காய்கறிகளை எண்ணித்தருவாள். சமையல் முடிந்ததும் எண்ணிப் பார்ப்பாள். உருளைக்கிழங்கு, வாழைக்காய், பூண்டு என்று அனைத்திற்கும் ஒரு கணக்கு வைத்திருப்பாள். அதற்கு குறைந்தால் மருமகளை பாடித் தீர்த்துவிடுவாள். இத்தனைக்கும் வக்கணையாக சமைப்பது மருமகள். அதை தானும் தன் மகனும் மட்டுமே தின்றுவிட்டு வெறும் பழைய சோறை மருமகளுக்குப் போடுவாள் மகாதேவி. புளி, மிளகாய் எல்லாம் சாப்பிட்டால் உடம