தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

சிறகடித்தது
பறக்கமுடியவில்லை!
செடியில் இலை!

கீழே விழுந்ததும்
ஆசுவாசம்!
நிழல்!

வளரவளர குறைகின்றன
கற்பனைகள்!
குழந்தைகள்!


பூத்தது ஆனாலும்
பறிக்க முடியவில்லை!
குழந்தையிடம் குறும்பு!

ஒட்டி உறவாடினாலும்
தட்டிவைத்தார்கள்!
காலில் தூசு!

இருபுறமும் நம்பிக்கை
நடுவே கரை!
அலை, மக்கள்!

சிவந்த சூரியன்!
கவிழ்ந்த பூமி!
அந்திமாலை!

ஓட்டம் எடுத்ததும்
நகரத்துவங்கியது படகு!
காற்று!

கடத்தி வந்து
காதில் போட்டது காற்று!
இசை!

ஓலமிட்டதை
ஊர்க்கூடி ரசித்தது!
கடல்!

ஓசையின்றி சிரித்தன!
ஒருநூறு மொட்டுக்கள்!
நந்தியாவதனம்!


மிதிபடவே
வளர்க்கிறார்கள்!
புல்வெளி!

நட்டுப் பராமரித்தும்
வளரவே இல்லை!
மின்கம்பம்!

பிடித்துக்கொண்டால்
விடுவதேஇல்லை குழந்தைகளிடம்
பிடிவாதம்!

ஒரே பருக்கைதான்!
நிறைந்துபோனது மனசு!
குழந்தை ஊட்டிய சோறு!

விழவைத்து முத்தம்!
குழந்தைக்கு கொடுக்கிறாள்!
பூமித்தாய்!

கண் அயர்கையில்
விழிக்க ஆரம்பிக்கின்றது
நகரம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

 1. //ஒரே பருக்கைதான்!
  நிறைந்துபோனது மனசு!
  குழந்தை ஊட்டிய சோறு!///
  படிக்கும்போரே மனதும் நிறைந்து போனது நண்பரே
  நன்றி

  ReplyDelete
 2. நிறைவான கவிதை நண்பரே,,, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை சார், அதிலும் இசை,குழந்தை, இலை , மின்கம்பம் போன்றவை சூப்பர். குழந்தைகள் குறித்து எழுதியவை அனைத்தும் பென்டாஸ்டிக் சார்...

  ReplyDelete
 4. அத்தனையும் இரசிக்க வைத்தன!
  அதிலும் ஒரு பருக்கைச் சோற்றின் ருசி பிரமாதம்!

  வாழ்த்துக்கள் சகோதரரே!

  ReplyDelete
 5. ஆகா
  அழகான வரிகள்
  தொடருங்கள்

  ReplyDelete
 6. ///இருபுறமும் நம்பிக்கை
  நடுவே கரை!
  அலை, மக்கள்!///

  ///ஒரே பருக்கைதான்!
  நிறைந்துபோனது மனசு!
  குழந்தை ஊட்டிய சோறு!///

  இந்த இரண்டும் அசத்தல்

  ReplyDelete
 7. ஆஹா! அருமை எல்லாமே! இன்னும் எவ்வளவு ஸ்டாக் வைச்சுருக்கீங்க?!!!

  ReplyDelete
 8. நட்டுப் பராமரித்தும்
  வளரவே இல்லை!
  மின்கம்பம்!

  இது மிக அருமை சுரேஷ்.

  ReplyDelete
 9. அன்புள்ள திரு தளிர் அவர்களுக்கு,
  அனைத்துக் கவிதைகளும் மிக அருமை

  விழவைத்து முத்தம்-
  குழந்தைக்கு கொடுக்கிறாள்...
  பூமித்தாள்...
  -இது போல எல்லா வரிகளும் அருமை.
  வாழ்த்துகள்.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  manavaijamestamilpandit.blogspot.in

  ReplyDelete
 10. கடத்தி வந்து
  காதில் போட்டது காற்று!
  இசை!//
  அருமை.

  ReplyDelete
 11. அனைத்தும் அருமை சுரேஷ். ரசித்தேன்.

  ReplyDelete
 12. நறுக்கான கவிதைகள். மனதில் நிற்கின்றன. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அனைத்துமே அருமை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2