Posts

Showing posts with the label பகிர்வு

இரண்டு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டி! படித்ததும் பிடித்ததும் முகநூல் பகிர்வு

Image
  எத்தன இட்லினு சாப்பிட்டவங்கதான் கணக்கு சொல்வாங்க! நெகிழவைக்கும் 2 ரூபாய் இட்லிக்கடை பாட்டி!! புதுக்கோட்டை, காந்தி நகரில் இருக்கிறது தனம் பாட்டியின் குடிசை வீடு. 2 அடி குனிந்து உள்ளே சென்றால், சிறிய குடிசைக்குள்ளே விறகு அடுப்பில் சுடச்சுட இட்லி தயாராகிக் கொண்டிருக்கிறது. நாற்காலி, மேசை எதுவும் இல்லை. திண்ணையில், பாட்டியின் அருகே அமர்ந்து பலர் பசியாறிக் கொண்டிருக்கின்றனர். ஒரு இட்லி ரூ.10க்கு விற்கும் இன்றைய காலகட்டத்தில், ஒரு இட்லி ரூ.2க்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார் தனம் பாட்டி. 10 ரூபாயிலேயே பலருக்கும் வயிறு நிறைந்து போகிறது. மாவு அரைப்பது, சட்னி, சாம்பார், சுண்டல் வைப்பது, இட்லி அவிப்பது வரையிலும் எல்லாமும் தனம் பாட்டி தான். 84 வயதிலும் சுறுசுறுப்புடன் பம்பரமாகச் சுழன்று வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் பேச்சுக் கொடுத்தோம். நான் பொறந்து, வளர்ந்தது எல்லாம் அறந்தாங்கி பக்கத்துல இருக்க சிதம்பரவிடுதிங்கிற சின்ன கிராமம். வீட்டுக்காரருக்கு ஊரு பட்டுக்கோட்டை. அவரு புதுக்கோட்டையில சின்னதா ஒரு டீக்கடை வச்சிருந்தாரு. 1960-ல எங்களுக்குக் கல்யாணம் நடந்துச்சு. கல்யாணம் முடிச்ச கையோ...

படித்ததில் பிடித்தது! முகநூல் பகிர்வு

Image
  ரஜினியின் மாஸ்டர் பீஸ் ‘முள்ளும் மலரும்’... ஆனால், கமல்ஹாசன் இல்லையென்றால் இந்தப் படமே இல்லை... ஏன்? சுரேஷ் கண்ணன் தமிழ் திரையுலகில் தரமான சினிமாக்களைத் தர வேண்டும் என்கிற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் தன்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடி கமலுக்கு இருந்தது. பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டால்தான் தான் விரும்பிய சினிமாக்களுக்கான நிதியை சேகரிக்க முடியும் என்கிற ஒரு காரணம் இருந்தாலும் இன்னொரு முக்கிய காரணம் ரஜினி. ஆம், ரஜினியின் வணிக மதிப்பும் வெற்றியும் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே இருந்தது. ரஜினி - கமல் ஆகிய இருவருக்கும் உள்ள நட்பு ஆழமானது என்றாலும் தன்னுடைய சம காலத்து போட்டியாளரான ரஜினிக்கு ஈடுகொடுக்கும் வகையில் வணிகத் திரைப்படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் கமலுக்கு இருந்தது. ‘’பைரவியோட வீடு இதானே?’' - என்று கேட்டைத் திறந்தபடி கேட்டுக் கொண்டே ரஜினி வருவதுதான் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான காட்சி. (‘அபூர்வ ராகங்கள்’). 'சுருதி பேதம்' என்கிற எதிர்மறையான பாத்திர அறிமுகத்துடன் வரும் அந்த நபர்தான் பின்ன...

வார மாத இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ்!

Image
 வலைப்பூவில் எழுதுவதோடு பத்திரிகைகளுக்கும் அவ்வப்போது என் நகைச்சுவை துணுக்குகளை அனுப்புவேன். அவை அவ்வப்போது குமுதம், விகடன், மின்மினி, அனிச்சம், கதிர்ஸ் போன்ற இதழ்களில் பிரசுரம் ஆகி மகிழ்ச்சியை கொடுக்கும்.  சிலவருடங்கள் முன் பாக்யா இதழில் தொடர்ந்து என் நகைச்சுவை துணுக்குகள் பிரசுரமாகி வந்தது.   இப்போது அச்சிதழ்கள் குறைந்துவிட்டது. அதே சமயம் எழுத்தாளர்கள் பெருகிவிட்டார்கள். எனவே அச்சிதழ்களில் வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கிறது. மிகுந்த போட்டியினூடே ஜெயித்து பிரசுரம் காண்பது பெருமகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.   கீழே அச்சிதழ் மற்றும் மின் இதழ்களில் பிரசுரமான என் ஜோக்ஸ் குமுதம்  23-11-22  குமுதம் 28-9 22 குமுதம் 30-11-22  குமுதம் 23-11-22 குமுதம்  23-11-22 ஆனந்த விகடன் 16-12-22 மின்மினி டிசம்பர் 2022 அனிச்சம் மே 23 கதிர்ஸ்- ஆகஸ்ட் 23 ஆனந்த விகடன். ஆகஸ்ட் 9’23

அள்ளிக்கொடுத்த அப்பள வியாபாரி! படித்ததில் பிடித்தது! பகிர்வு

Image
  அரசு பள்ளிக்கு ரூ.1.81 கோடி அள்ளிக் கொடுத்த அப்பள வியாபாரி மதுரையைச் சேர்ந்த அப்பள வியாபாரி ஒருவர். மாநகராட்சி பள்ளிகளுக்கான கட்டிடங்களை கட்டித் தர ரூ.1.81 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார். மதுரை தத்தனேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (86). சொந்தமாக மோர்மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்கிறார். 2018-ம் ஆண்டு மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பறைகள், இறை வணக்கக் கூட்ட அரங்கம், இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் ஆகியவற்றை ரூ.1.10 கோடியில் கட்டிக் கொடுத்துள்ளார். அண்மையில் ரூ.71 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவுக்கூடம் கழிப்பறைகளை அமைத்து கொடுத்துள்ளார். கஜா புயலின்போது பாதிக்கப்பட் மக்களை நேரில் சந்தித்து ரூ.10 லட்சம் செலவில் டிபன் பாக்ஸ், தட்டு, அப்பளம், வடகம், அரிசி கொடுத்து வந்தார். ஊருக்கு மட்டும் இப்படி உதவுவதோடு நிற்காமல், தன்னிடம் பணிபுரியும் 40 ஊழியர்களையும் மனநிறைவாக வைத்துள்ளார். ஒருமுறை ஊழியர்களை ஹைதராபாத்துக்கு விமானத்தில் சுற்றுலா அழைத்துச் சென்று வந்தார். தற்போது ஊழ...

கசப்பின் கனிகள் . படித்ததில் பிடித்தது!

Image
  கசப்பின் கனிகள் அம்மாவின் வாழ்க்கையை நேற்றிரவு லேசாகத் தொகுத்துக் கொள்ள முயற்சி செய்தேன். நான் அம்மாவுடன் மிக நெருக்கமாக இருந்தேன் என்று சொன்னால் அது ஒரு பொய்யாக இருக்கும். அம்மா இயல்பாகவே கசப்பு நிறைந்த ஒரு சிடுசிடுப்பான பெண். பொதுவாகவே நெல்லை பெண்கள் ரத்த சோகையினால் பீடிக்கப்பட்டவர்கள். அவர்களது சிடுசிடுப்புக்கு அது ஒரு காரணம். அம்மா திருநீற்றை, ஊறவைத்த அரிசியைத் தின்பதைப் பார்த்திருக்கிறேன். அவள் அடிக்கடி குடித்த காப்பியும் அவளை அவ்வாறு ஒரு எரிச்சல் நிறைந்த மனுஷியாக வைத்திருக்கலாம். இந்தக் காரணங்கள் தாண்டி அவளுக்கு அப்பாவின் குடும்பத்தாருடன் கடும் ஒவ்வாமை இருந்தது. ஜெயமோகன் எங்கோ இந்திய குடும்ப அமைப்புதான் ஆண் பெண்களிடையே குறைந்த அபாயம் கொண்ட ஒரு ஏற்பாடு என்று சொல்லியிருக்கிற நினைவு. ஆனால் எங்கள் அனுபவம் வேறு மாதிரி இருந்தது. அம்மா அப்பா ஒரு ஏமாளி என்று நினைத்தாள். இன்றும் கணவனை அப்படி நினைக்காத இந்தியப் பெண்கள் குறைவு. அப்பாவை அவள் வாழ் நாள் முழுக்கத் 'திருத்தி எடுக்க' முயன்று கொண்டிருந்தாள். இந்தியக் குடும்பங்களில் மட்டுமல்ல ருஷ்யக் குடும்பங்களிலும் அப்படித்தான் என்ப...

படித்ததில் பிடித்தது- பகிர்வு!

Image
    அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரை பார்த்து வணங்கினான். தன்னுடைய ஹீக்காவில் மெய் மறந்திருந்த அக்பர் தன் சுய நினைவுக்கு திரும்பியவனாக அப்துல்லை உட்காரும்படி சைகை செய்தான். அப்துல் தனக்கெதிரே அமர்ந்திருந்த அக்பரை ஒரு முறை உற்று பார்த்தான்.அம்மை வடுக்கள் நிரம்ப அதே நேரத்தில் கவர்ச்சி நிறைந்த அந்த முகத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறான்.இப்போது அந்த முகத்தில் சோகமும் வருத்தமும் இழையோடிக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான். “சொல்லுங்கள் சுல்தான்! என்னை அழைத்த காரணம்...?" அப்துல்லின் குரல் மாளிகை சுவர்களில் எதிரொலிக்கிறது. “ஒரு படையெடுப்பை நிகழ்த்த போகிறேன் அப்துல். அதற்கு நீ தலைமை தாங்க வேண்டும்." அக்பரின் குரல் சன்னமாக ஒலிக்கிறது. “கட்டளையிடுங்கள்.வெற்றிகனியை பறித்து வந்து காலடியில் சமர்ப்பிக்கிறேன்!" அக்பரின் முகத்தில் ஒரு ஏளன புன்னகை ஓடியது. “ராஜபுதனத்தின் மேவார் ராஜ்ஜியம் நீ வெல்ல வேண்டியது.கொல்ல வேண்டியது ராணா பிரதாப் சிங்கை..." கம்பீரமாக ஒலித்த அக்பரின் குரலால் அப்துல்லின் முகத்தில் பீதி தாண்டவ...