பசி!
“ இதெல்லாம் ஒரு பொழப்பா ?” என்று யாரும் எங்களை கேள்விகேட்கப்போவதில்லைதான் ! ஆனாலும் எங்கள் பொழப்பை நினைக்கையில் எங்களுக்கே வெட்கமாத்தான் இருக்கிறது !” ” யாரும் எங்களை வரவேற்று பூச்செண்டு கொடுக்காவிட்டால் கூடப் பரவாயில்லை ! முறைக்காமலும் துரத்தி அடிக்காமலும் இருந்தால் போதும் எங்கள் வேலையை சத்தம் போடாமல் .. அச்சச்சோ அதுமட்டும் முடியாது ! சத்தம் போட்டு முடித்துவிட்டுச் சென்று விடுவோம் .” முன் வாசல் வழியாக எங்களை யாரும் அனுமதிப்பது இல்லை ! எப்போதும் பின் வாசல்தான் ! அதனால் எங்கள் வழி தனிவழிதான் ! ஆனால் தனி ஆளாய் சென்றால் எங்கள் வேலையை யாரும் கவனிக்கக் கூட மாட்டார்கள் ! அவர்கள் பாட்டுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டிருப்பார்கள் . என்னடா ஒரு ஜீவன் இவ்வளவோ கஷ்டப்படுகிறதே ! குடிக்க ஒரு டம்ளர் ஜூஸோ பாலோ கொடுப்போம் போனால் போகட்டும் என்று எவரும் சிந்தித்து பார்ப்பதே கிடையாது . எல்லோரும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக எங்கே அமைதியாக ? “ ஹோ ” வென்று அரட்டை அடித்துக் கொண்டிருப