பதிவர் சந்திப்புக்கு ஏன் போக வேண்டும்?
பதிவர் சந்திப்புக்கு ஏன் போக வேண்டும்? தமிழ் வலைப்பதிவர்களின் இரண்டாம் ஆண்டு சந்திப்பும் பிரபல பதிவர்களின் புத்தக வெளியீடும் வரும் ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற உள்ளது. பதிவர் சந்திப்பு குறித்து நிறைய பேர் நிறையவும் நிறைவாகவும் எழுதி விட்டார்கள். நேற்று கூட மதுரைத் தமிழன் அவரது பாணியில் சிறப்பாக எழுதி அசத்தி விட்டார். சென்ற வருடம் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை! இந்த வருடமும் உறுதியாக கலந்து கொள்வேன் என்று சொல்வதற்கு இல்லை! இருந்த போதும் பதிவர் சந்திப்பு குறித்து பதிவு வெளியிட ஆசை! ஆனால் எனது கணிணி பழுது அடைந்ததாலும் பணி சுமையினாலும் உடனடியாக பதிவு வெளியிட வில்லை! இதோ இரண்டு நாள்கள்தான் உள்ளன ஏதாவது பதிவிடா விட்டால் எப்படி? பதிவர் சந்திப்புக்கு எதுவும் உடலுழைப்புதான் செய்ய வில்லை! செய்தியை ஒரு நாலு பேருக்காவது பகிர வேண்டாமா? அதனால்தான் இந்த பதிவு. முதலில் இந்த வலைபதிவர் சந்திப்பை இரண்டாவது ஆண்டாக வெற்றிகரமாக நடத்தும் குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். வலைபதிவர்கள் வலையிலும் முகநூலிலும், டிவிட்டர் போன்றவற்றிலும் எண்ணற்றோர் இருப்பினும் அவர்கள் ஒன்றாக குழுமுவது என