காதல் அரங்கேற்றம்!
சார்! எங்கப்பா எங்க காதலை
பிரிக்கப் பார்க்கிறாரு! நீங்கதான் எங்களை எப்படியாவது சேர்த்து வைக்கணும்! என்று சென்னை
போலீஸ் கமிஷனர் அலுவலகம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்த பகல் பதினோறு மணி வேளையில் வந்து
நின்ற அந்த இளம் ஜோடிகளை பார்த்து முகம் சுறுக்கினார் கமிஷனர் வெங்கட்.
யாரும்மா நீங்க? இப்படி திடீர்னு வந்து கம்ப்ளைண்ட்
பண்றீங்க?
இதற்குள் பக்கத்தில் இருந்த
இன்ஸ்பெக்டர் கமிஷனர் காதில் கிசுகிசுத்தார் சார்! இவங்க ஆக்டர் கிஷோர்குமார் பொண்ணு!
இதற்குள் வெளியே எப்படியோ மோப்பம் பிடித்து மீடியாக்கள்
திரண்டுவிட்டது.
இவனுங்களுக்கு இதுக்குள்ள தகவல் போயிருச்சா? ஸ்..
அப்பா! என்று தலையில் கை வைத்துக் கொண்டார். ம்.. சொல்லும்மா!
சார் என் பேரு மாலினி! ஆக்டர் கிஷோர் குமாரோட டாட்டர்!
இவர் மனோஜ், எங்க வீட்டு கார் டிரைவர்! நாங்க ரெண்டு பேரும் மூணு வருசமா காதலிக்கிறோம்!
மூணு வருசமா ஒத்துக்கிட்ட எங்க அப்பா இப்ப எங்க காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
இவரை கொன்னுடுவேன்னு ரவுடி வைச்சி மிரட்டரார்! என்னை வீட்டில அடைச்சி வச்சி டார்ச்சர்
பண்றார்!
சார்! நான் ஒரு ஐந்து வருசமா இவங்க வீட்டுல
கார் டிரைவரா இருக்கேன்! நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்! முதல்ல எங்க காதலுக்கு
ஒத்துக்கிட்ட இவங்கப்பா இப்ப அடியாளுங்களை வைச்சி என்னை மிரட்டறார் சார்! ஒழுங்கா என்
பொண்ணு பின்னால சுத்தறதை விட்டுட்டு வெளியே எங்கனா போயிடு உனக்கு எத்தனை லட்சங்கள்
வேணும்னு பேரம் பேசினாரு! நான் மசியலை! அதனால என்னை கொன்னு போட்டுருவேன்னு நேத்து ஒரு
ரெண்டு மூணு பேரோட வந்து மிரட்டிட்டு போயிருக்காரு!
சரி! ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க! விசாரிப்போம்!
ஏம்மா! நீ மேஜர் தானே!
எஸ் சார்! ஐ கம்ப்ளீட்டன் எய்ட்டீன்!
இதுக்கு மட்டும் உண்மையான வயசை சொல்லுங்க! முணுமுணுத்த
கமிஷனர் மனோஜை சைகையால் அழைத்து
தனியாக கூட்டிச்சென்றார். எப்படா கொழுத்த
பட்சி சிக்கும்னே அலையறீங்க! என்றார்
சார்! மரியாதையா பேசுங்க! நான் அப்படிப்பட்டவன்
இல்லை! அப்படி இருந்தா இங்க கம்ப்ளைண்ட் பண்ண வரமாட்டேன்! இந்நேரம் கல்யாணம் முடிச்சிருப்பேன்!
கூல்டவுண் பாய்! அந்த பொண்ணை பார்த்தா அப்பாவியா
தெரியுது! அதுக்கு இப்பத்தான் பதினெட்டு முடிஞ்சிருக்கு! உனக்கு எப்படியும் 30க்கு
மேல இருக்கும் போல தெரியுது!
வயசை பார்க்காதீங்க சார்! மனசை பாருங்க!
இந்த டயலாக் எல்லாம் சினிமாவுக்குதான் லாயக்குப்படும்
வாழ்க்கைக்கு ஒண்னும் உதவாது! இப்ப அரைக்கிழவனான நீ இன்னும் பத்து வருசத்துல முழு கிழவனா
ஆயிருவே! அப்ப உன் பொண்டாட்டி இளமையாத்தான் இருப்பா! அப்ப வரும் பிரச்சனை! கமிஷனர்
நக்கலாக பேசினார்.
இதற்குள் மாலினி கம்ப்ளைண்ட் எழுதி முடித்திருந்தாள்.
வெளியே மீடியாக்களுக்கு தீனி காத்திருந்தது.
காதல் இளவரசன் கிஷோர் குமார் தன் மகளின் காதலுக்கு எதிர்ப்பு! பரபரப்பாக பத்திரிக்கைகள் எழுதி தள்ள பேஸ் புக்
போராளிகள் கையில் இந்த மேட்டர் சிக்கி சின்னாபின்ன பட்டது.
அவன் நேர்மையானவன் இல்லை! அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி
இரண்டு குழந்தைகள் இருக்கின்றன! என் மகளை ஏமாற்றுகிறான் என்று கிஷோர்குமார் அறிக்கை
விட்டார். என் மகளை மீட்டுத்தாருங்கள் என்று
கமிஷனரிடம் முறையிட்டார்.
இரு தரப்பையும் போலீசார் விசாரணை செய்தனர். அது
ஒரு பதினைந்து நாட்களுக்கு ஓடியது.
இந்த சந்தர்ப்பத்தில் ரிலிஸ் ஆன கிஷோர் குமாரின்
புதிய படம் செம வசூல் செய்தது! பாக்ஸ் ஆபீஸ்
ஹிட் அடித்தது.
என்னப்பா!
படம் செம வசூலா! எப்படி என் ஐடியா!
மனோஜும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தான் மா! இல்லேன்னா
இந்த படம் ஊத்தி மூடியிருக்கும்! ஒண்ணுத்துக்கும் உதவாத கதை! என் மேல ஏற்பட்ட பரிதாபத்தால
ஜெயிச்சிருச்சு! ஆனா உன் வாழ்க்கையையே இதுல பிணையம் வைக்க வேண்டியதா போச்சே!
கவலைப்படாதீங்கப்பா! நம்ம ஜனங்களுக்கு ஞாபக மறதி
அதிகம்! சீக்கிரம் இந்த விசயத்தை மறந்துடுவாங்க!
போலீஸ் விசாரணையில் மனோஜிக்கு ஏற்கனவே கல்யாணம்
ஆயிருச்சு என்று தெரியவந்தது! நான் அவரை மறந்துவிட்டேன்ன்னு மீடியாவுல ஒரு பரபரப்பு
அறிக்கை விட்டா இந்த நாடகம் குளோஸ்! என்றாள் மாலினி!
சத்தியமா நீ என்னோட வாரிசுதான்! என்று மகளை தட்டிக்
கொடுத்தார் கிஷோர்!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இப்போது ஊடங்கங்களில் வந்து கொண்டிருக்கும் காதல் கதையை வைத்து நன்றாகவே நக்கல் செய்திருக்கிறீர்கள்.
ReplyDeleteடைமிங்கான கதை.. அருமை நண்பா..
ReplyDeleteநண்பா...ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.. http://www.kovaiaavee.com/2013/08/blog-post.html
ReplyDeleteசரியான நேரத்தில் சரியான கதை
ReplyDeleteசொல்லிச் சென்றவிதமும் முடித்த விதமும் அருமை
வாழ்த்துக்கள்
ஹா ஹா ஹா ஹா இதுதான் டைமிங் கதை சூப்பர்...!
ReplyDelete