Posts

Showing posts from September, 2020

உண்மையான பரிசு! வாட்சப் கதை பகிர்வு!

Image
  உண்மையான பரிசு ! ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள் . அங்கே ஒரு முத்து மாலை யைப் பார்த்தாள் . அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள் . “ அம்மு ... இது அழகா இருக்கு , ஆனால் விலை அதிகமா இருக்கே .. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை ... நான் உன்னோட பிறந்த நாளைக்கு அப்பாகிட்டச் சொல்லி ' ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ் ' மாலை வாங்கித் தரச்சொல்றேன் ... இது வேண்டாம்மா " என்றாள் அம்மா . ஆனால் அமுதா , அழுது பிடிவாதம் செய்து அந்தப் ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள் ... அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப் போனது . அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள் / உடன் வைத்திருந்தாள் . பள்ளிக்குச் செல்லும்போதும் , நண்பர்களுடன் விளையாடும் போதும் , ஏன் படுக்கும்போது கூடக் கழுத்தில் போட்டிருந்தாள் . பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா ச

விருந்து

Image
  விருந்து   நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு .   ஆனந்த இல்லத்தின் நூறு குழந்தைகள் உணவு உண்ணும் அறையின் வரிசையாக அமர்ந்திருக்க அவர்கள் முன்பே சாதம் , புளியோதரை , கூட்டு , பொரியல் , சர்க்கரைப் பொங்கல் , வடை , என்று சுவையான உணவு பாத்திரங்களில் நிரம்பி வழிந்தது . சாப்பாட்டு வாசனை மூக்கைத் துளைக்க நாவில் எச்சில் ஊறியது அந்த இல்லக் குழந்தைகளுக்கு . இன்னும் சற்று நேரத்தில் இன்றைய உணவை அளிக்கும் விருந்தினர் வந்ததும் உணவு பரிமாறப்படும் . இப்படி வகை வகையான உணவுகள் வாரத்தில் ஒரு முறை தான் கிடைக்கும் . சில சமயம் ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும் . வழக்கமாக சாதம் , கூட்டு , பொரியல் சாம்பார் மோர் , ஊறுகாய் தான் உணவு . யாருக்காவது பிறந்தநாள் திருமணநாள் , கல்யாணம் என்று விஷேசம் வரும்போது இந்த குழந்தைகளுக்கும் விஷேசம் . அன்று விருந்தினர் வந்ததும் இறைவணக்கம் பாடி முடித்ததும் அவர் ஒரு சிலருக்கு பரிமாறி புகைப்படம் எடுத்துக் கொள்வார் . பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்படும் . உண்டு முடித்தபின் அனைவரோடும் மீண்டும் ஒரு பு