தினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2
தினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு! மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 18th June 2018 04:15 PM | அ+ அ அ- | உச்சத்தில் இருக்கிறது சூரியன்! பச்சை பசுமைகள் அழிந்து கொண்டிருக்கிறது! கிராமங்களில் கூட விவசாயம் பிராணனை மெதுவாகவிட்டுக்கொண்டிருக்கிறது! ஒங்கி உயர்ந்து நின்ற மலைச்சிகரங்கள் தூங்கி விழிக்கையில் தூசாக மாறிக்கொண்டிருக்கிறது! கேணிகளுக்கு சமாதி கட்டியாகிவிட்டது! கோணிகளில் விற்ற அரிசி நெகிழிகளில் அடைபட்டு மூச்சிறைக்கிறது! சாலைகள் விரிகையில் சடுதியில் காணாமல்போகிறது சோலைகள் நிறைந்த கிராமங்கள்! உடலிழந்து ஓடும் திராணியற்று ஒளிந்து ,மறைந்து கொண்டிருக்கின்றன ஆறுகள்! ஆழியின் அடியிலும் கூட நெகிழி குப்பைகள்! நிலம் கெட்டு நீர் கெட்டு உணவுகெட்டு உடல் கெட்டு உறுதி கெட்டு ஊர் கெட்டு உடைபட்டுக்கிடக்கின்றது சூழல்! முக்கால்விழுக்காட்டை விழுங்கி ஏப்பம் விட்டபின்னும் முழுதினும் அடங்கவில்லை பசி! கால்விழுக்காடு மிச்சமிருக்கிறது! உச்ச வெப்பத்தை தணித்து வைக்க உலக அழிவை தள்ளி வ