தினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2

தினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு!

மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 18th June 2018 04:15 PM  |   அ+அ அ-   |  
உச்சத்தில் இருக்கிறது சூரியன்!
பச்சை பசுமைகள் அழிந்து கொண்டிருக்கிறது!

கிராமங்களில் கூட விவசாயம்
பிராணனை மெதுவாகவிட்டுக்கொண்டிருக்கிறது!

ஒங்கி உயர்ந்து நின்ற மலைச்சிகரங்கள்
தூங்கி விழிக்கையில் தூசாக மாறிக்கொண்டிருக்கிறது!

கேணிகளுக்கு சமாதி கட்டியாகிவிட்டது!
கோணிகளில் விற்ற அரிசி

நெகிழிகளில் அடைபட்டு மூச்சிறைக்கிறது!
சாலைகள் விரிகையில் சடுதியில் காணாமல்போகிறது

சோலைகள் நிறைந்த கிராமங்கள்!
உடலிழந்து ஓடும் திராணியற்று ஒளிந்து

,மறைந்து கொண்டிருக்கின்றன ஆறுகள்!
ஆழியின் அடியிலும் கூட நெகிழி குப்பைகள்!

நிலம் கெட்டு நீர் கெட்டு  உணவுகெட்டு
உடல் கெட்டு உறுதி கெட்டு ஊர் கெட்டு
உடைபட்டுக்கிடக்கின்றது  சூழல்!

முக்கால்விழுக்காட்டை விழுங்கி ஏப்பம் விட்டபின்னும்
முழுதினும் அடங்கவில்லை பசி!
கால்விழுக்காடு மிச்சமிருக்கிறது!
உச்ச வெப்பத்தை தணித்து வைக்க

உலக அழிவை தள்ளி வைக்க உடனே
மிச்சத்தை மீட்போம்! இயற்கையை வளர்ப்போம்!
செயற்கையை வேரறுப்போம்!

ஒரு முறையேனும்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 25th June 2018 05:22 PM  |   அ+அ அ-   |  
ஒரு முறையேனும் ஓடும் வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்! வாழ்க்கை வசமாகும்! ஒரு முறையேனும் உறவின் குரல்களுக்கு செவிகொடுங்கள்! உறவுகள் இனிக்கும்!
ஒரு முறையேனும் நட்பின் துயர்களுக்கு தோள் கொடுங்கள்! நட்பு சிறக்கும்! ஒரு முறையேனும் குழந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுங்கள்!
மழலை மயக்கும்! ஒரு முறையேனும் இசையின் இனிமையை ரசித்து பழகுங்கள்! இதயம் சிலிர்க்கும்! ஒரு முறையேனும் உழைக்கும் உடலுக்கு பயிற்சி கொடுங்கள்!
தேகம் வலுவாகும்! ஒரு முறையேனும் தேசத்தின் நலனுக்கு வாக்களியுங்கள்! நல்லரசு உதயமாகும்! ஒரு முறையேனும் வதங்கும் செடிகளுக்கு நீர் இறையுங்கள்! பசுமை வளமாகும்! ஒருமுறையேனும் உங்களை சுற்றிய மாசுக்களை வெளியேற்றுங்கள்!
இதயம் நலமாகும்! ஒருமுறையேனும்  நீளும் கரங்களுக்கு உதவிடுங்கள்! நெஞ்சங்கள் உங்களை வாழ்த்திடும்! ஒருமுறையேனும் தீய பழக்கங்களை துரத்தி அடியுங்கள்!
நன்மை உங்களை பாதுகாக்கும்! ஒரு முறையேனும் அன்பை விளைவித்து பாருங்கள்! ஆனந்தம் பெருக்கெடுக்கும்! ஒருமுறையேனும் உங்கள் குழந்தைகளோடு விளையாடிப்பழகுங்கள்!
குதூகலம் பிறப்பெடுக்கும்! ஒருமுறையேனும் இயற்கையை நேசித்து பாருங்கள்! இன்பம் பெருக்கெடுக்கும்! 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2