தளிர் சென்ரியு கவிதைகள்! 4
சுருக்கமாகச் சொல்வதென்றால் கவித்துவம் அதிகமாக இருந்தால் ‘ஹைக்கூ’. கவித்துவம் குறைந்து நகைச்சுவை உணர்வு மேலோங்கி இருந்தால் அது ‘சென்ரியு’. சென்ரியுவும் ஜப்பானிய மொழிக்கவிதை. 3 அடிகள் கொண்டது. ஜென் தத்துவம், இயற்கை மற்றும் மெய்யியலோடும் சிறிது தொடர்பு கொண்டு நகைச்சுவை உணர்வை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது சென்ரியு ஆகும். சென்ரியு சமூகம், அரசியல் ஆகியவை குறித்து நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்தும். ‘சென்ரியு’ என்னும் புனைப்பெயரைக் கொண்ட ‘கராய்ஹச்சிமோன்’ என்னும் ஜப்பானியக் கவிஞர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில் இவ்விலக்கியத்தை அளித்தார். பின்னர் அக்கவிஞரின் புனைப் பெயரே அக்கவிதை வகைகளுக்கான பெயரும் ஆயிற்று. தமிழில் இவ்வகையை நகைப்பா என்கிறார்கள். தமிழ்நாட்டு ‘சென்ரியு’ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘சென்ரியு’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். இது இந்திய சமூகம், அரசியல் ஆகியவை குறித்த போக்கை நகைச்சுவை உணர்வோடும் அங்கத உணர்வோடும் வெளிப்படுத்த ஏற்ற மிகச் சிறந்த வடிவம் ஆகும். எனவே இந்தியாவின் சூழ