தளிர் ஹைக்கூ கவிதைகள்!
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
இருள் அணைத்ததும்
வெட்கிச்சிவந்தது
சூரியன்!
அலைகின்றபோது
விலையாகின்றது
மனசு!
வானவீதியில்
வாகன நெரிசல்
மேகக்கூட்டம்!
இரவை கூட்டிவந்தன
வீடு திரும்பும்
பறவைகள்!
நாவில் கயிறு
வலியில் துடித்தது
கோயில் மணி!
கொள்ளைபோனது
புகார் இல்லை!
குழந்தையின் சிரிப்பு!
புள்ளி வைத்தகடவுள்
கோலம்போடவில்லை!
புள்ளிமான்!
பருக்கைசோறு
பசியாற்றியது
பறிமாறியது குழந்தை!
குடைகளை தொலைத்ததால்
கோபப்பட்டது சூரியன்!
வெப்பம்!
ஈரமான கால்கள்!
உலர்ந்ததும் உதிர்ந்தன
உறவுகள்!
மணல்!
இளைத்தும்
கவலைப்படவில்லை!
நாட்காட்டி!
இனிப்புதான்
ஏறவில்லை சர்க்கரை!
மழலையின் பேச்சு!
கரையக் கரைய
நிறைகிறது மணம்!
ஊதுபத்தி!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வணக்கம் சகோதரர்
ReplyDeleteஅத்தனையும் அருமை. முதலில் கை கொடுங்கள். குறிப்பாக என்று எதையும் தனியாக குறிப்பிட முடியாது அத்தனையும் அழகு. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரர்.
உடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
Deleteஎல்லாமே அருமை.
ReplyDeleteஎதை ரசிப்பது எதைவிடுவது என்று தெரியவில்லை. அந்த அளவு ஒன்றுக்கொன்று தொடர்புடையது போலுள்ளது. அதே சமயம் தொடர்பு இல்லாததது போலும் உள்ளது. மொத்தத்தில் அனைத்து ரசனையும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில். நன்றி.
ReplyDeleteநல்லகோர்வையாக போனது கவிதை வாழ்த்துக்கள் தளிர் ஸார்.
ReplyDeleteஎல்லாமே அருமை.
ReplyDeleteஆழமான சிந்தனையுடன் கூடிய
ReplyDeleteஅற்புதமான கவிதைகள்
பகிர்வுக்கும்தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வரியும் அருமையாக இருக்கிறது.
ReplyDeleteபாராட்டுக்கள்,
ஆகா
ReplyDeleteநாக்கை உறுத்தும் கயிறு
ரொம்ப அருமை
சுரேஷ்
தொடர்க
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html
அத்தனையும் அருமை வாழ்த்துக்கள் ....!
ReplyDelete