Posts

Showing posts from July, 2017

இன்றைய தினமணி கவிதை மணியில் என் கவிதை!

இன்றைய தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை. வெளியிட்ட தினமணி ஆசிரியர் குழுவினருக்கு மிக்க நன்றி! தூரத்தில் கேட்குது! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By   கவிதைமணி   |     Published on :   24th July 2017 04:21 PM   |     அ+ அ  அ-     |   காலம் மாறிப் பெய்யும் மழை! காய்த்தெடுக்கும் வெப்பம்! புதைந்து போகும் ஏரிகள்! புதியதாய் முளைக்கும் நோய்கள்! மரபணு மாற்ற காய்கறிகள்! மாறி வரும் வேளாண்மை! வறண்டு கிடக்கும் குளங்கள்! திரண்டு நிற்கும் மாசுக்கள்! உழைப்பை மறந்த மக்கள்! உலர்ந்து போகும் பசுமை! பெருகும் வாகன போக்குவரத்து அருகும் நடைப்பயிற்சிகள்! அழியும் கிராமிய பண்பாடு வழியும் ஆங்கில மோகம்! உருகும் பனி ஆறுகள்! சுருங்கும் ஓசோன் படலம்! நொறுங்கும் மலைச்சிகரங்கள்! நெருங்கும் கடல் எல்லைகள்! சரியும் நிலத்தடி நீர்வளம்! உறிஞ்சும் அன்னிய நிறுவனங்கள்! இவைகள் பெருகப் பெருக அருகி வருகின்றது பூமியின் ஆயுள்! அதோ தூரத்தில் கேட்கிறது அபாயச் சங்கு! டிஸ்கி:  சில சொல்ல இயலாத விஷயங்களால் இணையப்பக்கம் நெடுநேரம் வரமுடியவில்லை!  விரைவில் மீண்டதும் நண்பர்களின் வலைப்பக்கங்களுக்கு வருகிறேன்!

அப்பாவுக்குத்தெரியாமல்! பாப்பா மலர்!

Image
அப்பாவுக்குத்தெரியாமல்! சூரியன் மறையும் மாலை வேளை. அலுவலகத்திலிருந்து வந்தார் தெய்வநாயகம். அவர் உதடுகள் கோபத்தால் துடித்துக் கிடந்தன." ஏய் மங்களம்! எங்கேடி உன் புத்திர சிகாமணி? கூப்பிடுடி அவனை!" என்று கத்தினார்.    அடுக்களையிலிருந்து அவர் மனைவி மங்களம் வெளிப்பட்டாள். "என்னங்க என்னாச்சு ஏன் இப்படி வந்ததும் வராததுமா கோபப்பட்டு குதிக்கிறீங்க? இந்தாங்க காபி குடிச்சிட்டு நிதானமா என்ன விஷயம்னு சொல்லுங்க! "என்று காபியை நீட்டினாள்.  காபியை வாங்கி ஒரு துளி பருகிய வேத நாயகம் மீண்டும் கேட்டார். "எங்க அவன்?" " யாரைக் கேக்கறீங்க?" " அதான் நீ பெத்து வச்சிருக்கிறியே ஒரு சொக்கத்தங்கம்! அவனைத்தான் கேக்கறேன்." என்றார் தெய்வநாயகம்.  ” ஏன் அவன் உங்களுக்கு மட்டும் பிள்ளை இல்லையாக்கும் உங்க சத்புத்திரன் தானே அவன் ?” ”சரி சரி கேட்டதுக்கு பதில் சொல்லு?”  ”நம்ம நவீன் காலையில வெளியே போனவன் இன்னும் வரலைங்க?” ”மங்களம் அவன் தினமும் காலையிலபோனா மாலையிலதான் வர்றானா? இது எத்தனை நாளா நடக்குது? அப்படி அவன் நாள் முழுக்க எங்க சுத்துறான்? இதெல்லாம் வி

இன்றைய இந்து எக்ஸ்ட்ரா பஞ்சில் எனது பஞ்ச்

Image
இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான எனது பஞ்ச் மற்றும் நண்பர்களின் பஞ்ச்கள் உங்களின் பார்வைக்கு. தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 92 1.    எங்க தலைவரை அவ்வளவு சீக்கிரத்துல யாரும் விலை கொடுத்து வாங்கிட முடியாது!   அதுக்காக “ தமிழகத்தின் தக்காளியே!”ன்னு பேனர் வைக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர்! 2.    தலைவர் தீர்த்த யாத்திரைக்கு போயிருக்கார்னு சொல்றீங்களே ஏதாவது வேண்டுதலா? நீ வேற ‘சரக்கு அடிக்க போயிருக்கிறதை”த்தான் அப்படி சொன்னேன்! 3.    நம்ம பால்காரனுக்கு வாய்கொழுப்பு ஜாஸ்தியா ஆயிருச்சு!! ஏன் என்ன ஆச்சு? பால்ல ஏன் தண்ணி கலக்கறேன்னு கேட்டா, நான் என்ன ரசாயணமா கலக்கறேன் தண்ணிதானேன்னு நக்கலா பதில் சொல்றான்! 4.    படத்தோட கதை நடக்கிற இடம் மும்பை, கேரளாவில் இருந்து ஹீரோயினையும் ஆந்திராவில் இருந்து வில்லனையும் இறக்குமதி பண்றோம். பாரின்ல நாலு சாங் எடுக்கிறோம்!   சிறந்த தமிழ்ப்படமா தேர்வாகும்னு சொல்லு! 5.    எதிரி படை திரட்டி வருகிறான் மன்னா!   நடையை வீசிப் போட்டு பழகலாமா மந்திரியாரே! 6.    எதிரி கமல் ரசிகனாய் இருப்பான் போலிருக்கிறது மன்னா!    எப்படி சொல்கிறீர்கள் மந்திரியாரே! நம் அனைவரையும் ஒரே சிறையில் அடைத்து வைத்து இருக்கிறானே! 7.    கல்யாணத்த

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

தினமணி கவிதை மணியில் என்னுடைய கவிதை! இந்தவாரம் திங்களன்று 17-7-17 அன்று தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதை! இன்றைய தாலாட்டு : நத்தம் . எஸ் . சுரேஷ்பாபு By  கவிதைமணி   |   Published on : 17th July 2017 04:36 PM  |    அ + அ   அ -    |   தூளியே தொலைந்த காலத்தில் கொஞ்சம் தள்ளியே நிற்கிறது இன்றைய தாலாட்டு ! அம்மாக்கள் அரவணைப்பில் பாட்டி தாத்தா பாசத்தில் பயணித்த தாலாட்டு இன்று தேய்பிறையாய் தேய்ந்து கிடக்கிறது ! நிலா முற்றங்களில் நீண்டு ஒலித்த தாலாட்டுப் பாடல்கள் அப்பார்ட்மெண்ட் அடுக்ககங்களில் அமிழ்ந்து கிடக்கிறது ! சோறுட்டும் போதும்   தாலாட்டும் போதும் இசையூட்டிய அம்மாக்கள் பசை தேடி பயணிக்கையில் திசை தெரியாமல் திணறி மூச்சிழந்து முடங்கி கிடக்கின்றன ! அலைபேசிகளும் தொலைக்காட்சிகளும் தோழனாக உலாவும் தோற்றப்பிழை காலத்தில் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை பெற்றவளின் தாலாட்டு ! திரையிசையும் தெருவசையுமே இன்றைய பிள்ளைகளுக்கு என்றும் தாலாட்டு ! வசதிகள் எல்லாம் வழக்கமாக வழுவிப் போய் வெறும் தழுவலோடு நின்றுவிட்டது இன்ற

இரண்டு ரூபாய்!”

Image
 “ இரண்டு ரூபாய்!” நான் அந்த பேருந்து நிறுத்தத்தின் முன் நின்றுகொண்டிருந்த போது மணி முற்பகல் பத்தை கடந்து இருந்தது. சித்திரை மாதம் என்பதால் வெயில் அப்போதே கொளுத்திக் கொண்டிருந்தது. நிழற்குடையை ஆக்ரமித்து ஏதோ பெட்டிக்கடைகள் முளைத்திருக்க வெயிலில் பேருந்துக்காக காத்திருந்தனர் என்னோடு இன்னும் சிலர்.    நான் பேருந்தில் பயணித்து ஏறக்குறைய நான்கைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஏதோ தொலை தூரம் என்றால் பேருந்து பயணமே தவிர அருகில் உள்ள இடங்களுக்கு இருசக்கரவாகனத்தில்தான் பயணம். ஒருகாலத்தில் பேருந்திலேயே பயணித்தபோது பேருந்து கட்டணங்கள் எல்லாம் எனக்கு அத்துப்படி. நடத்துனர் கேட்கும் முன்னரே சரியான சில்லரையைக்கொடுத்து டிக்கெட் வாங்குவேன். நடத்துனர்கள் எல்லோரும்  “நீங்கதான் சரியான சில்லரை கொடுத்து எங்க டென்சனை குறைக்கறீங்க!” என்று பாராட்டுவர். இப்போது டூ வீலர் வாங்கிவிடவே பேருந்து பயணம் குறைந்து போனது. பஸ் கட்டணங்களும் மறந்து போனது.     இன்று திடீரென்று பஸ் பயணம் செல்ல வேண்டியதாகிவிட்டது. டூ வீலரை சர்வீஸ் விட்டுவிட்டு அருகில் உள்ள நகரில் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம். சர்வீஸ்

தினமணி கவிதை மணியில் எனது கவிதைகள்!

தினமணி கவிதை மணியில் கடந்த வாரங்களில் வெளிவந்த எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு! மறு ஜென்மம்! காய்ந்திட்ட்ட நதிகள் தோறும் மீண்டும் நீரோடினால் அது நதிக்கு மறு ஜென்மம் காய்ந்திட்ட புற்கள் எல்லாம் மழை பெய்து துளிர்த்திட்டால் அது புல்லுக்கு மறு ஜென்மம்! குற்றங்கள் புரிந்த மனிதன் தவற்றை உணர்ந்தே திருந்தி வந்தால் அது அவனுக்கு மறு ஜென்மம்! பிள்ளைகள் பிரசவிக்கும் தாய்மார்கள் எல்லோர்க்கும் பிரசவம் முடிந்து வருதல் மறுஜென்மம்! செதுக்கிய பாறைகள் எல்லாம் சிற்பமாய் மாறுகையில் அது பாறைக்கு மறு ஜென்மம்! பிசைந்த சேறு குயவனின் கைவண்ணத்தில் குடமாய் மாறுகையில் அது மண்ணுக்கு மறுஜென்மம்! பூக்களாய் பூத்தவை மாலையாக தொடுக்கப்படுகையில் அது பூவுக்கு மறு ஜென்மம்! தோல்வியில் துவண்டவன் துணிச்சலாய் எழுந்து வெல்கையில் அவனுக்கு மறுஜென்மம்! வாழ்க்கையில் புதிய பாதையை வகுத்து நடக்கையில் அது மறுஜென்மம்! துன்பங்களையே துணையாகக் கொண்டவன் இன்பத்தை அடைவது மறுஜென்மம்! எதிரியை நண்பனாய் ஏற்றவனுக்கு எதிர்வரும் வாழ்க்கை மறுஜென்மம்! தூங்கி விழிக்கும் மாந்தருக்கெல்லாம் துள