Posts

Showing posts from 2016

இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!

Image
இந்த வார ஆனந்த விகடனில் எனது ஜோக்!  கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் எனது ஜோக் ஒன்று ஆனந்த விகடனில் இடம்பெற்றுள்ளது. ஆண்டு கடைசியில் மீண்டும் விகடனில் என் பெயர் பதித்தது மட்டற்ற மகிழ்ச்சியினை தந்தது.   ஜோக்கினை பிரசுரம் செய்த விகடன் குழுமத்திற்கும் பாசுமணி சார், மற்றும் ஜோக்கினை பதிவிட்டு விபரம் சொன்ன தமிழக எழுத்தாளர் குழுவின் பொன் ராஜபாண்டி அண்ணாச்சி, ஏந்தல் இளங்கோ சார், ரவிக்குமார் சார் மற்றும் குழு நண்பர்கள், வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்! இந்த ஆண்டு இறுதியில் பிரசுரமான ஜோக் எனக்கு மேலும் ஊக்கம் தந்து இன்னும் நிறைய எழுத தூண்டி உள்ளது. ஆயினும் தந்தையின் உடல்நலக்குறைவு, வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கான சூழல் சரிவர அமையவில்லை!     வர்தா புயல் பாதிப்பினால் பகல் பொழுதில் சரிவர மின்சாரம் இருப்பதும் இல்லை! இதனால் மற்ற நண்பர்களின் வலைப்பக்கம் செல்வதும் படிப்பதும் குறைந்து உள்ளது. என் பதிவுகளும் குறைந்து உள்ளது. புத்தாண்டில் நிலைமை சீரடையும் என்று எதிர்பார்க்கிறேன். அன்பு நண்பர்கள் என்னுடைய சூழலை புரிந்து கொள்ள வேண்டும். விரைவில் நண்பர்களின் வலை

யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!

Image
யானைக்கு வந்த நாட்டிய ஆசை! பாப்பாமலர்!      முல்லை வனக் காட்டில் விலங்குகள் கூடி இருந்தன. வரப் போகும் புத்தாண்டை எப்படி கொண்டாடுவது என்பதுதான் கூட்டத்தின் நோக்கம். நரியார் தான் முதலில் பேச ஆரம்பித்தார்.    “ மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை விதவிதமாக கொண்டாடுகிறார்கள். இசை நடனம், விருந்து என்று கேளிக்கைகளில் ஈடுபட்டு சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள் நமது காட்டிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட வேண்டும்”என்றது.    அப்போது குறுக்கிட்ட கரடி, “மனிதர்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நமக்குத் தேவையா? அவர்களுக்கு மற்றவர்களின் கஷ்டத்தை பற்றிய கவலையே கிடையாது. நடு இரவில் வீதியில் பட்டாசு வெடித்து  சத்தமான பாடல்களை பாடவிட்டு குடித்து கும்மாளமிட்டு  அயலாரை துன்பபடுத்துகின்றனர்! இதெல்லாம் காட்டுக்கு தேவையில்லை!” என்றது.      அப்போது மான் ஒன்று பதில் பேசியது, கொண்டாட்டம் என்றால் ஆட்டம் பாட்டம் இருக்கத்தான் செய்யும்! அது இல்லாமல் விழா இல்லை! அது மற்றவர்களை பாதிக்காத வண்ணம் இருந்தால் நல்லது. யாரோ சிலர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த மனிதர்களையும் குறை சொல்லக் கூடாது! என்றது.    

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
   தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1.    கரையைக் கடக்கையில் கஷ்டப்படுத்தியது    புயல்! 2.    வானில் பிறந்தாலும் மண்ணோடு கலந்தது மழைநீர்! 3.    பறித்து நடுகிறார்கள் துளிர்க்கிறது! திருமணம்! 4.    அரவணைக்கையில் உதறி தள்ளுகிறோம்! பனி! 5.    கட்டிய குடிசைகள்! அகற்றியது சூரியன்! பனி! 6.    வாடாத பூக்கள் வரவேற்றன! வாசலில் கோலம்! 7.    அசைந்தாலும் நகரவில்லை! நீரில் நிழல்! 8.    வெளிச்சத்துக்கு வந்தன நட்சத்திரங்கள்! அமாவாசை! 9.    தேடிக்கொண்டே இருக்கின்றன எதையும் தொலைக்கவில்லை! எறும்புகள்! 10. மொய்த்த கண்கள்! காசாக்கினாள் நடிகை! 11. நிஜத்தை தொலைத்து நிழலில் நிம்மதி காண்கிறாள் நடிகை! 12.  விரிசல்! உலர்ந்து போனது! ஈரம்! 13. பூக்களைப் பறித்தார்கள்! அழவில்லை! செடி! 14. திரைவிரித்தது வானம் இருண்டது பூமி! அமாவாசை! 15. பிடித்துக் கொண்டது நகர முடியவில்லை! மழை! தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

இந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது படைப்புக்கள்!

Image
இந்த வார பாக்யா டிச30- ஜனவரி 5-2017 இதழில் எனது படைப்புக்கள்!     வாரா வாரம் எது தவறினாலும் பாக்யாவிற்கு ஒரு பத்து ஜோக்ஸ்கள் மெயில் அனுப்பி விடுவேன். ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் அதில் சில அடுத்த வார பாக்யாவில் வரும். மக்கள் மனசு கேள்வி பதிலும் ஞாயிறு அன்று பதில் அளித்து அடுத்த வாரம் வரும்.    வர்தா புயல் வீசி எங்கள் ஊரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு ஒரு வாரம் ஓடிப்போய் இருந்தது. போன சனியன்று இரவு வந்தது. மீண்டும் ஞாயிறன்று காலையில் துண்டிக்கப்பட்டது. போனில் நெட் வொர்க்கும் போய் போய் வந்து கொண்டிருந்தது. சிரங்கு பிடித்தவன் கையும் எழுத்தாளன் கையும் சும்மா இருக்குமா?     எப்படா கரண்ட் வரும் என்று காத்திருக்கையில் இரவு 8 மணி வாக்கில் மின்சாரம் வந்தது. கம்ப்யூட்டரை ஆன் செய்து ரிலையன்ஸ் ஜியோ கனெக்ட் செய்தால் கனெக்ட் ஆகவில்லை!  முயன்று பார்த்து தோற்று பி.எஸ்.என்.எல் நெட் கனெக்ட் கிடைத்து மெயில் ஓப்பன் செய்து ஒரு பதினைந்து ஜோக்குகள் ஒரு கதை  பாக்யாவிற்கு மெயில் அனுப்பி முடிக்கையில் மணி பதினொன்றை நெருங்கி இருந்தது. இடையிடையே வெவ்வேறு தொல்லைகள் அதனால்தான் இவ்வளவு நேரம். காரிய சித்தி

கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!

Image
கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!   கதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.  மின்விளக்கு மரம் 1882ல் முதன் முறையாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரம் பயன்படுத்தப்பட்டது. நியூயார்க்கில் மின்சாரம் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர் 80 பல்புகளை வைத்து மரத்தை அழகுபடுத்தினார். பின்பு 1903ல் வியாபார ரீதியாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரங்கள் விற்பனைக்கு வந்தன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் பிரிட்டனில், தேவதை வடிவிலான மின்விளக்குகள் கிறிஸ்துமஸின்போது அதிகமாக விற்கப்பட்டன. கிறிஸ்துமஸ் தீவு இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு தீவிற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர். வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி 1643ம் ஆண்டு கிறிஸ்துமஸ் என்று இத்தீவை கண்டுபிடித்தமையால் இப்பெயர். * இலை இல்லாத மரம்: ஸ்வ

இந்த வார குமுதம் இதழில் 28-12-16 என்னுடைய ஜோக்!

Image
இந்த வாரம் குமுதம் இதழிலும் என் ஜோக் ஒன்று பிரசுரம் ஆனது. குமுதம் இதழின் இணைப்பான லைஃபில் அந்த ஜோக் பிரசுரம் ஆனது. தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவினருக்கும் குமுதம் ஆசிரியர்,நிர்வாகத்தினர் அனைவருக்கும் எனது நன்றி!   இந்த தகவலை வாட்சப் மூலம் பகிர்ந்து கொண்ட தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழும நண்பர், ஏந்தல் இளங்கோ சாருக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும் எனது நன்றி.    தொடர்ந்து ஊக்கமளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.   ஜோக் கீழே! கார்டூன் ஆன்லைன் மாத இதழில் இரண்டு மாதங்களாக எனது ஜோக் பரிசு பெற்று வருவதை  அறிந்து இருப்பீர்கள். ஜாம்பாவன்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நானும் கலந்து கொண்டு நவம்பர் மாதத்தில் மீண்டும் மூன்றாவது முறையாக பரிசு பெற்றேன். இது பரிசுத்தொகை அப்படியே இரட்டிப்பாக முதல் முறை 25,அடுத்து 50 இந்த முறை நூறு என தொடர்ச்சியாக மூன்று முறை வென்ற மகிழ்ச்சி மன நிறைவைத் தந்தது. அந்த ஜோக் கீழே! தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் கார்டூன் ஆன்லைன் ஆசிரியர் திரு நல்லமுத்து அவர்களுக்கும் தேர்ந்தெடுத்த நடுவர் குழுவினருக்கும் எனது நன்றிகள். தங்களின் வருகைக்

இந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்

Image
இந்த வார பாக்யாவில் டிசம்23-29 எனது ஜோக்ஸ்கள்  வழக்கம் போல இந்தவாரமும் பாக்யா என்னை ஏமாற்றவில்லை! என்னுடைய ஜோக்ஸ்கள் வெளிவந்து மகிழ்ச்சியைத் தந்தது. வர்த்தா புயல் காரணமாக வாடிப்போயிருந்த எனக்கு இந்த வாரம், குமுதம், பாக்யா, கார்டூன் ஆன்லைன் என்று தொடர் வெற்றிகள் வந்து மகிழ்ச்சியைத் தந்து வாட்டத்தை ஓரளவிற்கு போக்கின.    மின்சாரம் இரவில் மட்டும் விட்டு விட்டு வருகின்றது. ஜியோ சிம் சிக்னல் நேற்று முழுவதும் போராடிப் பார்த்தேன். கம்ப்யூட்டருடன் கனெக்ட் ஆகவில்லை! இன்றும் அப்படியே! பி.எஸ்.என். எல்.லில் போராடி இணைத்து இந்த பதிவை வெளியிடுகின்றேன்.    நிலைமை சீரடைந்ததும் வழக்கம் போல நண்பர்களின் பதிவுகளை வாசிக்க வருகின்றேன். இணைப்பு மிகவும் ஸ்லோவாக இருப்பதால் பக்கங்கள் திறக்க நேரம் ஆகின்றது. எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.   பாக்யாவில் என் படைப்புக்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் பாக்யா ஆசிரியர் குழுவினருக்கும் என்னை உற்சாகப்படுத்தி எழுத தூண்டிய எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி  பத்திரிக்கையில் வெளிவந்ததை உடனே பகிர்ந்து கொள்ளும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவினருக்கும் எனத

இந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ்!

Image
இந்த வார குமுதம் 21-12-16 இதழில் எனது இரண்டு ஜோக்ஸ்! நீண்ட நாட்களாகவே குமுதம் இதழில் என் பெயரை காண வேண்டும் என்ற ஆசை.ஒரு வருட காலமாக குமுதம் இதழுக்கு மெயிலில் ஜோக்ஸ்கள் அனுப்பி வந்தேன். ஒன்று கூட தேறவில்லை. தமிழக எழுத்தாளர்கள் வாட்சப் குழுவினர் கார்டில் அனுப்ப சொன்னார்கள் அப்படி ஒரு ஐம்பது கார்டுகள் அனுப்பி பார்த்தேன்.  போன மாதம் நிறைய எதிர்பார்த்து ஏமாந்தேன். இந்த வாரம் வர்தா புயல் பாதிப்பு. ஞாயிறு முதலே கரண்ட் இல்லை. தகவல் தொடர்பு இல்லை. குடிக்க தண்ணீர் தட்டுப்பாடு. இந்த கஷ்டங்களை எல்லாம் வெள்ளியன்று இரவு வாட்சப் மெசேஜ் கிடைத்தபோது பறந்து புயலாய் அடித்து சென்றுவிட்டது.  இன்வெர்டர் பேட்டரி மூலம் போன் சார்ஜ் செய்து போய் போய் வந்த சிக்னலில் வாட்சப் பார்க்க குமுதம் ஜோக்ஸ் வாழ்த்துக்கள் என்று குருப் நண்பர்கள் என் பெயரை சொல்லியிருந்த போது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் சிக்னல் கிடைக்காமையால் அவர்கள் பதிவிட்டிருந்த இமெஜ் டவுண்லோட் ஆகவில்லை.    மறுநாள் சங்கடஹர சதுர்த்தி. விரைவாக பூஜைகள் முடித்து காரனோடை சென்று குமுதம் வாங்கி புரட்டி என் ஜோக்ஸ் படித்தபோது சொல்லவொனா ஆனந்தம்.     அப

கார்த்திகை தீப வழிபாடு!

Image
கார்த்திகை தீப வழிபாடு! ஒளி நிறைந்திருக்கும் இடத்தில் இருள் நெருங்காது! அறிவொளி பரவியிருக்கும் இடத்திலே அறியாமை படராது! இறைவன் ஒளிமயமானவன். இயற்கையை கடவுளாக வழிபாடு செய்தார்கள் முன்னோர்கள். சூரியவழிபாடும், வருணவழிபாடும் அப்படி தோன்றியவை!    சூரியனும் ஒளிவடிவானவன் தானே! விளக்கேற்றி வைக்கும் போது இருள் விலகுகிறது. இறைவனின் ஆனந்தமயமான தரிசனம் கிடைக்கிறது. அப்படியே மனம் உருகி பிரார்த்தனை செய்யும் போது நமது அகத்திலே பிடித்து இருந்த இருள்கள் விலகி ஆன்மா ஒளிபெறுகிறது.    சிவனின் நெற்றிப்பிழம்பில் இருந்து பிறந்தவர் சுப்ரமண்யக் கடவுள். அவரை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். இந்த ஆறு கார்த்திகை பெண்களை ஒன்றாக்கி கார்த்திகை நட்சத்திரமாக்கி வானில் ஒளிவீச செய்தார் முருகர். இந்த கார்த்திகை நட்சத்திர நாளில் தன்னை வழிபடுவோருக்கு வேண்டும் வரம் தருவதாக அருள்பாலித்தார். முருகனுடைய பிறந்தநாள் விசாகநட்சத்திரம், இந்த நட்சத்திரத்தில் விரதவழிபாடு செய்யாமல் கார்த்திகை நட்சத்திரத்தில் வழிபாடு செய்ய இதுவே காரணம்.தன்னை வளர்த்தோருக்கு முருகக் கடவுள் நன்றி செலுத்தியதை உணர்த்தும் அற்புத கதை இது