தளிர் ஹைக்கூ கவிதைகள்!

  தளிர் ஹைக்கூ கவிதைகள்!



1.   கரையைக் கடக்கையில்
கஷ்டப்படுத்தியது
   புயல்!

2.   வானில் பிறந்தாலும்
மண்ணோடு கலந்தது
மழைநீர்!

3.   பறித்து நடுகிறார்கள்
துளிர்க்கிறது!
திருமணம்!

4.   அரவணைக்கையில்
உதறி தள்ளுகிறோம்!
பனி!

5.   கட்டிய குடிசைகள்!
அகற்றியது சூரியன்!
பனி!

6.   வாடாத பூக்கள்
வரவேற்றன!
வாசலில் கோலம்!

7.   அசைந்தாலும்
நகரவில்லை!
நீரில் நிழல்!

8.   வெளிச்சத்துக்கு வந்தன
நட்சத்திரங்கள்!
அமாவாசை!

9.   தேடிக்கொண்டே இருக்கின்றன
எதையும் தொலைக்கவில்லை!
எறும்புகள்!

10. மொய்த்த கண்கள்!
காசாக்கினாள்
நடிகை!

11. நிஜத்தை தொலைத்து
நிழலில் நிம்மதி காண்கிறாள்
நடிகை!
12.  விரிசல்!
உலர்ந்து போனது!
ஈரம்!

13. பூக்களைப் பறித்தார்கள்!
அழவில்லை!
செடி!

14. திரைவிரித்தது வானம்
இருண்டது பூமி!
அமாவாசை!

15. பிடித்துக் கொண்டது
நகர முடியவில்லை!
மழை!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  2. அருமை சகோதரா...
    மற்றவற்றையும் வாசிக்கிறேன்...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete
  4. எல்லாமே சிறப்பு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2