கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!
கிறிஸ்துமஸ் சில சுவாரஸ்ய தகவல்கள்!
கதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து: பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.
மின்விளக்கு மரம்
1882ல் முதன் முறையாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரம் பயன்படுத்தப்பட்டது. நியூயார்க்கில் மின்சாரம் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பர் ஒருவர் 80 பல்புகளை வைத்து மரத்தை அழகுபடுத்தினார். பின்பு 1903ல் வியாபார ரீதியாக கிறிஸ்துமஸ் மின்விளக்கு மரங்கள் விற்பனைக்கு வந்தன. இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் பிரிட்டனில், தேவதை வடிவிலான மின்விளக்குகள் கிறிஸ்துமஸின்போது அதிகமாக விற்கப்பட்டன.
கிறிஸ்துமஸ் தீவு
இந்தியப்பெருங்கடலில் உள்ள ஒரு தீவிற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயர். வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி 1643ம் ஆண்டு கிறிஸ்துமஸ் என்று இத்தீவை கண்டுபிடித்தமையால் இப்பெயர்.
* இலை இல்லாத மரம்: ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்து போனால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு. இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.
* கிறிஸ்துமஸ் குடில்: இயேசுநாதர் பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகெங்கும் அமைக்கப்படுகின்றன. இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்

பசிலிக்கா ஆலயம்
பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.
இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.
முதல் வாழ்த்து அட்டை
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.
அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வாகனம்
விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.
கனடா நாட்டின் தலை நகரான மான்டிரியலில் மிகப் பிரம்மாண்டமான புனித ஜோஸப் தேவாலயம் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தேவாலயம் இது. வழிபடவும் பார்த்து மகிழவும் ஆண்டுதோறும் இருபது லட்சத்துக்கு மேல் மக்கள் வருகிறார்கள். இந்த தேவாலயத்தில் 56 மணிகள் உள்ளன. இந்த மணிகளின் நாதம் இனிமையானது. ரோமானிய பாணியில் இத்தேவாலயத்தை எழுப்பியவர் சகோதரர் ஆண்ரே என்பவர்.
கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பாக்ஸிங் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கும் குத்துச் சண்டைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வழக்கம் இது. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி சர்ச்சுகளில் ஒரு பெட்டி வைத்துவிடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணம் போட்டு வருவார்கள். வருடத்துக்கு ஒரு முறை கிறிஸ்துமஸூக்கு அடுத்த நாள் பெட்டியை திறந்து பணம் எண்ணப்படும். அதைக் கொண்டு ஏழைகளுக்கு பொருளாதார உதவிகள் செய்யப்படும்.
(இணையத்தில் படித்து தொகுத்தது)
அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
இதுவரை அறியாத
ReplyDeleteஅருமையான தகவல்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
http://lawtamil.blogspot.nl/இணையுங்கள்
ReplyDeleteசிறப்பான தொகுப்பு.
ReplyDeleteவாழ்த்துகள்.
தெரியாத பல தகவல்கள் சகோ,, அருமையான தொகுப்பு,,
ReplyDeleteநன்றி,,
நல்ல தொகுப்பு!
ReplyDelete