கவர்ச்சிக்கு மரியாதை! ஒரு பக்க கதை!
கவர்ச்சிக்கு மரியாதை! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. கண்ணன் தன் மனைவி கோதையுடன் பக்கத்து டவுனுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தான். வீட்டுத்தேவைக்காக சில அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்று கோதை நச்சரித்தமையால் அவளையும் அழைத்துக்கொண்டு சென்றான். அழகான கிராமத்து சாலையின் ஓரத்தில் . ஒரு முலாம்பழத்தோட்டத்தில் பழங்களை பறித்து சாலையோரம் குவித்து வைத்திருந்தார்கள். அங்கே சிறியதும் பெரியதுமாய் அடுக்கியிருந்த பழங்களைப் பார்த்ததும், என்னங்க! முலாம் பழம் தோட்டத்துலே பழுத்தது விக்கிறாங்க! வெயிலுக்கு ஜுஸ் போட்டு குடிச்சா உடம்புக்கு நல்லது. ஒண்ணு வாங்கிகிட்டு போலாங்க! என்றாள் கோதை. வண்டியை நிறுத்திவிட்டு பழங்களில் ஒரு...