நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 29
1.
காலண்டர்!
“எதுக்குங்க இத்தனை காலண்டர் எல்லார் கிட்டேயும்
கேட்டு வாங்கறீங்க! ஒண்ணு இருந்தா போதாதா? என்று கேட்ட மனைவியை நாளைக்கு பார்! என்று
அடக்கினார். மறுநாள் வாங்கி வந்த காலண்டர்களை தன் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் அலுவலக
கடைநிலை ஊழியர்களை வரவழைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
2.
அட்வைஸ்!
நேரத்துக்கு
சாப்பிடனும்! நிறைய தண்ணி குடிக்கணும், காய்கறி பழங்கள் நிறைய சேர்த்துக்கணும் என்று
பேஷண்டுக்கு அட்வைஸ் செய்த டாக்டரின் போன் சிணுங்கியது, எடுத்தார். ஒருநாளாவாது டயத்துக்கு
சாப்பிட வீட்டுக்கு வர்றீங்களா? மணி ரெண்டு ஆவப்போகுது என்று சிடுசிடுத்தாள் அவர் மனைவி.
3.
வாழ்த்து!
சுற்றங்களும்
நட்புக்களும் பரஸ்பரம் பொங்கல் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர் வாட்சப் பில்!
4.
ஞாபகம்!
சாமிக்கு பொங்கல் வைத்து படையல் போட்டதும் மறந்துடப்
போறே ஞாபகமாய் போட்டோ எடுத்து எஃப்.பியில் ஷேர் பண்ணு! கவனமா இரு மறந்துடாதே! என்றாள்
அக்கா.
5.
எழுத்து:
மனதில் கரு உதித்தவுடன் வேக வேகமாய் கணிணித் திரையை
ஆன் செய்து எழுத ஆரம்பித்தார் அந்த எழுத்தாள்ர்.
6.
வதந்தி:
வேகமாக பரவியது வதந்தி செல்லுக்கு செல் வாட்சப்
மூலம்!
7.
சாட்டிங்க்:
குடும்பத்தோடு ஒரு வார்த்தை பேச முடியாதவன் விடிய
விடிய சாட்டிங் செய்து கொண்டிருந்தான் வாட்சப்பில்
8.
தடை:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட புறப்பட்டுக்கொண்டிருந்த
மகனை தடுத்துக் கொண்டிருந்தாள் ஜல்லிக்கட்டில் கணவனை இழந்த மனைவி.
9.
விளையாட்டு!
விளையாட்டை தடை செய்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்
அரசியல்வாதிகள்.
10. கண்டுபிடிப்பு:
தொடர் மின்வெட்டு கண்டு பிடித்துக் கொண்டுவந்தது
காணமல் போன ஆட்டு உரலை.
11. பொங்கல் மரியாதை!
பொங்கல் மரியாதை கேட்டு ஆளாளுக்கு தொல்லை பண்றாங்க
என்று முணுமுணுத்தவர் எதிர்பட்ட நண்பரிடம் கேட்டார் ”இந்த வருஷம் டைரி எதுவும் இல்லையா?”
12. பாரம்பரியம்!
ஜீன்ஸ் பேண்ட் ரேபான் குளிர் கண்ணாடி கையில் கோக்கோடு
வெளிநாட்டு மொபைலில் ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் என்று ட்விட்டிக் கொண்டிருந்தான்
அந்த இளைஞன்.
13. முரண்:
கூல்டிரிங்க் வியாபாரம் செய்து கொண்டிருந்தவன் தாகமெடுத்ததும்
வெளியே சென்று இளநீர் வாங்கி அருந்தினான்.
14. சில்லறை!
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை இல்லை என்று
ஸ்டிக்கர் எழுதிக்கொடுத்தவனிடம் கூலியாக இரண்டாயிரம் ரூபாய் தாளைக் கொடுத்தபோது சில்லறை
இல்லீங்களே என்றான்.
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
இன்றைய நவீன யுகத்தில் வதந்தியின் வேகம் அளவிடக் கூடியதா என்ன :)
ReplyDeleteநொடியில் படிக்க
ReplyDeleteபடித்ததும்
சிந்திக்க முடிந்தது!
அனைத்தும் அருமை சுரேஷ்
ReplyDeleteஅனைத்தும் அருமை. பாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்து, வதந்தி, பாரம்பரியம் ஆகியன பொருள் மிக்கவை! நடப்பதைச் சொல்பவை!
ReplyDelete