ஏழாவது ஆண்டில் பயணிக்கிறது தளிர்!
ஏழாவது ஆண்டில்
பயணிக்கிறது தளிர்!
வணக்கம் வலைப்பூ
அன்பர்களே! உங்களின் நல் ஆதரவின் வழித்துணையோடு ஆறு ஆண்டுகள் நிறைவு செய்து ஏழாவது
ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் ஒன்றும் தெரியாதவனாக ஜனவரி மாதம்
வலைப்பூ உலகில் அடியெடுத்து வைத்தேன். முதலில் சில பதிவுகள் எழுதி படிக்க யாரும் வரலையே
என்று வருந்திக்கிடந்தேன். பின்னர் கூகுளார் உதவியுடன் ப்ளாக்கர் நண்பன் தளம் சென்று
திரட்டிகளை இணைத்து அதில் பதிவுகளை இணைத்ததும் வாசகர்கள் வர ஆரம்பித்தார்கள்.
ஆர்வக்கோளாறில்
நிறைய செய்திகளை காப்பி – பேஸ்ட் செய்து கெட்ட பெயர் வாங்கி தமிழ்மணம் திரட்டியில்
இருந்து நீக்கப்பட்டேன். கொன்றைவனத்தம்பிரான் என்ற நண்பரோடு ஒரு மோதல். அப்புறம் அவர்
நம் நன்மைக்குத்தான் சொல்கிறார் என்று காப்பி-பேஸ்ட் கைவிட்டு சொந்த பதிவுகள் மட்டும்
எழுத ஆரம்பித்தேன். 2012 மத்தியில் இருந்து சொந்த பதிவுகள்தான். வாசகர்களும் நண்பர்களும்
பெருக ஆரம்பித்தார்கள். பதிவுகள் எண்ணிக்கை குறைந்தாலும் பக்க எண்ணிக்கை அதிகரித்தது.
நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். ஒரு பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டு நண்பர்களுடன் உரையாட
முடிந்தது.
2014ல் பத்திரிக்கைகளுக்கும்
எழுத ஆரம்பித்தேன். ஆனால் ஒன்றிரண்டு தவிர மீதம் பிரசுரம் ஆகவில்லை! 2016ல் விடாமுயற்சியோடு
பத்திரிக்கைகள் மீது படையெடுத்ததில் ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, பாக்யா, குங்குமம்
போன்ற இதழ்களில் எனது ஜோக்ஸ்கள், குறுங்கதைகள் பிரசுரம் ஆகின. இதனால் வலைப்பூவில் எழுதுவது
சற்று குறைந்து போனது.
இந்த வருடமும்
பத்திரிக்கைகளில் கவனம் செலுத்த இருக்கிறேன். அவ்வப்போது நல்ல பதிவுகளை அதாவது என்
படைப்புக்களை மட்டும் எழுத உள்ளேன். நான் எழுத ஆரம்பித்த புதிதில் வலையில் எழுதிய பலர்
இன்று எழுதாமல் உள்ளது வருத்தமாக உள்ளது.
எழுத ஆர்வம் இருப்போருக்கு
வலைப்பூ ஓர் நல்ல பயிற்சிக்களம்! உங்கள் எழுத்துக்கள் மெருகு பெற பத்திரிக்கைகளில்
இடம் பெற வலைப்பூ ஓர் சிறந்த வழிகாட்டி! எனவே வலையில் வாரம் ஒருமுறையாவது எழுதி பழகுங்கள்
தோழர்களே!
அப்புறம் நண்பர்களே!
எழுத்துக்களில் தவறோ குறையோ திருத்தமோ தேவைப்பட்டால் தயங்காமல் எடுத்துரையுங்கள்! தவறாக
எடுத்துக்கொள்ள மாட்டேன். அந்தவகையில் தில்லையகம் கீதா, துளசி ,ஜீவி அய்யா, போன்றோர்
என் படைப்புக்களில் உள்ள குறையை தயங்காமல் எடுத்துரைத்து உள்ளனர். மற்ற நண்பர்களும்
பிழை இருப்பின் தயங்காது சுட்டி காட்டுக.
இந்த ஏழு ஆண்டுகால
பயணத்தில் உடன் பயணித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்! தொடர்ந்து பயணிப்போம்!
தங்கள் வருகைக்கு
நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteமனம் நிறைந்த நல்வாழ்த்துகள்......
ReplyDeleteவாழ்த்துக்கள் .
ReplyDeleteதளிருக்கு பாராட்டுகள்! சுரேஷூக்கு மேலும் மேலும் சிறப்படைய
ReplyDeleteவாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெளிப்படையான கருத்துகள். நண்பரின் வலைப்பணி தொடரட்டும். வாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் படைப்பில் குறை? எனக்கு ஏதும் தெரிந்ததில்லை. ஆரம்பகாலப் பதிவுகளைப் படித்ததில்லை. எனினும் உங்கள் கற்பனை வளம் என்னை வியக்க வைக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ..
ReplyDeleteஎனது வலைப்பூவும் ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நம்முள் உள்ள ஒற்றுமை அறிந்து மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள். இதைச் சொல்ல மறந்திருக்கேன்.
ReplyDelete