Posts

Showing posts from July, 2015

பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்!

Image
பிள்ளை வரமருளும் புட்லூர் புற்று மாரியம்மன்! ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற அவ்வையாரின் வாக்குப்படி ஆங்காங்கே நம்மை காத்து ரட்சிக்கும் இறைவனுக்கும் இறைவிக்கும் அதி அற்புதமான ஆலயங்களை மன்னரும், மக்களும் கட்டுவித்து வழிபட்டு வருகின்றனர். அதில் பலவித உருவங்களில் சுவாமியும் அம்பாளும் தரிசித்து இருப்பீர்கள்.     திருவள்ளூர் அருகே புட்லூரில் காணக்கிடைக்காத ஓர் அதிசயமாக புற்று வடிவில் அம்மன் அருள்பாலிக்கின்றாள். அந்த புற்று ஓர் கர்ப்பிணி பெண் தலைசாய்ந்து படுத்திருப்பது போல காட்சி தருவதும். இங்கு தொடர்ந்து  ஒன்பது வாரங்கள் வருகை புரிந்து வழிபடுவோருக்கு  பிள்ளை வரம் கிடைப்பதும் அதிசயத்தக்க ஆச்சர்யங்கள் மட்டுமல்ல அம்பாளின் கருணையை உணர்த்தும் நேரடி காட்சிகள் ஆகும். சென்னையில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த புற்று மாரியம்மன் ஆலயமான அங்காள பரமேஸ்வரி ஆலயம். மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி முதல் சக்தி பீடத்தில் அமர்ந்து புற்று ரூபத்தில் பல இடங்களில் கோயில் கொண்டருளி அருள் பாலித்து வருகின்றாள். இங்கே ராமாபுரம் புட்லூரில் பூங்காவனத்தாள் என்ற ப

தமிழக அரசியல் கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்! கதம்ப சோறு! பகுதி 63

Image
கதம்ப சோறு!   தமிழக அரசியல்கட்சிகளின் மதுவிலக்கு நாடகம்!  தீடிரென தமிழகத்து அரசியல்வாதிகளுக்கு மக்கள் மீது ஓர் நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் உதித்துவிட்டது. உடனே வரிந்து கட்டிக்கொண்டு ஆளாளுக்கு மதுவிலக்கு என்று அறிக்கைவிட ஆரம்பித்து மீடியாக்களில் வலம் வந்தனர். ஆனால் பாவம் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்களுக்கு எல்லாம் குடிமகன்கள் கொஞ்சமும் பயப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் எப்படியாவது சரக்கு கிடைத்துவிடும் என்று தெரியும். அதனால் பயப்படாமல் குடித்துக் கொண்டிருந்தார்கள். தமிழக அரசும் டாஸ்மாக்கை மூடப்போவது போல ஒரு பாவ்லா ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் வழக்கம் போல் குடிமகன்களுக்கு எந்தபாதிப்பும் இல்லை! புதிதாக எலைட் பார்கள் திறக்கப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். தலைக்கவசம் மீது இருக்கும் அக்கறைகூட குடிவிலக்கில் இல்லை அரசுக்கு. இரண்டுக்குமே காரணம் வருமானம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. மதுவிலக்கைச்சொல்லி ஆட்சியை பிடித்துவிடலாம் என திமுக நினைக்கிறது. குடிமக்களின் ஆதரவோடு ஜெயித்துவிடலாம் என அம்மா திமுக நினைக்கிறது. பணநாயகம் இருக்கும் வரையில் உண்மையான ஜனநாயகத்த