தளிர் சென்ரியூ கவிதைகள்!
தலைசீவியதும்
தண்ணீர் தந்தது
இளநீர்!

இழவு வீடு
எல்லோராலும் ரசிக்கபட்டது
தொலைக்காட்சி


  பள்ளத்தில் இருந்து 
   உச்சிக்குவந்தது நீர்!
  குடிநீர் தொட்டிகள்!

 குடி கொண்டமையால்
 குடி கெட்டது
 டாஸ்மாக்!


 கட்டாயத் தலைக்கவசம்
 காப்பாற்றியது
 தலைக்கவச விற்பனை!

 நிறைந்த உணவகம்
 நிரம்பவில்லை
 பசி!

ஒளியில் ஆடியும்
இருள் கவ்வியது!
கிரிக்கெட் சூதாட்டம்!


கடும் வெயில்
குளிரூட்டியது
குளிர்சாதனம்!

மருந்தே உணவு!
செழித்தது
மருத்துவம்!

தேனீர் கலந்ததும்
மறைந்தது பால்!
பள்ளிகளில் ஆங்கிலம்!

பருவம் தவறியது
உருவிழந்தது விவசாயம்!
மழை!

வெளிச்சம் கிடைத்ததும்
மறைந்து கொள்கிறார்கள்
நடிகர்கள்!

தொழிற்சாலைகளின்
பெருமூச்சில் கறுத்தது
காற்று!


விளக்கேற்றியும்
விடிய வில்லை
அறியாமை!

சமாதானம் காட்டியும்
சுடப்பட்டது 
வெள்ளைப் புறா!Comments

 1. ஆங்கிலம், அறியாமை என அனைத்தும் அருமை...

  ReplyDelete
 2. பொருத்தமான படங்களுடன் ரசிக்க வைத்தது !

  ReplyDelete
 3. இளநீர், அறியாமை, தலைக்கவசம், டாஸ்மாக் டாப்...எல்லாமே நன்றாக உள்ளது என்றாலும்...

  ReplyDelete
 4. கிரிக்கெட்டும், தொழிற்சாலையும் ரொம்பவே அருமை.

  ReplyDelete
 5. வழமை போல எல்லாமே அருமை !

  ReplyDelete
 6. ஆழ்ந்த சிந்தனையில் விளைந்த
  அற்புதக் கவிதைகள்
  மிகக் குறிப்பாக வெள்ளைப் புறா
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. ஆழ்ந்த சிந்தனையில் விளைந்த
  அற்புதக் கவிதைகள்
  மிகக் குறிப்பாக வெள்ளைப் புறா
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அனைத்துமே அருமை.....

  பாராட்டுகள்.

  ReplyDelete
 9. வாழ்த்துகள்

  வியக்கிறேன்.

  நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?