Monday, April 16, 2018

தினமணி இணையதளக்கவிதை!


இன்றைய தினமணி கவிதை மணி இணையதளத்தில் வெளியான எனது கவிதைநதிக்கரையின் நினைவலைகள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 16th April 2018 03:01 PM  |   அ+அ அ-   |  
ஓடிக்கொண்டிருந்த ஓர் நதி இன்று
முடங்கிக் கிடக்கிறது!
நீரோடிய இடங்களில் எல்லாம் சீமைக் கருவேல
மரங்கள் வேர்பிடித்திருக்கின்றன!
உயிரான நீர் ஓடவில்லை!
உடலான மணல் காணவில்லை!
நதி பெருக்கெடுத்து நுரைததும்ப ஓடிய நாட்கள்
நினைவில் பெருக்கெடுக்கின்றன!
ஆடிப்பெருக்கில் மக்கள் கூடி நின்றபோது
ஆர்பரித்து ஓடிய நதியலைகள் ஓய்ந்து போகவில்லை!
ஆலமரத்துக்கரையோரம் படித்துறையில்
பசங்களோடு உள் நீச்சல் ஆடிய நதி!
காலமான பெருசுகளை  கரைசேர்த்து முழுகி
கரையேற்றிய நதி!
முப்போகம் விளைச்சளுக்கு முழுசாக
பாசனம் தந்த பாசமிகு நதி!
ஊர்த்தாகம் தீர்த்து வைக்க ஊருணியாக
வலம் வந்த நதி!
ஐப்பசி கார்த்திகை அடைமழையில் ஆர்பரித்து
பொங்கி வெள்ளம் வடித்த நதி!
சித்திரை வெயிலில் திருவிழா மைதானமாகி
தித்தித்த நதி!
அத்தனையும் இழந்து அமங்கலியாய்
அழுதுவடிகையில் ஆற்றாமை பெருக்கெடுக்கிறது!
மனிதனின் பேராசை மயக்கத்தில்
மரணித்த நதிக்கரையில் இன்னும் ஜீரணிக்கவில்லை
நதிக்கரை நினைவலைகள்!
 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி!

Wednesday, April 11, 2018

தினமணி கவிதை மணியில் வெளியான எனது கவிதைகள்!

தினமணி கவிதைமணியில் கடந்த வாரமும் இந்தவாரமும் வெளியான எனது கவிதைகள் உங்களின் பார்வைக்கு!

நிழலில் தேடிய நிஜம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 08th April 2018 03:15 PM  |   அ+அ அ-   |  
நிழல்களில் சில நிஜங்கள் சுடவும் செய்யும்!
நிஜத்தில் சில நிழல்கள் ஒளிந்தும் போகும்!
நினைவுகளில் பதிந்த நிஜங்களை நிழலாக்கி
புனைவுகளில் பொலிவூட்டி ஓடவைக்கிறார்கள்!
நினைவே இனிமை என்பதால் நிழல் தரும்
நினைவுகளில் மூழ்கி நிஜத்தினை தொலைக்கின்றனர்!
நிழல் எப்பொழுதும் நிழல்தான்!
நிஜம் எப்பொழுதும் நிஜம்தான்!
நிழல் நிஜமாக முடியாது!
நிஜத்தில் தொலைத்த கனவுகளுக்கு நிழல்
ஓர் வடிகாலாகும்!
ஓடையிலே நீர் இருக்கும்வரை வடிகாலில்
புரண்டோடும்! வற்றிவிட காய்ந்து போகும்!
நிழலின் ஆயுள் அவ்வளவே!
நிஜத்தின் பிம்பம் நிழல்! நிஜம் சரியும் போது
நிழலின் பிம்பமும் சரிந்து போகின்றது!
ஒளியின் திசைக்கேற்ப நிழல்விழுகின்றது!
உள்ளத்தின் கட்டளைக்கேற்ப நிஜம் நடக்கின்றது!
நிஜங்களை படம்பிடித்து நிழலில் காட்டுகையில்
ரசம் சேர்த்து சிறிது ருசி கூட்டுகையில்
நிஜம் நீர்த்துப்போகின்றது!
பொய் பிம்பங்கள் அலங்கரித்து ஆடுகையில்
மெய் பிம்பம் மவுனத்தால் வெல்கின்றது!
நிழலிலாடும் நிஜங்கள் ரசிகனின்
நினைவைக் கவரலாம்! நிஜத்தில் நிற்கும்
மாந்தரே மக்களின் மனதை வெல்லலாம்!
நிழலில் தேடிய நிஜங்கள்  
ஒப்பனை போட்ட முகங்கள்!
ஒப்பனை கலைந்து போகையில்
நெருப்பாய் சுடும் நிஜங்கள்!அலைபாயும் மனதினிலே: நத்தம் .எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 01st April 2018 03:40 PM  |   அ+அ அ-   |  
அலைபாயும் மனதினிலே
அமைதி இருக்காது!
உலைபோல கொதிக்கும் நெஞ்சினிலே
உறுதி இருக்காது!

கிளைவிட்டு கிளைதாவும் மந்திபோல
முளைவிடும் முன்னே மாறும் எண்ணங்களாலே
தளைகள்தான் துள்ளிவரும். நிலைபெறாது.
கலைந்து போகும் மேகக்கூட்டம் போல
நிலைபெறாது நீங்கும் கனவுகளாலே
வாழ்க்கை இனிக்காது!

மணலதினில் மழலைகள் கட்டும் வீடுபோல
மனதினிலே அலையும் எண்ணங்கள்
மகிழ்ச்சியினை நிலைக்க செய்யாது!
திடமில்லா மனதினிலே உதிக்கும் எண்ணங்கள்
தடமில்லா பாதையில் செல்லும் ஊர்திபோல
தடுமாறி  நிலை சாயும்!

உறுதியான எண்ணங்களே உன்னை உயர்த்தி
இறுதிவரை ஏற்றத்தில் வைக்கும்!
அலைபாயும் மனதினிலே நிம்மதியில்லை!
காற்றிலாடும் இலைபோல கலங்கிடுமே வாழ்க்கை!

நிலையான எண்ணங்களை நிறுத்திடவே
கலையாது உன் கனவு வாழ்க்கையே! 

குமுதம் வார இதழில் என் ஒரு பக்க கதை!

11-4-18 ம் தேதியிட்ட குமுதம் வார இதழில் எனது ஒருபக்க கதை ஒன்று இடம்பெற்று என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. விவரம் தெரிவித்த தமிழக எழுத்தாளர் குழு நண்பர் ஏந்தல் இளங்கோ மற்றும் ரேகா ராகவன் சாருக்கும் தமிழக எழுத்தாளர் குழும அனைத்து நண்பர்களுக்கும் குமுதம் குழுமத்திற்கும் நன்றி! 

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, April 2, 2018

தளிர் ஹைக்கூ கவிதைகள்பறித்துச்செல்கிறது!
தடுப்பாரில்லை!
பழுத்த இலைகளை காற்று

தொட்டிக்குள் அடங்கிவிடுகிறது

வளர்ச்சி!
வாஸ்துமீன்!

எல்லோரும் உறங்குகையில்

விழித்துக்கொண்டிருக்கிறது!
இரவு!

நல்வரவு சொன்னதும்

மிதித்தபடி கடந்தார்கள்!
மிதியடி

மழைவிட்ட இரவில்

நிரந்தரமாய் அணைத்துக்கொண்டது!
குளிர்!

மொழி தெரியா பாடல்!

ஈர்க்கிறது!
இசை!

அழுகிறது குழந்தை!

சாப்பிட மறுக்கிறது
பொம்மை!

பசித்துக்கொண்டே இருந்தது

நிறையவே இல்லை!
கோயில் உண்டியல்!

அடித்ததும் ரசித்தார்கள்

கோவில் திருவிழாவில்
மேளம்!

வெட்ட வெட்ட

வளர்ந்துகொண்டே இருக்கிறது!
தீவிரவாதம்!

நாள் முழுக்க உண்ணாவிரதம்!

யாரும் முடித்து வைக்கவில்லை!
ஏழையின் பசி!

மறைந்த சூரியன்!

மலர்தூவி அஞ்சலி செய்தன
மரங்கள்!

எதிர் வீட்டின் அழகு!

மறைத்துக்கொண்டிருந்தது!
தன் வீட்டு அழுக்கு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே! நன்றி!
Related Posts Plugin for WordPress, Blogger...