Posts

Showing posts from March, 2014

யார் கடவுள்?

Image
யார் கடவுள்? உலகம் உதித்ததிலிருந்தே உயிர்பெற்றிருக்கும் ஓர் கேள்வி யார் கடவுள்? கடவுள் உண்டென்றால் சொல்லுங்கள் யார் கடவுள்? பகுத்தறிவாளர்கள் தர்க்கவியலாளர்கள் கடவுள் மறுப்பாளர்கள் இன்னும் பலரும் கேட்கிறார்கள் யார் கடவுள்? விடைதான் கிடைத்த பாடில்லை! ஆன்மீக வாதிகள்! ஆண்டவனைத் தொழுபவர்கள்! இறை நம்பிக்கை மிகுந்தோர்! சமய குருமார்கள்! சாத்திரம் படைப்பவர்கள்! வேதாந்திகள்! ஞானிகள் என்று எல்லோரும் ஏதோ ஒன்றை  “கடவுள்” என்று அறுதியிட்டு சொன்னாலும், அது எது? எப்படி? ஏன்? என்று விவரம் கேட்கிறது பகுத்தறிவாளர்கள் குழு! கடவுள்தான் மனிதனைப் படைத்தானா? அவன் தான் எல்லோரையும் காத்தானா? அப்படியெனில் ஏன் ஏற்ற தாழ்வு? எதற்கு அடித்துக் கொள்ள வேண்டும்! பஞ்சமும் பசியும், பட்டினியும்! வெள்ளமும் புயலும்! விபத்தும் கொலையும் கொடுமையும் ஏன் தொடர வேண்டும்! நல்லவர்கள் கெட கெட்டவர்கள் வாழ்வது ஏன்? இப்படியொரு கேள்வி எழுகிறது! கடவுள் உண்டெண்றால் நீ பார்த்திருக்கிறாயா? பார்க்க முடியாது! உணரத்தான் முடியுமென்றால் உணர்ந்திருக்கிறாயா? இப்படி நீள்கிறது

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 49

Image
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 49 வணக்கம் அன்பர்களே! சென்ற வாரம் மூவகை மொழிகள் பற்றி அறிந்துகொண்டிருப்பீர்கள். அவை மிக சுலபமான இலக்கணமாக இருந்தது என்றும் சொல்லியிருந்தீர்கள். இன்று பார்க்க போவதும் சுலபமான ஒன்றுதான். அதற்குமுன் சென்ற பகுதியை நினைவு கூற இங்கு சென்று வரவும். மூவகை மொழிகள்!    இன்று நாம் பார்க்க போவது திணையும் பாலும்! ஆஹா! இது ஏதோ உணவு சமாச்சாரம் என்று நினைத்து விடாதீர்கள். திணை என்பது பல பொருள்களை சொல்லும் ஒரு சொல். திணைக்கு ஒழுக்கம், குலம், இனம், என்று பல பொருள்கள் உண்டு. உலகத்து பொருட்களை எல்லாம் இனம் படுத்தி உயர்திணை, அஃறிணை என்று இருவகைப் படுத்தி உள்ளனர். உயர்திணை: பகுத்தறியும் திறன் படைத்த இனத்தை உயர்திணை என்று சொல்லுகிறோம். எடுத்துக்காட்டாக, மனிதர், தேவர், கடவுள், நரகர், அசுரர் போன்றோர் உயர்திணையில் வருவர். அஃறிணை: பகுத்தறியும் திறன் இல்லாத மற்ற பொருள்கள் உயிருள்ளவையாக இருந்தாலும் உயிரில்லாதவையாக இருந்தாலும் அவை அஃறிணை என்று வழங்கப்படும். எடுத்துக் காட்டாக, மயில், எருது, மண், மரம், செடி, போன்றவை அஃறிணை பொருட்களாகும்.     இந்த

வழிப்போக்கனுக்கு உதவிய விக்கிரமாதித்தன்! பாப்பா மலர்!

Image
வழிப்போக்கனுக்கு உதவிய விக்கிரமாதித்தன்! பாப்பா மலர்! ஒரு சமயம் விக்கிரமாதித்த மஹாராஜா அயல் நாடுகள் எல்லாம் பயணம் செய்துவரக் கிளம்பினார். பல்வேறு நகரங்களையும் புனித ஸ்தலங்களையும் கண்டுகளித்துவிட்டு, மலைகள், நதிகள் பல கடந்து ஒரு நகரத்தினை அடைந்தார் விக்கிரமாதித்தன்.   அந்த நகரத்தில் ஆகாயம் தொடும் அளவிற்கு உயர்ந்த மாளிகைகளும் கோபுரங்கள் உடைய கோவில்களும் நிறைந்திருந்தன. விக்கிரமாதித்தன் நகரின் வெளியே இருந்த ஒரு விஷ்ணு கோவிலின் குளத்தில் இறங்கி நீராடிவிட்டு பிறகு கோவிலுக்குள் சென்றார்.இறைவனை வணங்கினார்.   “ பிரபோ! உன்னைப் போற்றுவதற்கு மௌனமாக இருப்பதொன்றே சிறந்தவழி என்பதை அறிவேன்; வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட விஷ்ணுவை பிரம்மாவினால் கூட சரியாக அறிய முடியாது. உன்னையன்றி வேறு எதைப்பற்றியும் சிந்திப்பது இல்லை. நான் உன்னை எப்போதும் பூஜித்து வர அருள் புரியவேண்டும். கைகளாலோ,கால்களாலோ, செயல்,வாக்கு உடல் ஆகியவற்றால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்ட என்னுடைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடு இறைவா! கருணைக்கடலே என்னை வாழ்த்தி அருளுவாய்!” இவ்வாறு இறைவனை வணங்கிய விக்கிரமாதித்தன் கோவில் பிரகாரத்தை

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்!

Image
சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்! எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல்வேறு காலத்தில் பல்வேறு ஞானியர்கள் தோன்றி இந்து மதத்தில் சீரிய மாற்றங்கள் புகுத்தினர். அப்படி ஆதி சங்கர பகவத் பாதர் உருவாக்கியது ஷன்மத வழிபாடு.    இந்து சமயத்தில் காணாபத்யம் என்னும் கணபதி வழிபாடு,கௌமாரம் எனப்படும் முருகர் வழிபாடு, சைவம் எனப்படும் சிவ வழிபாடு, சாக்தம், எனும் சக்தி வழிபாடு, வைஷ்ணவம் எனும் நாராயணர் வழிபாடு, சௌரவம் என்னும் சூரியர் வழிபாடு. என ஆறு வகையான வழிபாடுகள் உருவாக்கினார்.    இத்தகைய ஆறுவகை வழிபாட்டில் சிறப்பானதாக போற்றப்படுவது சாக்தம் என்னும் சக்தி வழிபாடு. சக்தியைப் பல உருவங்களில் பலவிதமாக வழிபடுவதே இந்த சமயம் காட்டும் நெறி . ஆனால் சக்தி வழிபாடு மிக மிகப் பழமையானது . ஒரு காலத்தில் உலகெங்கும் பரவியிருந்தது . ஸ்ரீவித்யா எனப்படும் சக்தி வழிபாடு          இதன் மிக முக்கிய அங்கம் ஸ்ரீவித்யா மார்க்கம் . இந்த மார்க்கத்தில் ஜகத்ஜனனியாகிய அம்பிகையைத் திரிபுரசுந்தரியாக வழிபடுகிறோம் , ஸ்ரீலலிதா , காம