Posts

Showing posts from November, 2015

சுகங்கள் நல்கும் கார்த்திகை சோமவார விரதம்!

Image
சுகங்கள் நல்கும் கார்த்திகை சோமவார விரதம் !   தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் சுபகாரியங்கள் நடத்துவது சிறப்பாகும். விரதங்கள் கடைபிடிக்கவும் கார்த்திகை மாதம் உகந்ததாகும். சங்க இலக்கியங்களிலும் கார்த்திகை மாதம் சிறப்பித்துக் கூறப்படுகின்றது.    கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் ஈஸ்வரனுக்கு மிகவும் உகந்த நாளாகும். சோகங்களைப் போக்கி சுகங்களை தரவல்லது கார்த்திகை சோமவார விரதமாகும்.      கார்த்திகை மாத சுக்ல பட்ச அஷ்டமி திதியில் தோன்றியவர் சோமன் எனக்கூடிய சந்திரன். இவருக்கு தட்சன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பு பாராட்டினான்.    மற்ற பெண்கள் தந்தையிடம் முறையிட்டார்கள். தட்சன் வெகுண்டு போய் சந்திரனை தேய்ந்து போகும் படி சாபம் இட்டார். தன்னுடைய ஒளி தேய்ந்து போவதை கண்டு வேதனையடைந்த சந்திரன் சிவபெருமானை சரணடைந்தார். சிவபெருமானும் சந்திரனை தன்னுடைய தலையில் சூடி பாதி நாள் வளர்ந்தும் பாதி நாள் தேய்ந்தும் இருக்கும்படி சாபத்தை மாற்றி அமைத்தார்.     இவ்வ

தித்திக்கும் தமிழ்! பகுதி 24 தமிழர்கள் கொண்டாடிய தீபாவளி!

Image
தித்திக்கும் தமிழ்! பகுதி 24  தமிழர்கள் வாழ்வில் விளக்கினுக்கு பெரும்பங்கு உண்டு. எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் விளக்கேற்றி வழிபடுவது தமிழர் மரபு. இருளினை அகற்றி ஒளியினை தருவது விளக்கு. பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் அம்சம். அந்திப் பொழுதிலும் அதிகாலையிலும் வாசல் தெளித்து கோலமிட்டு அகல் விளக்கினை ஏற்றி வைத்து வழிபட வீட்டின் இருள் அகன்று அருள் சிறக்கும் என்பது பழந்தமிழர் நம்பிக்கை.      இன்று தீபாவளி என்று ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு பட்டாசுகள் வெடித்து இனிப்புக்கள் உண்டு மகிழ்கிறோம். பண்டைக் காலத்தில் இந்த தீபாவளிக்கு நிகராக கார்த்திகைத் திருநாள் கொண்டாடப்பட்டது. சங்க இலக்கியங்களில் கார்த்திகை திருநாள் குறித்து பல பாடல்கள் உண்டு.     கார்த்திகை மாதத்தில் முழுநிலவு நாளன்று கிருத்திகை நட்சத்திரம் உதிக்கும் நன்னாளில் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவர்.  அகநானூறில் 141ம் பாடல் இதைப் பற்றி விரிவாக கூறும்.    இந்த வருடம் கார்த்திகை முழுநிலவு கிருத்திகை நாள் வரும் புதனன்று வருகிறது. தமிழர்களின் சிறப்பான பண்டிகையை அன்று இல்லங்கள் தோறும் அகல்விளக்கேற்றி இருளகற்றி கொண்டாடி மக

குள்ளநரியின் விவசாயம்! பாப்பா மலர்!

Image
குள்ளநரியின் விவசாயம்!  பாப்பா மலர்!   ரொம்ப காலத்துக்கு முன்னாலே ஒரு காட்டுல குள்ள நரி ஒண்ணு வாழ்ந்து வந்துச்சு. அதற்கு அறிவு ரொம்ப அதிகம். தன்னோட அறிவாற்றலை பயன்படுத்தி கஷ்டம் இல்லாம நிறைய லாபம் சம்பாதிச்சிட்டு இருந்தது. எல்லா விலங்குகளும் அந்த குள்ள நரியை பொறாமையா பார்த்தது.  பின்னே அந்த காட்டு ராஜாவுக்கே குள்ள நரி அமைச்சரா ஆயிருச்சே!       அமைச்சரா ஆனா பின்னாலும் நரியாலே சும்மா இருக்க முடியலை!  இன்னும் எப்படி சம்பாதிச்சு வாழ்க்கையிலே முன்னேறலாம்னு யோசிச்சுது. அப்படி அது ஒருநாள் யோசிச்சுக்கிட்டே ஆத்தங்கரையோரமா வர்றப்ப அங்கே ஒரு முதலை கரையை விட்டு மேலேறி ஓய்வெடுத்துக்கிட்டு இருந்துச்சு.    “ என்ன அமைச்சரே? இந்த பக்கம்?” அப்படின்னு கேட்டுது முதலை.    “ என்னத்தை பெரிய அமைச்சர் வேலை! அரசவை கூடுவதே மாதத்தில் சில நாட்கள்தான்!  அதிலும் உருப்படியாக ஒன்றும் செய்ய வாய்ப்பில்லாமல் போகிறது? ஏன் தான் அமைச்சர் ஆனோம் என்று வருத்தமாக இருக்கிறது? ஓய்வு நேரத்தில் ஏதாவது உருப்படியாக செய்து சம்பாதிக்கலாம் என்று தோன்றுகிறது!” சலித்து கொண்டது நரி.    “ அரசாங்க உத்தியோகத்தில் இருந

ஆனந்தவிகடன் தலையங்கமும் எனது கேள்வியும்!

Image
ஆனந்தவிகடன் தலையங்கமும் எனது கேள்வியும்! தமிழ்நாட்டை வெள்ளக்காடாக்கிய பெருமழை சிலநாட்களாக ஓய்ந்த நிலையில் இன்று ஆனந்தவிகடன் வார இதழை வாசிக்க நேர்ந்தது. முதல்வரைப் பற்றி ஒரு பெருங்கட்டுரை இந்த நாலரை ஆண்டு ஆட்சியின் அவலங்களை பட்டியலிடுகிறது ஓர் கட்டுரை. அனைத்தும் நிஜங்களாக சுடுகிறது. இவ்வளவு தைரியமாக விமரிசித்து எழுதிய நிருபர் குழுவினருக்கு முதலில் பாராட்டுக்கள். மற்றபடி விகடன் பழைய விகடன் வாசித்த எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை! இதழ் முழுக்க சினிமா செய்திகள், பேட்டிகள், துணுக்குகள்தான்.    அஞ்ஞான சிறுகதை, பாரதிதம்பி கட்டுரை, பத்து செகண்ட் கதைகள் கொஞ்சம் கவர்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் நான் சொல்ல வந்தது விகடனின் இந்தவார தலையங்கம் பற்றி.     வெள்ளக்காடான தமிழகத்தை மீட்க அரசு நடவடிக்கை அவசியமாக தேவைப்படும் நேரத்தில் தேவை மக்கள் நடவடிக்கை என்று தலைப்பில் தொடங்குகிறது தலையங்கம். பேரழிவை விளக்குகிறது முதல் பத்தி. அடுத்த பத்தி அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததை செல்லமாக கண்டிக்கிறது.    அதற்கப்புறம் விகடன் சொல்லுவதைத்தான் என்னால் ஏற்க முடியவில்லை! அரசே செய்யவேண்ட

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 55

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 55 1.    இப்ப எந்த குடி முழுகி போவுதுன்னு இவ்ளோ கூட்டம் வாசல்ல வந்து நிற்குது…! பெய்ஞ்ச மழையிலே குடிசை முழுகிப்போனவங்க கூட்டம் தலைவரே…! 2.    தலைவர் வெள்ளப்பாதிப்புல இருந்தாராமே…! ”நிவாரண நிதி’ வந்ததும் பாதிப்பெல்லாம் பாதியா குறைஞ்சிருச்சாம்! 3.     “வடிகாலா” இருப்பேன்னு சொன்ன தலைவரை உடனே திருப்பி அனுப்பிச்சிட்டாங்களாமே மக்கள்..?   அப்ப இடத்தை அடைச்சிக்கிட்டு நிக்காதீங்கன்னு சிம்பாலிக்கா சொல்லிட்டாங்களாம்! 4.    எவ்வளவோ முயற்சி பண்ணியும் பஸ்ஸை பிடிக்க முடியலை..!    ஏன் லேட்டாயிருச்சா…? வெள்ளத்திலே அடிச்சிக்கிட்டு போயிருச்சு! 5.    தலைவர் வெள்ளத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாயும் போர்வையும் தர்றாராமே…!   ஆமாம்! எல்லா வாக்குகளையும் வாரிச்சுருட்டிடலாங்கிர நினைப்புல இருக்காரு! 6.     என் வொய்ஃபோட பலவருஷ ஆசை இன்னிக்கு பத்து பைசா செலவில்லாம் நடந்துருச்சு…!    எப்படி…! எந்த ஆசை..? போட்டுல போகணுங்கிற ஆசைதான்! 7.    பொண்ணு வீட்டுக்காரங்க வேளச்சேரிதான்…! அதுக்காக வரதட்சணையா ஒரு போட் கேக்கறது எல்லாம் ரொம்ப ஓவரா

பார்வை!

Image
பார்வை! அந்த கல்லூரி பேருந்து நிறுத்தம் முன் கல்லூரிப் பெண்களின் கூட்டம் குவிந்துகிடந்தது. தற்கால பேஷணுக்கு ஏற்ப விதவிதமான ஆடைகளில் விதவிதமான சிகை, முக அலங்காரத்துடன் ஏகப்பட்ட கனவுகளை சுமந்த அந்த இளம்பெண்கள்களின் கண்கள் எதையோ மேய்ந்து கொண்டிருந்தன.    சற்றுத்தள்ளி எதிர் பேருந்து நிறுத்தத்தில் சில கல்லூரி மாணவர்கள் இந்த பெண்களை பார்ப்பதற்கென்றே காத்துநின்றார்கள். “ என் ஆளையே காணலையேடா!” ”பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கா பாரு எவ்வளோ திமிரு!” “ ஒரு தடவை கூட திரும்பி பார்க்க மாட்டேங்கிறாடா! என்று கலவைகளாய் அவர்கள் தங்கள் செல்போன்களை தடவியபடியே பேசிக்கொண்டு இருந்தனர்.    “ விட்டா அப்படியே ஆளையே கடிச்சு சாப்பிட்டுருவானுங்க!” அவனுங்க பார்வையே சரியில்லை! நம்ம பஸ் ஏறற வரைக்கும் பார்வையிலேயே கற்பழிச்சிருவானுங்க! இதொ பாருடி இவனுக்கு பெரிய சிவகார்த்திகேயன்னு நினைப்பு!  ஒண்ணு பாரு எப்படி பேண்ட்டை கிழிச்சிக்கிட்டு நிக்குது! பெண்களும் அவர்களுக்கு சளைக்காமல் கமெண்ட்களை அள்ளி வீசிக்கொண்டு காதில் இயர்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர்.    “ ஏய் லீலா! அதோ பாருடி ஒரு பெருசு உன்ன

கடவுளைக் கண்டேன்!

Image
கடவுளைக் கண்டேன்! மழை இரவு! விட்டு விட்டு வலுத்த மழையின் சிதறல்கள் நாட்டு ஓடுகளின் மீது விழுந்து தெறித்து ஓடிக்கொண்டிருந்தது. மழையின் காரணமாக எந்த நேரமும் மின்சாரம் தடைபடும் என்பதால் சீக்கிரமே சாப்பிட்டு படுத்த நான் ஒரு தூக்கம் தூங்கி முழித்து அடுத்த தூக்கத்திற்கான ஆயத்தத்தில் இருந்தேன்.     வெளியே மழையின் சத்தத்தோடு வயல்களில் தவளைகளின் குறட்டை ஒலியும் சேர்ந்து ஓர் மாதிரி இசையை ரீ-ரிகார்டிங்காக தர தூக்கம் கண்ணைச் சொக்கியது.      அதிகாலை! எழுந்து குளித்து கோயிலுக்குள் பூஜை செய்யச் செல்கிறேன். பிள்ளையார் அப்படியே தும்பிக்கை நீட்டி வரவேற்க ஒரு நிமிடம் அதிர்ந்து, பிள்ளையாரப்பா! நீங்க சிலையா இருப்பீங்க! இப்ப உயிரோட நிஜமா வந்து காட்சி தர்றீங்களே! இது என்னோட பாக்கியம்! கணபதியே சரணம்!  சரணம்!    “ என்னப்பா சுரேஷா! ஒருவாரமா தொடர்ந்து மழை கொட்டிக்கிட்டு இருக்கு! என்னோட கோயிலும் ஒழுகுது! நீ என்னடான்னா! அதிகாலையிலே நல்ல பச்சைத் தண்ணியிலே என்னை குளிப்பாட்டிடறே! கூட ஒழக்கு பாலையும் வேற என் தலையிலே கவிழ்க்கிறே! எனக்கு ஜலதோஷம் பிடிக்காதா? ஜுரம் வராதா? ஏம்ப்பா இப்படி என்னை சாவடிக்க