கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 53
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 53
1.
தீபாவளிக்கு
நீங்க கொடுத்த ஜாங்கிரியிலே இனிப்பே போடலியே….!
ம்… அது ஜாங்கிரி இல்லே முறுக்கு!
2.
நம்ம
தலைவர் போன தீபாவளிக்கு வெடியா வெடிச்சு இந்த கட்சியை துவக்கினார்…
அப்புறம்!
இந்த தீபாவளிக்கு கட்சி புஸ்வானமா
மாறிடுச்சு!
3.
தீபாவளிக்கு
ரிங் போடறேன்னு சொல்லி மாமனார் ஏமாத்திட்டாரா எப்படி?
செல்போன்ல ரெண்டு ரிங் போட்டு
காண்பிச்சு இதான் மாப்பிள்ளை ரிங்னு சொல்லிட்டாரே!
4.
மாப்பிள்ளை
கொஞ்சம் பயந்த சுபாவம்!
அதுக்காக கம்பி மத்தாப்பை கூட
ஹெல்மெட் போட்டுகிட்டுதான் கொளுத்துவேன்னு சொல்றது கொஞ்சம் அதிகம்…!
5.
தீபாவளி
ஸ்விட்ஸ்லே எங்க வீட்டை யாரும் அசைக்க முடியாது…!
அவ்ளோ டேஸ்டா இருக்குமா?
நீ வேற… வாயில போட்டு அசைக்க
முடியாதுன்னு சொன்னேன்!
6.
மாப்பிள்ளை
ரொம்ப ஜொள்ளு பேர்வழியா இருக்கார்…!
தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் ஆயிருச்சான்னு
கேட்டா யாரு மாமா அது கங்கா அவ குளிக்கறதை நான் பார்க்கலையேன்னு சொல்றார்!
7.
என்னப்பா
இது புதுசா ஆளுங்கட்சி வெடின்னு சொல்றே?
பத்த வைச்சதும் கால்ல விழுந்து
அப்புறம் பறந்து போய் வெடிக்கும் அதான்!
8.
மோடி வெடியா? புதுசா இருக்கே!
ஆமாம் சார்! பத்த வைச்சதும் ஊர் ஊரா பறந்து போயிரும்!
9.
தீபாவளிக்கு
வந்த மாப்பிள்ளை வாயடைச்சு போயிட்டாரா எப்படி?
பண்ணி வைச்சிருந்த லேகியத்துல
ஒரு உருண்டை கொடுத்தேன் அப்புறம் வாயை திறக்க முடிஞ்சாத்தானே!
10. என்னம்மா இட்லி கல்லு மாதிரி இருக்குன்னு
மனைவிகிட்டே கேட்டது தப்பா போயிருச்சு!
அப்புறம்?
தீபாவளியும் அதுவுமா நிலை ரொம்ப
கிரிட்டிகல்லா ஆயிருச்சு!
11. தீபாவளி பர்ச்சேஸ் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?
ஒரு வழியா என் பர்ஸை சேஸ் பண்ணி முடிக்கும்படியா
முடிஞ்சது!
12. அந்த துணிக்கடையில மட்டும் அப்படி கூட்டம் அள்ளுதே
ஏன்?
ரெண்டு புடவை எடுத்தா ஒருகிலோ துவரம்பருப்பு கொடுக்கிறதா
சொல்றாங்க!
13. துணி எடுக்கப் போன என் மனைவி எல்லாத்தையும் பாத்து
கலைச்சுப் போட்டுட்டா!
அப்புறம்?
எடுத்த துணிகளை மடிச்சு வைக்கிறதுக்குள்ள
சேல்ஸ்மேன் களைச்சுப் போயிட்டார்!
14. தலைவர் எதுக்கு பந்தல்ல பேசாம வெயில்ல நின்னு பேசிக்கிட்டு
இருக்கார்?
அவரை யாரோ நமுத்துப்போன பட்டாசுன்னு சொல்லிட்டாங்களாம்
அதான் காய வைக்கிறார்!
15. தீபாவளிக்கு எதிர்வீட்டுல இருந்தவங்க வெடிச்ச பட்டாசாலே
வயிறே கலங்கிருச்சு!
அட நீ வேற என் மனைவி செஞ்ச பலகாரத்தை சாப்பிட்டப்பவே
என் வயிறு கலக்கிருச்சு!
16. தலைவர் திடீர்னு அண்டை நாடுகளோடு சுமுகமா இருக்கணும்னு
பேசறாரே ஏன்?
சீனப் பட்டாசை நிறைய கொள்முதல்
பண்ணி வைச்சிருக்கார்!
17. மன்னர் ஏன் இப்படி மருந்து குடித்தது போல முகத்தை
வைத்துக்கொண்டுள்ளார்!
ராணியார் தன் கையால் செய்த தீபாவளி விருந்தை சாப்பிட
சொல்லி வற்புறுத்துகிறாராம்!
18. மந்திரியாரே! கோட்டை வாயிலை யாரோ தாக்குவது போல வெடிச்சத்தம்
கேட்கிறதே… எதிரி புகுந்துவிட்டானா…?
பயப்படாதீர்கள் மன்னா! அது நம் மக்கள் வெடிக்கும்
தீபாவளி வெடிச்சத்தம்தான்!
19. தீபாவளிக்கு போத்தீஸ்லதான் துணிஎடுக்கணும்னு வீட்டம்மா
சொல்லிட்டாங்க…!
பட்ஜெட்ல எனக்கு ரெண்டு தோத்தீஸ் மட்டும்தான் மிஞ்சுனது!
20. தீபாவளி சீட்டு போட்டிருந்தியே அப்புறம்
என்ன ஆச்சு!
கொஞ்சம் விரட்டி பிடிக்க வேண்டிய
நிலைமை ஆயிருச்சு!
21. எங்கள் தலைவர் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் வாடும்
வேளையில் கடைக்கு கடை ஜாமின் விற்கும் இந்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன்!
தலைவரே….! அது ஜாமூன்!
22. உங்க கட்சி தலைவர் ரோல் மாடலா இருக்காருன்னு
சொல்றியே எந்த விஷயத்துல…!
ரோல் பட்டாசுக்கு மாடலா இருக்கிறதைத்தான்
அப்படி மரியாதையா சொல்லிக்கிறார்!
23. உங்க பையனை கொஞ்சம் கண்டிச்சு வையுங்க! ராக்கெட்
விட்டுண்டு திரியறான்..!
தீபாவளின்னா இது சகஜம்தானே…!
அவன் பொண்ணுங்க மேல ராக்கெட்
விட்டுகிட்டு இருக்கான்!
24. மாப்பிள்ளையை கவர ரிங் போடப்போறதா உன் மாமனார் சொல்லிக்கிட்டிருந்தாரே
போட்டாரா…?
’கவரிங்’ தான் போட்டார்!
25. எங்க வீட்டுல தீபாவளி ஸ்விட்ஸ் செய்தாங்க நிமிஷத்துல கரைஞ்சு போயிரும்!
எங்க வீட்டுல ஸ்விட்ஸ் செஞ்சாங்கன்னா நிமிஷத்துல
மறைஞ்சு போயிருவோம்!
அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு
குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!
அனைத்தும் சரவெடிதான் நண்பரே ஸூப்பர்
ReplyDeleteஜோக் சர வெடியை ,வெடிச் சிரிப்புடன் படித்து மகிழ்ந்தேன் :)
ReplyDeleteஅனைத்து நகைச்சுவையும் அருமை.
ReplyDeleteதீபாவளி சிரிப்பு வெடி சூப்பர்!
ReplyDeleteஅனைத்தும் தீபாவளி இனிப்பு!
ReplyDeleteசுவைத்தேன் நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ரசித்தேன்
ReplyDeleteசிரித்தேன் நண்பரே
நன்றி
முதல் ஜோக்கிலேயே வெடிச் சிரிப்பு ஆரம்பமாயிடுச்சு!
ReplyDeleteதீபாவளி வரும் பின்னே, தளிர் நகைச்சுவை வரும் முன்னே. நன்றி.
ReplyDelete25x25x25x25x25 முறை குலுங்கி குலுங்கி சிரித்திருக்கிறோம் அய்யா... இன்று கண்டிப்பாக நன்றாக தூங்குவோம்... பர்ஹிவுக்கு நன்றி அய்யா... நான் தங்கள் தளத்திற்கு புதியவன் என்னுடைய வலைப்பூ ethilumpudhumai.blogspot.in... தொடர்கிறேன் அய்யா
ReplyDeleteதீபாவளி சரவெடிகளை ரசித்தேன் நண்பரே...
ReplyDeleteஅனைத்தும் வெடி சிரிப்பு!
ReplyDeleteஅட்டகாசம்.....அனைத்தும் அருமை
ReplyDeleteசிரிக்க வச்சதுலாம் போதும். லேப்டாப்பை மூடி வச்சுட்டு.., மண்ணி பலகாரம் சுட்டுக்கிட்டு இருக்காங்க. போய் ஹெல்ப் பண்ணுற வேலைய பாருங்க சகோ.
ReplyDeleteஅனைத்தும் சர வெடி..... ரசித்தேன் நண்பரே.
ReplyDeleteதீபாவளி நெருங்க நெருங்க சரவெடி உங்கள் தளத்திலும் போல ! அஹஹ்ஹ ரசித்தோம்...
ReplyDeleteஹாஹாஹா, பருப்பு விலைதான் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்ட செய்தி "தினகரன்" தினசரியில் கூட வந்திருக்கே! :) மற்ற சிரிப்பெல்லாம் வெடிச்சிரிப்புத் தான்! என்றாலும் நம்ம ஊர் மக்கள் புடைவையோடு துபருப்பு என்ன? பச்சைமிளகாய் கொடுத்தால் கூடக் கூட்டம் கூடி வாங்குவாங்க தான்! :)
ReplyDelete