குழந்தை மனசு! ஒருபக்க கதை!
குழந்தை மனசு! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. நகரின் பிரபலமான அந்த ஐஸ்க்ரீம் பார்லரின் மகள் யாழினியுடன்அமர்ந்திருந்தேன். யாழினி கேட்ட கேசர் குல்ஃபியை ஆர்டர் செய்தேன். சர்வர் குல்பி ஸ்டிக்கை எடுத்துவர வாசலில் நிழலாடியது. அழுக்கேறிய ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் அங்கு ஒட்டப்பட்டிருந்த விதவிதமான ஐஸ்க்ரீம் படங்களை பார்த்துக் கொண்டிருக்க பார்லர் உரிமையாளன் கத்தினான். “ஏய்! என்ன பார்க்கிறே? கிளம்பு! கிளம்பு!” நிற்காதே இங்கே!” என்றான் “பிச்சைக்கார பசங்க! வந்துடறாங்க!” பிச்சையெல்லாம் கிடையாது போ போ! விரட்டினான். அவள் பரிதாபமாக கண்களில் நீர்தளும்ப வெளியேற முயல, ஹேய்! ஹரிணி! டிஸ்கைஸ் காண்டெஸ்ட்ல கலந்துட்டு அப்படியே வந்துட்டியா? வாட் எ சர்ப்ரைஸ்! என்று ஓடிச்சென்று அவள் கையைப்பிடித்து இழுத்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்ட என் மகள், என்ன சாப்பிடறே? என்றாள். அவள் கேட்ட ஐஸ்க்ரீமை வாங்கிக் கொடுக்கச் சொன்ன என் மகள், பை ஹரிணி! சாப்பிட்டுட்டு பத்திரமா போய் வா! என்று கையசைத்துவிட்டு வெளியே வந்தாள். “யாரும்மா அது? உன் ப்ரெண்டா! நான் பார்த்ததே இல்லை! எனக்கும் தெரியாதுப்பா! ப...