Posts

Showing posts from July, 2016

தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்!

Image
தித்திக்கும் தமிழ்! பகுதி 26 குருடனான திருமால்! தித்திக்கும் தமிழில் இலக்கியசுவை நிரம்பும் சிலபாடல்களை ரசித்து வந்தோம். இடையில் இப்பகுதி நின்றுவிட்டது. தமிழ்சுவைக்கு ரசிகர்கள் ஒரு சிலரே! அவர்களும் வாசிக்க வராமல் போகவே ஓர் சுணக்கம் ஏற்பட்டு நிறுத்தியிருந்தேன். இன்று பதிவு ஏதும் தேறவில்லை! என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் தமிழ் கை கொடுத்தது. நின்ற பகுதி தொடர்கிறது.     எல்லோரும் திருமாலை அழகன் என்று புகழ்வார்கள்! இங்கே சொக்கநாத புலவரோ திருமாலை குருடன் என்கின்றார். எப்படி? முன்பொரு சமயம் பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவன் என்ற சண்டை வந்தது. சிவனிடம் வந்து தீர்ப்பு கேட்டார்கள். என்னுடைய முடியையும் அடியையும் கண்டு வந்து சொல்பவர்களே பெரியவன் என்று சொல்லி தீ மலையாக உருவெடுத்தார். பெருமாள் வராகம்( பன்றி ) உருவெடுத்து பூமியை குடைந்து சென்றார். பிரம்மா அன்ன பட்சியாக உருவெடுத்து முடியை காணப்பறந்து சென்றார். எவ்வளவு தூரம் சென்றும் இருவராலும் சிவனது அடி, முடியை காண முடியவில்லை! திருமால் தோல்வியை ஒப்புக் கொண்டார். பிரம்மா தான் முடியை தரிசித்ததாக கூற சிவனது முடியில் இருந்து விழ

சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்!

Image
சிக்கனமே செல்வம்! பாப்பா மலர்! முன்னொரு காலத்தில் ஓரு ஊரில் அருகருகே இரண்டு சகோதரிகள்  வசித்து வந்தார்கள். அதில்  மூத்தவள் ஐந்து பசுமாடுகளை வைத்து  பால்வியாபாரம் செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். இன்னொருத்தியிடம் ஒரே பசுமாடுதான் உண்டு. அதில் பால்கறந்து விற்று சிக்கனமாக குடும்பம் நடத்தி வந்தாள்.  மூத்தவள் ஊதாரித்தனமாக செலவு செய்வாள்.   பால் விற்ற காசை செலவு செய்வதோடு கடனும் வாங்கி ஆடம்பரமாக குடித்தனம் நடத்தி வந்த அவளுக்கு பற்றாக்குறைதான் மிஞ்சியது. நாம் இத்தனை பசுமாடுகள் வைத்து நிறைய பால்வியாபாரம் செய்தும் நமக்கு கடன் தான் மிஞ்சுகிறது ஆனால் பக்கத்து வீட்டுக்காரி ஒரே பசுமாடு வைத்துக் கொண்டு கடனில்லாமல் நிம்மதியாக வாழ்கின்றாளே என்று அவளுக்கு பொறாமை எண்ணம் மேலோங்கியது. அவளிடம் கொஞ்சம் பால் கடனாக கேட்போம் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று ஒரே மாடு வைத்திருந்த பால்காரியிடம் அவள் வந்து  “ தங்கையே! ஐந்து மாடுகள் கறந்தும் எனக்கு பால் போதவில்லை! எல்லோருக்கும் விற்கவே சரியாக போய்விடுகிறது. நீ தினமும் ஒரு அரைபடிப் பால் தருகிறாயா? பின்னர் திருப்பித் தந்துவிடுகின்றேன்!” என்று கேட்டா

வேண்டாத மருமகள்!

Image
      தன் சிநேகிதி பாக்யத்தின் புது மருமகள் உண்டாகி இருப்பதாக கேள்விப்பட்ட கற்பகம் பை நிறைய பழம் ஸ்வீட்களுடன் அவள் வீட்டிற்குள் நுழைந்தவள் அதிர்ந்து போனாள்.      கர்ப்பிணி பெண் நித்யாவை வேலை வாங்கிக் கொண்டு ஹாயாக சோபாவில் படுத்து டீவி பார்த்துக் கொண்டிருந்தாள். “ வாடி கற்பகம்! பார்த்து எத்தனை நாளாச்சு? இப்பத்தான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?” என்று வரவேற்கவும் செய்தாள்.   “ என்ன பண்றது பாக்கியம்? உனக்கு ஒண்ணுக்கு ரெண்டு மருமகள்க! எனக்கு அப்படியா? இன்னும் பசங்களுக்கு கல்யாணம் ஆகலை! புருசனுக்கும் பசங்களுக்கும் பார்த்து பார்த்து செய்யவே நேரம் சரியா இருக்கு! இதுல எங்க வெளியே வர முடியுது சொல்லு!” என்று அலுத்துக் கொண்டாள் கற்பகம்.    “அதுவும் சரிதான்! ஆனா என்னத்தான் சொல்லு! மருமகளுங்க எவ்வளோ வேலை செய்தாலும் நாம செஞ்ச திருப்தி நமக்கு வர்றதே இல்லை! ஆனா நம்மளாலே இப்ப செய்ய முடியறதும் இல்லே! சிவனேன்னு இருக்க வேண்டியதா போயிருச்சு!”    “ அதச்சொல்லு! உனக்கு உன் வேலையிலேயே திருப்தி வராது! இதுல உன் மருமக செய்யறது பிடிக்கவா போவுது!”    “ சரிசரி! என்ன திடீர்னு இந்த பக்கம்?”    “ஏன் ந

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
    தளிர்  ஹைக்கூ கவிதைகள்! 1.    அடைபட்டது விடுபட்டதும் அலறியது குழந்தை! பலூன்! 2.    குழந்தை சோறு உண்கையில் கூட சாப்பிட்டு மகிழ்கிறது பூமி! 3.    பொத்தல் விழுந்த வானம் வெளிச்சம் போட்டு காட்டியது இரவு! 4.    பிச்சைக்காரனிடம் கையேந்தினார் நடத்துனர் சில்லறைக் காசு! 5.    அடங்காப் பசி! தூக்கத்தை தொலைத்தன நகரங்கள்! 6.    ஒளிரும் முத்துக்கள்! ஒளிக்க இடம் தேடின மின்மினிகள்! 7.    எதையும் தொலைக்காமல் தேடிக்கொண்டிருக்கின்றன எறும்புகள்! 8.    புற்று நோய்! கொல்லப்பட்டன எறும்புகள்! 9.    ஆட்டுவித்தபடி ஆடிக்கொண்டிருக்கிறது! நிழல்! 10. கொப்பளித்தது ஆற்றுவாரில்லை! குழந்தையிடம் குறும்பு! 11. உப்பு மூட்டை கரைந்து போகிறார் தாத்தா குழந்தை! 12. மாற்றங்களின் பிறப்பிடம் மாறாமல் இருக்கிறது பள்ளிக்கூடம்! 13. உயரத்தில் இருந்து விழுந்தாலும் உயிரை இழக்கவில்லை! சருகு! 14. ஓட ஓட விரட்டினாலும் ஒட்டிக்கொள்கிறது சட்டையில் அழுக்கு! 15. வெயில் இறங்கியதும் சூடு பிடித்தது நடைபாதை வி

ஜோதிடப் புலி! பாப்பா மலர்!

Image
ஜோதிடப் புலி! பாப்பா மலர்!    முன்னொரு காலத்தில்  ஒர் கிராமத்தில் ஏழைத்தம்பதியினர் வசித்து வந்தனர். கணவன் பொறுப்பற்றவன், எந்த வேலைக்கும் செல்லாமல் பொழுதெல்லாம் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அவன் மனைவி கூலி வேலைக்குச் சென்று சம்பாதித்து வந்து கணவனுக்கும் சோறு ஆக்கி போட்டுவந்தாள்.     எத்தனைநாள் தான் அவளும் பொறுப்பாள்? ஒருநாள் ஆவேசம் வந்து எங்காவது சென்று ஏதாவது வேலை வெட்டி செய்து சம்பாதித்து வந்தால்தான் இனிமே உங்களுக்குச் சோறு! என்று சொல்லிவிட்டாள். கணவன் பாவம் படிப்பறிவு கூட இல்லாதவன் யார் என்ன வேலைக் கொடுப்பார்கள் என்று யோசனை செய்தவாறே வெளியே சென்றான். அவன் சென்றபிறகு மனைவி கடைத்தெருவிற்கு புறப்பட்டாள். வழியில் ஓரிடத்தில் ஒளிந்திருந்து மனைவி வெளியே சென்றதை பார்த்த கணவன் அவளுக்குத் தெரியாமல் வந்து வீட்டிற்குள் நுழைந்து பரண் மீது ஏறி ஒளிந்து கொண்டான்.      மனைவி வீட்டிற்கு திரும்பினாள். அடுப்படியில் தோசை வார்க்க ஆரம்பித்தாள். அவள் வார்க்கும் போதெல்லாம் பரணில் இருந்து ஒரு துடைப்பக் குச்சியை பிடுங்கி கையில் வைத்துக் கொண்டான் கணவன். தோசை வார்த்து முடித்ததும் மனைவி என்னென்ன செய

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72

Image
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 72 1.    எங்க தலைவர் கூட்டணி கட்சிகளை சேர்த்து அணைக்கிறதிலே கில்லாடி! எங்க தலைவர் கூட்டணியை சேர்த்து அழிக்கிறதுல கில்லாடி! 2.    வேலைக்காரிக் கூட என்ன சண்டை? பத்து பாத்திரம் தேய்க்கணும்னு சொன்னீங்க இப்ப நிறைய பாத்திரங்களை போட்டிருக்கீங்களேன்னு கேக்கறா! 3.    மன்னருக்கு போர் என்றாலே அலர்ஜி…! அதற்காக “போர்”வையை கூட யூஸ் பண்ண மாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படி…? 4.    அந்தப் புரத்தில் இருந்து சீட்டி ஒலி கேட்கிறதே எதற்கு மந்திரியாரே…! உங்கள் அரசவை டூட்டி முடிந்துவிட்டது என்று ராணியார் சீட்டி அடித்து நியாபகப்படுத்துகின்றார் அரசர் பெருமானே! 5.    தன்னோட ரீலீஸ் தேதியை தள்ளி வைக்கணும்னு கபாலி கேட்டுகிட்டு இருக்கானா எதுக்கு? கபாலி படம் ரிலீஸ் ஆகறப்போ தானும் ரிலீஸ் ஆனா தனக்கு கூட்டமே சேராதுன்னு நினைக்கறானாம்! 6.     தலைவர் கட்சியை தன் கைக்குள்ளேயே வச்சிக்கிட்டிருக்கிறதா சொல்றியே எப்படி? விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் கட்சியிலே மெம்பர்ஸ் இருக்காங்கன்னு சொல்ல வந்தேன். 7.    தலைவர் ஏன் கோபமா இருக்காரு? அவருக்கு வ

நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள்! பகுதி 12

Image
நொடிக்கதைகள் பகுதி 12 புழுக்கம்!    ஆசை மகனுக்கு ஏசி வைத்த கிளாஸ் ரூம் உள்ள ஸ்கூலில் எல்.கே.ஜி அட்மிசன் போட்டுவிட்டு அதற்காக வாங்கிய கடனை எப்படி அடைக்கப்போகிறோம் என்று புழுக்கத்தில் ஆழ்ந்தான் மிடில்கிளாஸ் தகப்பன். பசி!    வேலை முடிந்ததும் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து மனைவி சுட்டுப்போட்ட காந்தல் தோசையை ருசித்து சாப்பிட்டான் பிரபல ஓட்டலில் தோசை மாஸ்டராக பணி புரியும் சரவணன். திருஷ்டி!      ஊர் முழுக்க திருஷ்டி கழிக்க பூசணிக்காய் விற்ற வியாபாரி மாலை வியாபாரம் முடிந்ததும் சொல்லிக் கொண்டான். இன்னைக்கு நல்ல வியாபாரம்!  நிறைய திருஷ்டி பட்டு இருக்கும் வீட்டுக்குப் போனதும் அம்மாட்ட சொல்லி சுத்திப்போட சொல்லணும்! எல்லாமே கையிலே!      எதுக்கும் எங்கேயும் அலைய வேண்டியதே இல்லை! உலகமே இப்ப நம்ம கையிலே! எதுவேணும்னாலும் என்ன வேணும்னாலும் நொடியிலே தகவல் திரட்டிடலாம். எல்லாம் விஞ்ஞானத்தோட வளர்ச்சி! கடைக்கு போகவேண்டாம் வீட்டுக்கே கடை தேடிவரும். பஞ்சாங்கத்துக்கு ஜோசியர் வேண்டாம்! பணம் எடுக்க பேங்க் வேண்டாம் எல்லாமே கையிலே இருக்கு! எல்லாமே இப்ப நம்ம கையிலே வந்துருச்சு! என்று