சகல சௌபாக்கியம் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!

சகல சௌபாக்கியம் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!



  சிவாலயங்களில் பட்சம் தோறும் வழிபடும் சிறந்ததொரு வழிபாடு பிரதோஷம் ஆகும். ஒவ்வொரு மாதமும் சுக்லபட்சம் மற்றும் கிருஷ்ணபட்சம் திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலமாக அனுசரிக்க படுகின்றது.

பிரதோஷங்களில் நித்ய பிரதோஷம், பட்ச பிரதோஷம், மஹாபிரதோஷம் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது.

   பாற்கடலை கடைகையில் வெளிப்பட்ட ஆலகால விஷத்தை தாங்க முடியாமல் தேவர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓட நந்தி தேவர் அதை திரட்டி சிவனிடம் வழங்க சிவபெருமான் விழுங்கிவிட்டார். உடனிருந்த உமாதேவி கழுத்தினில் அழுத்த விஷம் கீழிறங்காமல் நெஞ்சுக்குழியோடு நின்றுவிட்டது. சிவன் திரு நீலகண்டன் ஆனார்.

   சிவன் அச்சமயத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடினார். அனைத்து தேவர்களும் அங்கே கூடி இருந்தனர். இதன் காரணமாகவே பிரதோஷ வேளையில் வேறு சன்னதிகளில் பூஜை நடப்பதில்லை! பிரதோஷ காலத்தில் எல்லா தெய்வங்களும் சிவாலயத்தில் கூடுவதாக ஐதீகம்.


  இப்படி விஷம் உட்கொண்ட சிவன் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நர்த்தனம் ஆடியது ஓரு தேய்பிறை சனிப் பிரதோஷ காலமாகும். எனவே சனிப் பிரதோஷம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
 எனவே இது மஹா பிரதோஷம் என்று சொல்லப்படுகின்றது. மஹா பிரதோஷ காலத்தில் பகலில் உபவாசம் இருந்து மாலையில் தம்பதிகளாக சிவாலயம் சென்று சிவனை வழிபடுவதால் தரித்திரம் விலகும். ஞானம் கிட்டும்.

பிரதோஷ வேளைரஜ்னிமுக வேளை என்றும்அழைக்கப்படுகிறது
அதற்கு இரவின் முகம் என்பதுபொருள்.தோஷம் என்றால்குற்றமுள்ள என்று பொருள்.பிரதோஷம் என்றால் குற்றமில்லாததுகுற்றமற்ற அந்தவேளையில் ஈசனைத் தொழநம் தோஷங் கள் நீங்கும்.ஈசன் விஷத்தையுண்டுசயனித்துபிறகு எழுந்துமுதன்முதலாக 
சந்தியா தாண்டவத்தை ஆடியது ஒருசனிக்கிழமை மாலையில்தான் 
என்பதால்
சனிப்பிரதோஷம் சிறப்பானதுநாம் யாருக்காவது கடன்கொடுக்க 
வேண்டியிருந்தால் அதில் ஒரு சிறு தொகையைசனிப்பிரதோஷ 
வேளையில் தரநம் கடன்கள் சீக்கிரம்அடைபடும் என்பார்கள்.


பிரதோஷ பூஜை அபிஷேகத்திற்கான பொருள்களும் பலன்களும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிடைக்கும்
பழங்கள் - விளைச்சல் பெருகும்
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்
தேன் - இனிய சாரீரம் கிடைக்கும்
பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்
எண்ணெய்சுகவாழ்வு கிடைக்கும்
இளநீர் - நல்ல மக்கட் பேறு கிடைக்கும்
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
தயிர் - பல வளமும் உண்டாகும்
நெய் - முக்தி பேறு கிடைக்கும்


ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து வருடங்கள்தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும் என அனுபவம்
 மிக்கசிவனடியார்கள் தெரிவிக்கின்றனர்.

சிவாலயங்களை பிரதோஷ  காலத்தில் பின்வருமாறுதான் வலம் வர வேண்டும். இந்த பிரதட்சணம் சோம சூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது

  நந்தி பெருமானிடம் இருந்து புறப்பட்டு இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி அங்கிருந்து திரும்பி நந்திபெருமானிடம் வணங்கி இரு கொம்புகளிடையே சிவதரிசனம் செய்து அங்கிருந்து வலப்புறமாக சென்று கோமுகி வரை சென்று கோமுகியை வணங்கி பின்னர் திரும்பி நந்தி தேவரிடம் வந்து வணங்கி சண்டிகேஸ்வரரை வணங்க வேண்டும் பின்னர் அங்கிருந்து திரும்பி நந்திதேவரை வணங்கி கோமுகியை வணங்கவேண்டும். அங்கிருந்து வந்து சண்டிகேஸ்வரரை வணங்கிவிட்டு நந்தி தேவரிடம் பிரதட்சணத்தை முடிக்க வேண்டும். இது சோமசூக்த பிரதட்சணம் என்று வழங்கப்படுகிறது.
பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.
ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.
   கோ
  கோ
  
மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.
- நந்தி
- சண்டிகேஸ்வரர்
கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்
தீர்த்தம் விழும் இடம்.


பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :
1. செல்வங்கள் பெருகும்.
2. கடன் தொல்லைகள் நீங்கும்,
3. நோய்கள் அகலும்
4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.
5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.
6. வேண்டிய வரம் கிட்டும்.
7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.
8. நீடித்த ஆயுள் கிட்டும்.
9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

 தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமாபாவங்கள் விலகும்ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.

பிரதோஷ காலத்தில் பிரபலமான ஆலயங்களில் கூட்டம் நிரம்பும் சுவாமி தரிசனம் கிடைப்பதில் நிம்மதி இருக்காது. அதே சமயம் பழமையான ஊரைவிட்டு ஒதுங்கி இருக்கும் ஆலயங்களில் வழிபாட்டிற்கு கூட வழி இருக்காது. அம்மாதிரி ஆலயங்களை கண்டுணர்ந்து அங்கு பிரதோஷ பூஜையை நடத்துவதால் ஆலயமும் சுபிட்சமாகும். நாமும் நலம் பெறுவோம்.


பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும் நந்தியெம்பெருமானையும் வழிபாடு செய்து வாழ்வில் வளங்கள் பெறுவோமாக!

(படித்து தொகுத்தது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. பகிர்வுக்கு நன்றி வாழ்க நலம்

    ReplyDelete
  2. நலம் தரும் நல்ல தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  3. கொஞ்ச நாட்கள் முன்னர் கூட இந்த சோமசூக்த பிரதக்ஷிணம் குறித்து ஏதோ ஒரு குழுமத்தில் சொல்லி இருந்தேன். நல்ல தகவல்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2