Posts

Showing posts from May, 2011

மோசம் செய்வதேன்? கவிதை

Image
மோசம் செய்வதேன்?   என்னவளே! என் சுவாசம்கூட உன் வாசத்தை விரும்புகிறது. ஆனால் நீயோ உன் நேசத்தைக் காட்டாமல் மோசம் செய்கிறாயே? நீ சொன்னாய் என்பதாலே! நீசொன்னாய் என்பதாலே மரங்களை நேசித்தேன் மகிழ்ந்தாய்! நீ சொன்னாய் என்பதாலே புத்தகங்களை நேசித்தேன் புன்னகைத்தாய்! நீ சொன்னாய் என்பதாலே விலங்குகளை நேசித்தேன் வியந்தாய்! நீ சொன்னாய் என்பதாலே இசையை நேசித்தேன் இனித்தாய்! நீ சொல்லாமலேயே உன்னை நேசிக்க ஆரம்பித்தேன் விலகிப்போனாய்! தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

களவாணிப் பயலுவ!

Image
களவாணிப் பயலுவ!   இந்தியா ஒரு பழம்பெருமைநாடு!பல்வேறு இயற்கைச் செல்வங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நாடு.பல்வேறு இயற்கை வளங்கள் தன்னிச்சையாக பெருகிக் கிடந்த நாடு. நம் நாட்டு தாவரங்கள் பல மூலிகைகளாக பல்வேறு நோய் தீர்க்கும் மருந்துகளாக பயன்பட்டு வருகிறது.இதுதான் மேற்கத்திய நாடுகளின் கண்ணைக் குத்துகிறது போலும்.நமது இயற்கைச் செல்வங்கள் பலவற்றிற்கு காப்புரிமை என்ற பெயரில் உரிமை கொண்டாடி கொள்ளையடித்து வருகின்றன.       மத்திய அரசோ கைகட்டி வாய்பொத்தி வேடிக்கைப் பார்த்துக்கொண்டுவருகிறது. ஆர்வலர்கள் பலர் ஒன்று கூடி அரசுக்கு விழிப்பு ஏற்படுத்திய பிறகுதான் அரசு முழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்று வந்தவன் கொண்டு சென்றது போல நமது,மஞ்சள்,வேம்பு, பாசுமதி அரிசி, போன்றவற்றிர்க்கு அமெரிக்கா சத்தமில்லாமல் காப்புரிமை வாங்கிவிட தாமதமாக விழித்துக் கொண்ட அரசுஅவர்களிடம் போராடி காப்புரிமையை திரும்ப பெற வேண்டியாதாகிவிட்டது.       அடுத்தவன் பொருளை களவாடும் களவானிப் பயல்களிடம் நாம் உஷாராக இருக்க வேண்டும். நம்முடைய பொருள்களுக்கு காப்புரிமை நாம் பெற்றாக

Educationalist welcomes TN govt for stop the Samacheer kalvi | சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்திவைப்பு சரியே: கல்வியாளர்கள் வரவேற்பு Dinamalar

Educationalist welcomes TN govt for stop the Samacheer kalvi | சமச்சீர் கல்வி திட்டம் நிறுத்திவைப்பு சரியே: கல்வியாளர்கள் வரவேற்பு Dinamalar

கனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்!

Image
கனிமொழியின் கைதும் மீடியாக்களின் ஆவலும்!   எத்தனை நாளுக்குத்தான் கதை, கவிதை என்று எழுதிக்கொண்டிருப்பது இப்படியும் எழுதிப்பார்ப்போமெ என்று இந்த பதிவு. இந்த பதிவை எழுதுவதாலேயே என்னை சிலர் தி..மு.க அனுதாபி என்று சிலர் முத்திரை குத்தக் கூடும் ஆனால் மனதில் பட்டதை அப்படியே சொல்லி பழக்கமாகி விட்டது. இந்த பதிவு எழுத காரணமாக இருந்தது ஆனந்த விகடன். வெள்ளியன்றே வரும் அவ்விதழை நேற்றுதான் படிக்க நேர்ந்த்து. நான் விகடனின் 25 வருட வாசகன் இடையில் சில பிரேக்- அப்கள். இருந்தாலும் விகடனின் இப்போதைய ட்ரண்ட் எனக்கு அவ்வளவாக பிடித்தமில்லை.     கனிமொழி ஒரு எம்.பி. ஒரு ஊழல் குற்றவாளி, தமிழக முக்கிய கட்சியின் தலைவருடைய மகள்,முன்னாள் முதல்வரின் மகள் என்றெல்லாம் பாராமல் ஒரு பெண்ணாக மட்டும் பாருங்கள். இந்தியாவில் எல்லா அரசியல் வாதிகளும் செய்வதைப் போலத் தான் அவரும் ஊழல் செய்து மாட்டிக் கொண்டார். இதில் கண்டிப்பாக காங்கிரஸ் அரசுக்கும் பங்குண்டு,என்று இளிச்சவாய் தமிழனுக்குக் கூட தெரியும். மன்மோகன் ஐயயோ எனக்கு எதுவுமே தெரியாது எல்லாம் ராசாதான் என்று புலம்பினால் நம்பி விடுவோமா நாம்?         சரி கனிமொழி விஷயத்திற்கு வ

தடையல்ல!

Image
தடையல்ல! மலையைக் கடப்பவனுக்கு மண்ணாங்கட்டி தடையல்ல! ஆற்றை கடக்க நினைப்பவனுக்கு அதன் ஆழம் தடையல்ல வானில் பறக்க துடிப்பவனுக்கு மேகக் கூட்டங்கள் தடையல்ல! கடலை கடக்க துடிப்பவணுக்கு கடலலைகள் தடையல்ல! நண்பா! உன் லட்சியங்கள் பெரிதாக இருப்பின் தடைகளெல்லாம் சிறிதாகிப் போகும்! தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !

ஆவி அழைக்கிறது! 4

Image
ஆவி அழைக்கிறது! பகுதி 4 எழுதுபவர்   “பிசாசு” மு.க.சு: ஆழ்வார் குறிச்சியிலுள்ள தனது பரம்பரை பங்களாவை சீர்படுத்த முயல்கிறார் தனவேல் முதலியார் ஆனால் அதிர்ச்சிமேல் அதிர்சியாக அங்கு வேலைக்கு வருபவர்கள் இறந்து போகின்றனர். இனி: நிதிலாவை நோக்கி வேகமாக வந்த நாகம் அவளை கொத்தும் முன் நல்ல முத்து ஒரு பெரிய குச்சியால் தூக்கித் தள்ளினார். அத்துடன் சிறிது தண்ணிரை நிதிலா முகத்தில் தெளித்து எழுப்பினார். எழுந்த நிதிலாவுக்கு படபடப்பாக இருந்தது.அவள் இதயம் வழக்கத்தைவிட அதிகமாக துடித்துக் கொண்டிருந்தது.தனவேல் முகத்தில் ஈயாடவில்லை!. மூவரில் சற்று தைரியமாய் இருந்தவர் நல்ல முத்து ஒருவர்தான்.   தங்கள் கண்முன்னாலேயெ இறந்து கிடக்கும் மணிமாறனின் சடலத்தை கண்டு மூவரும் திக் பிரமை பிடித்து நின்றனர். நிதிலா தான் முதலில் வாயைத் திறந்தாள். டாடி! டாடி! என்ன ஆச்சு உங்களுக்கு என்று தனவேலை பிடித்து உலுக்கினாள். இன்னும் என்னம்மா ஆகணும்? இந்த பங்களா ரெண்டு உயிரை பலி வாங்கிடுச்சு அதுக்கு நான் காரணமா இருந்துட்டேன் இது போதாதா? இன்னுமென்ன நடக்கணும்? என்று புலம்பினார் தனவேல்.     முதல்ல இந்த இடத்தை விட்டு வெளியே போய் பேசுவோம்.அ

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்!

Image
  கோயம்பேடு பஸ் ஸ்டாண்டும் கொள்ளைக் கூட்டமும்! கடந்த வாரம் திருச்சிக்கு திடீர் பயணம் செல்ல நேரிட்டது. சின்ன வயதிலிருந்தே ரயில் பயணத்தில் எனக்கு அலர்ஜி! பஸ் பயணமும் தான் விதி யாரை விட்டது! எனக்கு வாய்த்தவள் வீடு கரூர் அருகில் ஒரு கிராமத்தில் அமைய இப்போது வருடத்தில் ஓரிரு முறை தொலை தூர பஸ் பயணங்கள் செல்லவேண்டியதாகி விட்டது. சரி விஷயத்திற்கு வருவோம். திருச்சி செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்திற்குள் அடியெடுத்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. மெட்ரோ ரயில் பணிகளால் அண்ணாநகரில் இருந்தே பஸ் ஊர்ந்து பஸ் நிலையத்தை அடைய ஒரு மணி நேரமாகி விட்டது.      மார்க்கெட் நிறுத்ததிலேயே பாதி பயணிகள் இறங்கிவிட மீதி பயணிகளோடு உள்ளே ஊர்ந்தது பேருந்து. விடுமுறை காலம் என்பதால் பேருந்து நிறுத்தம் நிரம்பி வழிந்தது.மெட்ரோ ரயில் திட்ட பணிகளால் போக்குவரத்து அங்கும் பாதித்தது. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் வழியிலேயே குறுக்கும் நெடுக்குமாக நிற்க எங்கள் பேருந்தும் அவற்றுள் ஒன்றாய் நின்றது.       லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு, மனைவி குழந்தையோடு இறங்கி உள்ளே நுழைந்து பேரிரைச்சலில் கலந்தேன். கழிப்பிடங்க

பாப்பா மலர்

Image
குரங்கின் சின்ன புத்தி! ராமசந்திரா புரம் என்ற சிற்றூரில் முத்து என்ற கழைக்கூத்தாடி ஒருவன் வசித்துவந்தான். அவனிடம் குரங்கு ஒன்று இருந்தது. முத்து அந்த குரங்கை வைத்து வித்தைகள் செய்துகாட்டி தன் வயிற்றைக் கழுவிக்கொள்வான்.    முத்து குரங்கை தெரு மையத்தில் அழைத்துச் சென்று கொம்பைத் தாண்ட சொல்வான்.தீவளையத்தில் புகச்செய்வான். குட்டிகரணம் போடச்சொல்வான். இவ்வாறு பல வித்தைகள் செய்துகாட்டி மக்கள் தரும் பிச்சைகளைப் பெற்று சீவனம் நடத்திவந்தான்.குரங்கும் அவன் சொல்படி நடந்து மக்களின் கை தட்டல்களுடன் நிறைய பணத்தையும் பெற்றுத் தந்தது.     இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க குரங்கு தனக்கு கிடைத்த் கைதட்டல்களால் கர்வம் கொண்டு தான் இல்லையேல் முத்து இல்லை என்று எண்ண ஆரம்பித்தது. தன் திறமையால் தான் முத்து பிழைக்கிறான் என்று நினைத்து நம் உழைப்பில் சாப்பிடும் இவனுக்கு நாளைமுதல் ஒத்துழைப்பு தருவது இல்லை என முடிவெடுத்தது.       அன்று முதல் அக்குரங்கு முத்து சொல்லும் வித்தைகளை சரிவர செய்வது இல்லை விருப்பமிருந்தால் ஒன்றிரண்டு வித்தைகளை செய்யும். இல்லையேல் முரண்டுபிடிக்கும். குரங்கின் பிடிவாதமான இச்செயல் முத்

samacheer kalvi need or not | சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன? Dinamalar

samacheer kalvi need or not | சமச்சீர் கல்வி திட்டம் வேண்டுமா-வேண்டாமா?பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுவது என்ன? Dinamalar

மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்

Image
மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்துகிறது கூகுள்   நியூயார்க் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், மொபைல் பேமெண்ட் சிஸ்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்‌கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதற்காக, சர்வதேச அளவில், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. கூகுள் நிறுவனம், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் உடன் இணைந்து மொபைல் பேமெண்‌ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக வால்ட் ஸ்டீரிட் பத்திரி‌கை, கடந்த மார்ச் மாதத்தில் செய்தி வெளியிட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது. ஆனால், மாஸ்டர்கார்டு மற்றும் சிட்டி குரூப் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று அப்போது தெரிவித்திருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பலசரக்கு பொருட்களிலிருந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவது வரையிலான அனைத்து விசய

ப்ளிஸ் சிரிச்சுடுங்க!

Image
ப்ளிஸ் சிரிச்சுடுங்க! முதலாளி: தோட்டத்து செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டியா? வேலையாள்: ஐயா நல்லா மழை பெய்யுது! முதலாளி: அதனாலென்ன குடை பிடிச்சிகிட்டு தண்ணி ஊத்துடா மடையா! டிரைவர் இவ்வளவு வேகமா காரை ஓட்டாதே பயமாயிருக்கு! பயப்படாதீங்க ஐயா, என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக்கொள்ளுங்கள்! ஒரு கடிதத்தின் கடைசி வரி: இந்த கடிதம் உனக்கு கிடைக்காவிட்டால் எனக்கு மடல் எழுது. அதோ அவர் சாப்பிடறாரே மைசூர்பாகு அதைக் கொண்டா!   அவர் பாதி சாப்பிட்டுட்டாரே சார்! என்னைத் தவிர எந்த கழுதையாவது உன்னை பெண் பார்க்க வந்ததுண்டா? உங்களோட உங்கப்பா வந்தாரே மறந்துபோச்சா! நம்ம கார் டிரைவரை உடனே வேலைய விட்டு நீக்குங்க! ஏன் என்னாச்சு? இதுவரைக்கும் ஒரு நாலுதடவையாவது எது மேலயாவது மோதி என்னைக் கொல்ல பார்த்தான்.   அவனுக்கு இன்னும் ஒரு சான்ஸ் தந்து பார்ப்போமே! நான் அவமானப் படறதுக்காக இங்க வரலை! வழக்கமா அதுக்கு எங்க போவிங்க? இருட்டுல பல்பை போட்டா என்ன ஆகும்? வெளிச்சம் வரும். இல்ல உடைஞ்சு கால்ல குத்திக்கும் பல் வலிக்கிறது இது என்ன பெயரெச்சம்?

நான் ரசித்தப் பூக்கள்

Image
 சமீபத்தில் படித்து ரசித்த குட்டிக் கதைகள்! மரியாதை! பெல்ஜியம் நாட்டு ஆசிரியர் மேட்டர்லிக் என்பவருக்கு தான் எழுதிக்கொண்டிருக்கும் போது யாராவது குறுக்கே பேசினால் பொல்லாத கோபம் வரும்.    ஒருமுறை அவர் தீவிரமாக எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டிற்கு திரும்பிய அவர் மனைவி சந்தடி செய்யாமல் தன் அறைக்குச் சென்றாள். அங்கே அதிர்ச்சி அடைந்த அவள் ஓடி வந்து கணவரிடம் நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் போது யாரோ ஓசைப்போடாமல் என் நகைகளை திருடிக்கொண்டு போய் விட்டார்களே! என்று அலறினாள்.     ஒரு திருடன் என் வேலைக்கு காட்டும் மரியாதையைக்கூட உனக்கு காட்டத்தெரியவில்லையே என்று பதிலுக்கு கத்தினார் மேட்டர்லிக்     பறக்கும் குதிரை! மரண தண்டணை விதிக்க பட்ட கைதி ஒருவன் அரசனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான் அரசே நான் உங்கள் குதிரைக்கு பறக்கும் வித்தையை கற்றுக்கொடுத்தால் என்னை விடுவிப்பீர்களா?. ஆகா! சரி என்று அரசன் தலையாட்டினான். அதற்கு ஒரு வருசம் அவகாசம் தேவைப்படும் என்றான் கைதி அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டான். பின்னர் கைதியிடம் யாரோ கேட்டார்கள் இது சாத்தியமா? கைதி சொன்னான் ஒரு

அவள் சொன்னாள் என்பதற்காக !

Image
அவள் சொன்னாள் என்பதற்காக ! அவள் சொன்னாள்என்பதற்காக படிப்பில் கவனமாகி ‘பட்டம்’ வாங்கினேன். அவள் சொன்னாள் என்பதற்காக பிடிக்காத வேலையையும் முகம் கடுக்காமல் ஏற்றேன் அவள் சொன்னாள் என்பதற்காக கல்லூரியில் பழகிய ‘சிகரெட்டை’ சீந்தாமல் விட்டேன் அவள் சொன்னாள் என்பதற்காக அம்மாவுக்கு ரேஷனில் ‘க்யு’வில் நின்று அரிசி வாங்கி வந்தேன் அவள் சொன்னாள் என்பதற்காக காலைக் குளிரில் கால் கடுக்க ஒடி பயிற்சி எடுதேன் அவள் சொன்னாள் என்பதற்காக பாரதியாரின் கவிதைகளை பக்கம் விடாமல் படித்தேன் அவள் சொன்னாள் என்பதற்காக கர்னாடக இசையை காது குளிர கேட்டேன் அவள் சொன்னாள் என்பதற்காக அடியோடு பிடிக்காத ‘அவரைக்காயை’ ஆசையாய் சாப்பிட்டேன் அவள் சொன்னாள் என்பதற்காக அவளை மறக்க முயற்சிக்கிறேன் ஆனால் ஏனோ முடியவில்லை! தங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே? கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

தளிர் அண்ணா பொன் மொழிகள்!

Image
தளிர் அண்ணா பொன் மொழிகள்! பற்றுக்கொம்பில்லாத கொடி படர்ந்து வளர்வது கடினம் அதுபோல பற்று இல்லா வாழ்க்கை வெற்றி பெறுவது கடினம். நீரில்லாமல் பயிர்கள் பசுமை இழக்கும் உற்சாகமில்லா மனிதனின் முகமும் பொலிவை இழக்கும். இழந்துவிட்ட ஒன்றைப் பற்றி பேசிப்பேசி இருக்கும் நேரத்தைவீணடிப்பதை விட்டு இனியும் இழக்காமலிருக்க இன்றெ செயல் படு. உதிர்ந்த ரோஜா இதழ்களை மீண்டும் ஒட்டவைக்கமுடியாது.அதுபோல உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை மீண்டும் திரும்பப் பெறமுடியாது. சிற்பியின் கலை நயத்தாலே பாறை சிற்பமாகிறது. ஆசிரியணின் சொல் நயத்தாலெ மாணவன் மிகச் சிறந்தவனாகிறான். மண்ணிலே தோண்டுவது எளிது. பாறையிலே தோண்டுவது கடினம். மக்களில் சிலர் மண்ணாகவும் சிலர் பாறைகளாவும் உள்ளனர். எனவே தகுதியறிந்து உபதேசித்தல் வேண்டும். தேனிக்கள் சிரமப்பட்டு சேர்க்கும் தேன் பெரும்பாலும் அதற்கு பயனளிப்பதில்லை.கருமிகளிடம் சேரும் செல்வமும் அவர்களுக்கு பயனளிக்காது வீணாகும் யாரும் புழங்காத வீட்டில் தூசு ஒட்டடை படிவதுபோல உலகத்தாரோடு பழகாதவன் மனதில் மாசு உண்டாகும். உன் சொல் கேட்டு நட