பன்னாட்டுப் பழமொழிகள்
பன்னாட்டுப் பழமொழிகள்
இதயமும் நாவும் சிறியவை ஆனால் அவைகள் மனிதனின் உயர்வை காட்டுகின்றன.
ஜெர்மனி
செல்வத்தை விட செல்வாக்கு மேலானது.
அயர்லாந்து
கல்வியின் வேர் கசப்பானது; ஆனால் அது இன்பமான் பழத்தை தருகிறது.
செக்கோஸ்லாவிகியா
சொன்ன சொல்லையும் எறிந்த கல்லையும் திருப்பியழைக்க முடியாது.
இங்கிலாந்து.
காரியங்களை திட்டமிடுபவன் மனிதன் அவைகளை நிறைவேற்றுபவன் இறைவன்.
சீனா
கடவுளை ஏமாற்ற நினைக்கிறவன் ஏற்கனவே தன்னை ஏமாற்றிவிட்டான்.
இத்தாலி
தொடக்கத்தைவிட முடிவைப்பற்றி அதிகமாக சிந்தனை செய்.
ஆர்மீனியா
சமாதானம் செல்வத்தை உண்டாக்குகிறது. செலவம் சண்டையை உண்டாக்குகிறது.
பிரான்ஸ்
சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் மாதிரி
சைலிஷியா
உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.
நைஜிரியா
ஏழைகள் உணவைத் தேடுகிறார்கள் பணக்காரர்கள் பசியைத் தேடுகிறார்கள்.
இந்தியா.
Comments
Post a Comment