புயலெனப் புறப்படு!
புயலெனப் புறப்படு!
சகோதரிகளே!
கவிஞர்கள் நம்மை
‘பூ’ என்றனர்
வாடலானோம்!
‘மான்’ என்றனர்
ஓடாமல்
ஒடுங்கினோம்!
ஆடாமல்
அடங்கினோம்!
குயில் என்றனர்
கூவாமல்
கூண்டில் உறங்கினோம்!
‘நிலவு’ என்றனர்
தேய்ந்துபோனோம்!
சகோதரிகளே!
இனியும் நாம் புகழுக்கு
புவி ஆள்வது
எப்போது?
பூசலைத் தவிர்த்துவிட்டு
தரணி ஆள
தயங்காமல்
புயலெனப்
புறப்படு சகோதரியே!
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !
Comments
Post a Comment