ஜூலியைக் காணோம்!
ஜூலியைக் காணோம்!
காலையில் கதிரவன் ‘குட்மார்னிங்’ சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் பீட்டரின் மனைவி மேரி பரபரப்புடன் ஓடிவந்தாள். பேப்பர் படித்துக்கொண்டிருந்த பீட்டர் என்னாச்சு மேரி ஏன் ஓடிவர? என்றான்.
என்னங்க நம்ம ஜூலிய காணோங்க! என்று பயத்துடனும் பதற்றத்துடனும் சொன்னாள் மேரி.என்னது ‘ஜூலிய காணோமா?’
வீடுமுழுக்க தேடிப்பார்த்தியா? ஃபிரெண்ட்ஸ் வீட்டுக்கு போயிருக்காளான்னு பார்த்தியா? என்று கேட்ட பீட்டரின் முகத்திலும் பதற்றம்.
எல்லா இடமும் பார்த்திட்டேங்க காண்லியே எங்க போணாளொ தெரியலியே நான் ஊட்டாம சாப்பிட கூட மாட்டாளே! என்னாச்சு அவளுக்கு? ஏன் இப்படி பண்ணீட்டாள்? என்று புலம்பினாள் மேரி.

நாம என்ன குறை வச்சோம் அவளுக்கு! அவளுக்கு பிடிக்குக்குமின்னு தினம்தினம் மட்டன்,சிக்கன்னு பண்ணிப் போடலியா? தினம் தினம் பீச்,பார்க்குன்னு கூட்டிட்டு போலயா?
இப்படி பண்ணிட்டாளே பாவி!.
நான் அப்பவே நினைச்சேன் அவ ரெண்டாவது தெரு ஜானிகூட சுத்தறத சில சமயம் பார்த்தும் கண்டுக்காம விட்டது தப்பா போயிடுச்சே! அவளை வெளியே தனியா அனுப்பாதேன்னு சொன்னேன் நீ கேட்டாதானெ!

ஆம் இவர்கள் இத்தனை நேரம் கவலைப்பட்டது தங்கள் செல்ல நாய் ஜூலியைப் பற்றித் தான்.
Comments
Post a Comment