பாப்பா மலர்பானையின் கர்வம்!
        குயவன் ஒருவன் பானை செய்து கொண்டிருந்தான் நேரம் சென்றுகொண்டிருந்தது. குயவனின் கை வண்ணத்தில் அழகான பானை வடிவமைக்கப்பட்டுவிட அதை குயவன் சூளையுள் இட்டு  உலர்ந்தது. வண்ணம் தீட்டி அழகுபடுத்தினான். பின்னர் வீட்டினுள் மற்ற பானைகளுடன் அடுக்கினான்.
       அந்த பானை சற்று அழகாக இருக்க பெருமை பிடிபட வில்லை அதற்கு கர்வத்துடன் மற்ற பானைகளை நோக்கி பேசியது. ‘ஏ பானைகளே நீங்கள்தான் இந்த குடிசை வீட்டில் இருக்கப் பிறந்தவர்கள் நான் அழகு மிகுந்த அரண்மனையில் வசிக்கப் பிறந்தவன் என் பெருமை புரியாத குயவன் என்னை உங்களுடன் சேர்த்து வைத்துள்ளான் இது என் போதாத காலம் தானே!’ என்று மற்ற பானைகளை வம்புக்கிழுத்தது.
          உடனெ மற்ற பானைகள் ‘ ஏய் உன்னை உருவாக்கிய குயவனையே இழிவாக பேசுகிறாயா? உனக்கு புத்தி பேதலித்து விட்டதா?’ என்று வினவின. உடனே அழகுப்பானை முகத்திலடித்தார்போல என்னை இந்த குடிசையில் உங்களுடன் ஒன்றாக வைத்த குயவனை புகழ வேறு வேண்டுமா? என்று சலித்துக்கொண்டது.

அச்சமயம் பானை வாங்க ஒருவர் வந்தார். குயவன் அழகான பானையை அவரிடம் காட்ட பானை மிகவும் கர்வத்துடன் மற்ற பானைகளைப் பார்த்தது. பானையை பரிசோதித்த அவர் ஏம்ப்பா இதுல விரிசல் இருக்கே என்று குயவனிடம் திருப்பி தந்துவிட்டார்.
     பானையை வாங்கிய குயவன் தட்டிப்பார்த்து அட ஆமாம் அழகா செஞ்சும் பிரயோசனமில்லாத போச்சே என்று தூரத்தில் தூக்கி எறிய சுக்கு நூறாகியது பானை அதன் கர்வமும் தான்.
        

Comments

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!