மலர்கள்!

மலர்கள்!

இயற்கை அன்னையின்
இளையமகள்!

இளையோர் விரும்பும்
விலைமகள்!
மனிதபடைப்பை மகிழ்விக்க
வந்த மண மகள்!
மங்கையரின் கூந்தலுக்கு
மணம் சேர்ப்பாள்
ஆண்டவனின் கழுத்தை
அலங்கரிப்பாள்!
மாண்டவரின் மடிமீது
தலைவிரிப்பாள்!
மாலையாக கட்டுண்டு
கடைவீதிதனில்காட்சி தருவாள்!
‘மாலையிலே’ மலிந்திடுவாள்!
‘காலையிலே’ ஒளிர்ந்திடுவாள்!
விதவிதமாய் பூத்திட்டு
விற்பனைக்கு வந்திட்டாள்!
கோயிலிலே கொடுத்திட்டால்
பிரசாதம்!
சிலருக்கு இவளை விற்றாளே
ஒருவேளை சாதம்!
ஒருநாளே வாழ்ந்திட்டாலும்
உலகையே மயக்கிடுவாள்!
ஒருபோதும் மறையாமல்
உலகினிலே நிலைத்திடுவாள்!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2