அவள் சொன்னாள் என்பதற்காக !

அவள் சொன்னாள் என்பதற்காக !

அவள் சொன்னாள்என்பதற்காக
படிப்பில் கவனமாகி
‘பட்டம்’ வாங்கினேன்.
அவள் சொன்னாள் என்பதற்காக
பிடிக்காத வேலையையும்
முகம் கடுக்காமல் ஏற்றேன்
அவள் சொன்னாள் என்பதற்காக

கல்லூரியில் பழகிய
‘சிகரெட்டை’ சீந்தாமல் விட்டேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
அம்மாவுக்கு ரேஷனில் ‘க்யு’வில்
நின்று அரிசி வாங்கி வந்தேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
காலைக் குளிரில்
கால் கடுக்க ஒடி
பயிற்சி எடுதேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
பாரதியாரின் கவிதைகளை
பக்கம் விடாமல் படித்தேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
கர்னாடக இசையை காது
குளிர கேட்டேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
அடியோடு பிடிக்காத
‘அவரைக்காயை’
ஆசையாய் சாப்பிட்டேன்
அவள் சொன்னாள் என்பதற்காக
அவளை மறக்க
முயற்சிக்கிறேன்
ஆனால் ஏனோ முடியவில்லை!தங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே? கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!
Comments

 1. அவள் சொன்னா"ள்" என்பதற்காக வரிக்கு வரி "ள்"லுக்கு பதில் "ல்" போட்டீர்களா...

  ReplyDelete
 2. மேற்படி பின்னூட்டம் நகைச்சுவைக்கு மற்றபடி நல்ல கான்செப்ட்...

  ReplyDelete
 3. மேற்படி பின்னூட்டம் நகைச்சுவைக்கு மற்றபடி நல்ல கான்செப்ட்...
  May 23, 2011 8:36 PM
  நன்றி நண்பரே! நான் இலக்கணம் அறியேன்!

  ReplyDelete
 4. தவறு திருத்தப்பட்டுவிட்டது! இப்ப ஓகேயா பிளாசபி பாஸ்கர்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!