ஆவி அழைக்கிறது!


ஆவி அழைக்கிறது!
     எழுதுபவர்: உங்கள் பிரிய “பிசாசு”

தொடர்கதை; பகுதி 1


காலைக்கதிரவன் உதித்து கனலென தகித்துக் கொண்டிருந்த கத்தரி வெயில்பொழுது 11 மணி இருக்கும். அந்த அழகிய இன்னோவா கார் புழுதியை கிளப்பியபடி வந்து அந்த சிதிலமடைந்த பங்களாவின் முன் நின்றது.அதிலிருந்து இறங்கினார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர். இடுங்கிய கண்கள் வேட்டியை கீழ்பாச்சு கட்டி இருந்தார் வெள்ளை கதர் சட்டை தலையில் கவாஸ்கர் தொப்பி அணிந்து வித்தியாசமாய் இருந்தார். அவருக்கு பின் இறங்கியவர் ஒரு இளம்பெண்.சுமார் 20 வயதிருக்கும் ஒட்டு மொத்த இளமையும் ஒரு சுடிதாருக்குள் மறைத்திருந்தாள். மூன்றாவதாக இறங்கியவருக்கு 60 வயது கடந்திருக்கும் மூக்கு கண்ணாடி பெயருக்கேற்றார் போல மூக்கின் மேல் நிற்க வாயில் வெற்றிலை சீவலை குதப்பிக்கொண்டிருந்தார். கையில் மான் மார்க் கருப்பு குடை.இம்மூவரும் இறங்கியதும் அந்த ஊர் பெரிய மனிதரான நல்லமுத்து முதலி ஒரு சைக்கிளில் அங்கு வந்து சேர்ந்தார்.
         வாசகர்களே கதை ஆரம்பிக்கும் அவசரத்தில் சிலவற்றை சொல்ல மறந்து விட்டேன். அதை இப்போது சொல்லி விடுகிறேன். நமது கதை நடக்கும் ஊர் ஆழ்வார் குறிச்சி. ஆழ்வார் குறிச்சி சிறிய ஊரும் அல்ல பெரிய ஊரும் அல்ல நடுத்தரமான ஊர். அவ்வூரில் முன்னொரு காலத்தில் அழகான பங்களாவாக திகழ்ந்தது தான் கதை ஆரம்பத்தில் சொன்ன பங்களா. அங்குதான் நமது கதை ஆரம்பிக்கிறது.
           இப்பொழுது அலங்கோலமாக காட்சிதரும் இந்த பங்களாவின் சொந்தக்காரர் தனவேல் முதலியார். அவர்தான் காரில் வந்த கவாஸ்கர் தொப்பிக்காரர்.அவர் சென்னையில் பெரிய பிஸினஸ் மேன் அவருடன் வந்தவர்கள் அவரது பெண் நிதிலாவும்குமாஸ்தா குப்புசாமியும். இனி நிகழ்வுக்கு செல்லலாம்.
இந்த குட்டிச் சுவரையா புதுப்பிக்க போறிங்க என்றாள் நிதிலா அவள் முகத்தில் ஒரு ஏளனம். நிதிலா இது நம்ம மூதாதையோரட நினைவுச் சின்னம். இதை யாரும் கவனிக்காம விட்ட தாலே இப்படி பாழடைஞ்சு கிடக்கு நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த பங்களாவில்தான் வேலை விஷயமா சென்னைக்கு போயிட்டதாலே இந்த வீட்ட கவனிக்காம விட்டுட்டேன். இத மேலும் அழிய விடாம காப்பது என் கடமை என்ற தனவேல் முதலியார் மீண்டும் அந்த கட்டிடத்தை பார்த்தார். நுழையக்குட இடமின்றி வேலிக்காத்தான் புதர்மண்டிக் கிடந்தது கட்டிடம் ஆங்காங்கே சிமெண்ட் காரை பெயர்ந்து அரசன்,நுனா,செடிகள் புல் பூண்டுகள் கட்டிடத்தை ஆக்கிரமித்து இருந்தன.
      டோட்டலி கிரிமினல் வேஸ்ட் இந்த கட்டிடத்த சீர்படுத்தி இதுல நாம குடி இருக்க போறோமா என்ன? நிதிலா கேட்க ஆமாம் என்றார் தனவேல்.
என்னப்பா சொல்றீங்க?
    சென்னை எனக்கு போர் அடிச்சு போச்சும்மா உனக்கு காலா காலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி மாப்பிள்ள கிட்ட பொறுப்ப ஒப்படைச்சிட்டு கடைசி காலத்த இங்க கழிக்கலாமுன்னு இருக்கேன் அதான் இந்த ஏற்பாடெல்லாம்.ஏம்பா நல்ல முத்து ஏற்பாடெல்லாம் பண்ணிட்டியா? வேலைக்கு ஆள் வருதா?என்று நல்லமுத்துவிடம் வினவினார்.
   நீங்க கவலையே படாதீங்க தனவேல் அதான் பொறுப்ப எங்கிட்ட ஒப்படைச்சாச்சில்ல நான் பார்த்துக்கறேன். நாளைக்கு நல்ல நாள் நிறை அமாவாசை புதன் கிழமை பொன்கிடைச்சாலும் புதன் கிடைக்காது. நாளைக்கே வேலைய ஆரம்பிச்சிடுவோம். இப்ப நீங்க தங்கறதுக்கு வீடு கேட்டிருந்தீங்க இல்லயா?அருமையான வீடு ஒன்னு பார்த்து வச்சிருக்கேன் வாங்க போவோம் என்ற நல்ல முத்து சைக்க்கிளில் முன் செல்ல காரில் ஏறி அவரை பின் தொடர்ந்து ஊர்ந்தார்கள்.
             ஒரு தெரு தள்ளி சற்றே ஒதுக்குப் புறமாய் இருந்தது அந்த ஓட்டு வீடு வாசலில் இரண்டு மாமரங்கள் காய்த்து தொங்க சுற்றிலும் பசுமை நிறைந்திருந்தது. கதவை திறந்து உள்ளே நுழைந்த நல்ல முத்து என்ன தனவேலு வீடு பிடிச்சிருக்கா என்றார்.
     அருமையா இருக்கு என்றாள் நிதிலா
உங்களுக்கு ஒத்தாசைக்கு பொன்னம்மா கிழவி வருவாள் சமைச்சு வீடு பெருக்கி வீட்ட நல்லா பாத்துப்பா நீங்க ரெஸ்ட் எடுங்க நாளைக்கு பார்ப்போம் என்று  நல்லமுத்து கிளம்பிவிட்டார்.

மறுநாள் காலை பாழடைந்த பங்களாவை சுத்தம் செய்ய ஆள் வந்திருப்பதாக பொன்னம்மா கிழவி கூப்பிட அறையிலிருந்து வெளியே வந்தார் தனவேல். கடா மீசையோடு கட்டு மஸ்தானமாக ஒருவன் நின்றிருந்தான் ஏம்ப்பா ஒம் பேரென்ன? ஐயா எம்பேரு முனியணுங்க! சரி வா பங்களாவ போயி பார்ப்பொம்.
      இருவரும் பங்களாவை அடைந்தார்கள் பார்த்துக்கோ முனியா இதுதான் எங்க பரம்பரை பங்களா ஆனா எங்களாலே இப்ப இதுக்குள்ளே நுழையக்கூட வழியில்ல எத்தன ஆட்கள வேனா கூட்டிக்கோ இந்த முள் புதர்கள எல்லாம் சுத்தமா அழிச்சுடு நீ கேக்குற கூலிய நான் தரேன் என்றார் தனவேல்

ஐயா இதுக்கு ஒரு பத்துப்பேரு தேவைப்படுவாங்க ரெண்டு நாள் ஆகும் சுத்தமா கிளின் பண்றதுக்கு ஒரு ஆளுக்கு ஒரு நா கூலி சாப்பாடு போட்டு முன்னுறு ரூபா ஆகும்.

ஓக்கே முனியா நாந்தரேன் நீ போயி ஆட்கள கூட்டி வந்துரு

அரை மணி நேரத்தில் ஒரு எழெட்டு நபர்களுடன் வந்த முனியன் ஐயா வேலைய ஆரம்பிக்கடுங்க்ளா என்றான்.
ஓக்கே ஒக்கே நீ ஆரம்பி முனியா
  முனியன் பங்களா வாசலில் மண்டிக்கிடந்த அந்த வேலிக்காத்தான் செடியை வெட்ட கத்தியை ஓங்கினான். இரண்டு வெட்டு வெட்டியிருப்பான். அதற்குள் நெஞ்சைப் பிடித்தபடி ஆ அம்மா என்று அலறியவாறே சுருண்டு விழுந்தான் உடன் வந்தவர்கல் பதறி ஏய் என்னாச்சு முனியா என்று அவனை நிமிர்த்தினார்கள் அவன் தலை துவண்டது. அவனது கண் இருண்டது. தனவேல் ஓடி வந்து முனியா முனியா எழுந்திரு என்று பிடித்து உலுக்கினார் ஆனால் அவனது இதயம் நின்று ஐந்து வினாடி ஆகியிருந்தது.
                       அழைக்கும்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2