என்னால முடியாது! பாப்பா மலர்
என்னால முடியாது! காலை வேளை! ஏய் சுதா! அங்க என்ன பண்றே? இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வை! வா இங்க வேலை நிறைய இருக்கு! சதா புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா எல்லா வேலையும் ஆகிடுமா? என்று குரல் கொடுத்தாள் சுதாவின் தாய் விஜயா. “என்னால முடியாது! ரமா என்ன பண்றா? அவளை கூப்பிட்டு கழுவச் சொல்லு! இந்த வேலையெல்லாம் எனக்குத் தெரியாது! பிடிக்கவும் பிடிக்காது! என்று மறுத்தாள் சுதா. ஆமா! வேலைன்னாலே உனக்கு கஷ்டமா இருக்கு! இந்த வயசுல கத்துகிட்டாத்தானே நாளைக்கு உதவும். எல்லா வேலையும் ரமாவே செஞ்சிகிட்டு இருந்தா நீ எப்ப கத்துக்கிறது? முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும் போகபோகப் பழகிடும். வாம்மா! சுதா கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா! அதெல்லாம் முடியாது ரமாவை கூப்பிட்டுக்க நான் காமிக்ஸ் படிச்சிகிட்டு இருக்கேன் என்று கதை புத்தகத்தில் மூழ்கினாள் சுதா. அவ தண்ணி கொண்டு வர போயிருக்கா! உன்னால முடியுமா முடியாதா? அம்மா கத்த என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்லே ஏன் தொந்தரவு பண்றே? என்று மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் சுதா. பாவம் ரமா அவளையே எவ்வளவு வேலை வாங்கறது அவ தண்ணி எடுத்து வர போயிருக்கா! ஒரு நாளாவது ந