சச்சின் பயந்தாங்கொள்ளி சோயப் அக்தர் தாக்கு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சோயப் அக்தர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் இந்திய வீரர் சச்சின் மற்றும் திராவிட் பற்றி தெரிவித்துள்ள சில கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது பந்துவீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு பீதியை அளித்தவர். ஆனால் பல சர்ச்சைகளில் சிக்கிய அக்தர் அணியில் இருந்தே வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய போது தனக்கு நேர்ந்த அனுபவங்களை மையமாக கொண்ட தனது சுயசரிதை புத்தகத்தை எழுதிய அக்தர் வெளியிட்டார். 'தங்கள் சர்ச்சைக்குரிய' (கான்ட்ரோவஸ்லீ யுவர்ஸ்) என்ற பெயரில் எழுதியுள்ள அக்தர் அந்த புத்தகத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான சச்சின் மற்றும் திராவிட் ஆகியோரை ஆட்டத்தில் பெரிய திறமைசாலிகள் என்று கூற முடியாது. அந்த 2 பேருக்கும் ஆட்டத்தில் சரியான துவக்கத்தை அளிக்கவோ, ஆட்டத்தை முடிக்கவோ தெரியாது.

சச்சின் எனது வேகபந்துகளை சந்திக்க பயந்தது உண்டு. இதை தெரிவிக்க நான் எதற்கு பயப்பட வேண்டும். சச்சின் மற்றும் திராவிட் ஆகிய 2 பேரும் அணியின் வெற்றிக்கு உதவும் வீரர்கள் என கூற முடியாது. பாலிவுட் நடிகரும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவருமான ஷாருக்கானிடம் எனக்கு அளிக்கப்பட்ட சம்பளத்தில் திருப்தியில்லை என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.

ஆனால் அவரும், ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடியும் சேர்ந்து என்னை சம்மதிக்க வைத்தனர். அதற்கு பின் அவர்கள் 2 பேரின் ஆலோசனையும் நான் கேட்கவில்லை, என கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து இந்திய வீரர் சச்சினிடம் கேட்டபோது, சோயப் அக்தரின் சர்ச்சைக்குரிய புத்தகம் குறித்து கருத்து தெரிவி்த்தால் எனது புகழுக்கு இழுக்காக அமையும், என்றார்.

டிஸ்கி} இது ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்று எடுத்துக் கொள்வோம். அக்தரின் பந்துகளை உலககோப்பை 2003ல் சச்சின் வெளுத்து வாங்கியதை அவர் மறந்திருக்கலாம் கோடானு கோடி ரசிகர்கள் மறக்கவில்லை! 

நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!

Comments

 1. இன்னைக்கு தான் முதலா வரேன்!மனம் வீசும் நந்தவனம்தான்!

  ReplyDelete
 2. அக்தர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதி எந்த சந்தேகமும் இல்லை அதற்காக..இப்படி அவர் விமர்சிக்கக்கூடாது

  ReplyDelete
 3. கோகுல் said...

  இன்னைக்கு தான் முதலா வரேன்!மனம் வீசும் நந்தவனம்தான்!
  September 23, 2011 10:24 PM

  நன்றி நண்பரே! தங்கள் வருகை இனி என்றும் இருக்கட்டும்!

  ReplyDelete
 4. K.s.s.Rajh said...

  அக்தர் சிறந்த பந்துவீச்சாளர் என்பதி எந்த சந்தேகமும் இல்லை அதற்காக..இப்படி அவர் விமர்சிக்கக்கூடாது
  September 24, 2011 5:25 AM


  அக்தர் மட்டுமல்ல பாகிஸ்தானின் பெரும்பாலான வீரர்கள் வாயைக் கொடுத்து வம்பை வாங்கக் கூடியவர்கள் தான்!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!