உலகின் குள்ளமான பெண்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த அமெரிக்க கல்லூரி மாணவி
சிகாகோ: 27 இன்ச் உயரமுள்ள அமெரிக்க கல்லூரி மாணவி பிரிட்ஜெட் ஜார்டன் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான பெண் என்று கின்னஸ் உலக சாதனைக் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரிட்ஜெட் ஜார்டன் (22). அவரது சகோதரர் பிராட் ஜார்டன் (20). பிரிட்ஜெட்டின் உயரம் 27 இன்ச், பிராடின் உயரம் 38 இன்ச். அவர்கள் தான் உலகிலேயே மிகவும் குள்ளமான உடன்பிறப்புகள் என்று கின்னஸ் சாதனை குழு தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் மத்திய இல்லினாய்ஸில் உள்ள கஸ்கஸியா கல்லூரியில் படித்து வருகின்றனர். நாட்டியம், சியர் லீடிங் ஆகியவை பிரிட்ஜெட்டின் பொழுதுபோக்கு. பிராட் கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, மேஜிக் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர்.
பிரிட்ஜெட் தான் உலகிலேயே குள்ளமான பெண்மணி என்று கின்னஸ் உலக சாதனைக் குழு தெரிவித்துள்ளது. 28.5 இன்ச் உயரமான துருக்கியைச் சேர்ந்த எலிப் கோகமேன் தான் இதற்கு முன்பு உலகின் குள்ளமானப் பெண்மணியாக திகழ்ந்தார்.
இதுவரை வாழ்ந்தவர்களிலேயே குள்ளமான பெண் என்றால் அது நெதர்லாந்தைச் சேர்ந்த பாலின் மஸ்ட்ர்ஸ் தான். அவர் உயரம் வெறும் 24 இன்ச். அவர் கடந்த 1895-ம் ஆண்டில் தனது 19 வயதில் நிமோனியாவால் உயிர் இழந்தார்.
பிரி்ட்ஜெட் நீண்ட நாட்களுக்கு உலகின் குள்ளமானப் பெண்ணாக இருக்க முடியாது. ஏனென்றால் 2 அடி உயரமுள்ள இந்தியாவைச் சேர்ந்த ஜோதி அம்ஜி வரும் டிசம்பர் மாதம் 18 வயதை அடைகிறார். எனவே, விரைவில் ஜோதி தான் உலகின் குள்ளமானப் பெண் என்று அறிவிக்கப்படுவார் என்று கின்னஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments
Post a Comment