என் இனிய பொன் நிலாவே! பகுதி 2

என் இனிய பொன் நிலாவே!    பகுதி 2
                   “ப்ரியம்வதா”


முன்கதைசுருக்கம்| கதையின் நாயகியான மதுமிதா வீட்டுக்குச் செல்லப்பெண். ஒரு கம்பெனிக்கு இண்டர்வியுவிற்கு செல்லும் போது அவள் மீது மோதினான் ஓர் இளைஞன்.இனி
    இண்டர்வியுவிற்கு நேரமாகிறதே என்று எதிரே கவனிக்காமல் வேகமாகசென்றதால் மாடிவளைவில் அந்த இளைஞன் மீது மோத நேரிட்டது. அவனுக்கும் என்ன அவசரமோ அவ்வளவு வேகமாக வந்தான். தவறு இருவர் மீதும் தான். ஆனால் மதுமிதாவுக்கு தன் பொன்னான நேரம் வீணானதோடு ஒர் அன்னிய வாலிபன் மீது இடித்துவிட்டோமே என்று ஆத்திரம். அவன் மோதிய வேகத்தில் தடுமாறி விழுந்ததில் காலில் லேசாக சுளுக்கு வேறு.விலகிய ஆடைகளை சரிசெய்தபடி தன்மீது மோதியவனை முறைத்தாள் மதுமிதா.

    ஆனால் அவனோ அதை சிறிதும் லட்சியம் செய்யாமல் அயம் சாரி மேடம் சாரி! சாரி என்று சொல்லியவாறே ஃபைலில் இருந்து சிதறிய காகிதங்களை பொறுக்க ஆரம்பிக்கவும் மதுவிற்கு மேலும் கோபம் அதிகமானது. தன்னுடைய உடைமைகள் சிதறிக் கிடக்கிறது அதை முதலில் எடுக்காமல் அவனது பொருட்களின் மீது கவனம் செலுத்துகிறானே! ஒரு பெண்ணின் மீது மோதிவிட்டோமே என்று சிறிதும் சங்கோஜப் படாமல் ஒரு சாரி கேட்டுவிட்டு அவன் தன் வேலையில் கருமமே கண்ணாக இருக்கிறானே என்ன மனிதன் இவன் என்று அவனை ஏற இறங்க பார்த்தாள் மதுமிதா.
    என்ன மேடம் ஆவ்ரேஜுக்கு கொஞ்சம் அதிகமாகவே அழகா இருக்கேனா? என்று சிரித்தபடி அவன் வினவவும் மதுவிற்கு மேலும் கோபம் அதிகமானது. “ஏய் மிஸ்டர் உடம்பு எப்படி இருக்கு?”என்று கோபமாக கேட்டாள். ‘ஐயம் ஆல்ரைட் மேம்! உங்களுக்கு எதுவும் அடிகிடி படலையே!’என்று குறும்பாக கண்களை சிமிட்டினான் அவன்.
மதுமிதாவின் கன்னங்கள் கோபத்தால் சிவந்தன. ‘யூ.. யூ.. உன்கிட்ட எனக்கென்ன பேச்சு எனக்கு இண்டர்வியுவிற்கு டயமாச்சு!’ என்று முணுமுணுத்தபடி எழுந்தாள் மதுமிதா.அதோடு தனது ஃபைல்களையும்பொறுக்க ஆரம்பித்தாள்.இப்போது அவனும் உதவி செய்ய ஆரம்பித்தான். அவளது சில சிதறிய மார்க்ஷீட்களை பொறுக்கி தந்தபடி கோபத்திலும் நீங்க அழகா இருக்கீங்க மதுமிதா என்றான்.

  இவனுக்கு எப்படி என் பெயர் தெரியும்? என்று அவள் நினைத்து முடிக்குமுன் இப்படித்தான் தெரியும் என்று மார்க் சீட் தாளிலிருந்த பெயரை சுட்டினான் அவன்.

  ஏய் மிஸ்டர் என்னை வம்பிழுக்காமல் போகமாட்டீர்களா? எனக்கு இண்டர்வியுவிற்கு நேரமாகிறது! பார்த்தால் டீசண்டான தோற்றமாய் இருக்கிறது இப்படி பிகேவ் பண்றிங்களே! என்று மீண்டும் அவனை கரித்து கொட்டினாள் மது.

  மிஸ் மது! அப்படி கூப்பிடலாமில்லையா? நானா உங்களை வம்புக்கிழுத்தேன்? நீங்களாகவே வந்து என்மீது மோதி என் ஃபைல்களை சிதற அடித்ததோடு இல்லாமல் என்னை சண்டைக்கு இழுத்துவிட்டு இப்போது பிளேட்டை மாற்றி போடுகிறீர்களே! இது என்ன நியாயம்? என்றான் அவன்.

  மி..மிஸ்டர்... அபிஷேக் என்று எடுத்துக் கொடுத்தான் அவன்.

  மிஸ்டர் அபிஷேக் நானா உங்கள் மீது மோதினேன்?

பின்னே! இல்லை!இல்லை! இப்படி வேனுமானால் வைத்துக் கொள்ளலாம்! ஒரு அழகியதேவதை என்மீது மோதியது என்று வைத்துக் கொள்வோமா? என்று கண்களில் குறும்பு மின்ன அவன் கேட்க மதுமிதாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது.

  தேவதை என்கிறானே அவ்வளவு அழகா நான்? மனதிற்குள் கேட்க அவன் பதில் சொன்னான்.ஆம் மது உன்னை பார்க்கையில் எனக்கு என்னுடைய தேவதையைப் பார்த்தது போல் ஆகிவிட்டது நீ உண்மையிலேயே ஒரு தேவதைதான்!.
  அலோ! மிஸ்டர் என்ன பேச்சு வரம்பு மீறிப் போகிறது? கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்! என்று கோபமாக சொன்னாலும் அவன் பாராட்டு அவளுக்கு உள்ளத்தில் ஒருவித மகிழ்ச்சியை தந்தது என்னமோ நிஜம்.
  பாராட்டினால் அதை ஏற்கவும் ஒரு பக்குவம் வேண்டும்! நீகூட என்னை அப்படிப் பார்த்தாயே! நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? என்று வாதாடினான் அவன்.
ஏன் மிஸ்டர் இப்படி வம்பு வளர்த்து என் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? ஐயோ கடவுளே இன்று யார் முகத்தில் முழித்தேனோ? என்று புலம்பினாள் மதுமிதா.
ஒக்கே! ஓக்கே! நீங்கள் பதட்டப்படாதீர்கள்! தவறு நம் இருவர் மீதும் தான்! நான் ஒப்புக் கொள்கிறேன்! நான் மன்னிப்பு கேட்டு அரைமணி நேரம் ஆயிற்று! பதிலுக்கு நீங்கள் கேட்க இவ்வளவு நேரமா?என்றான் அபிஷேக்.
  ஐயையோ! அரை மணிநேரமா? என் இண்டர்வியு இன்னிக்கு பாழ்! இடியட் உன்கூட சண்டை போட்டதில் என் வேலை போச்சு!
 
பாத்தீங்க பாத்தீங்களா! நான் உங்களை தப்பா எதுவும் சொன்னேனா? ஆனா நீங்க என்னை கண்ட மேனிக்கு வருத்து எடுக்கிறீங்களே!
  ஐயோ ! ஆளைவிடு சாமி! நான் இண்டர்வியு அட்டென் பண்ணணும்! என்று கைகூப்பி விட்டு கடகடவென மாடிப்படிகளில் ஏற ஆரம்பித்தாள் மதுமிதா.

அலோ! ஒரு நிமிஷம் நில்லுங்க! என்று மீண்டும் அழைத்தான் அவன். என்ன என்று மீண்டும் நின்று முறைத்தாள்மதுமிதா.
 இது உங்க மொபைல்தானே! என்று எடுத்து நீட்டியவன் ஒரு நிமிஷம் என்றவன் அதில் தன்னுடைய எண்களை அழுத்தினான்.
  ஏய் என்ன பண்றீங்க ? என்னோட அனுமதி இல்லாம என் மொபைல யூஸ் பண்றீங்க? என்று அவள் கேட்கும் போதே அவனது செல் சிணுங்கியது. கூல்! என்றபடி செல்லை அணைத்து அவள் கையில் கொடுத்த அபிஷேக் பெஸ்ட் ஆப் லக் என்றான்.
  பதிலேதும் சொல்லாமல் அவசரமாக கிளம்பினாள் மதுமிதா. அங்கே அவளுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
                          நிலவு வளரும்(2)
 டிஸ்கி| அவசரமாக வெளியூர் போய்விட்டு வந்து பதிவிட்டுள்ளேன்! கதையின் நாயகிக்கு பொறுத்தமான படங்கள் தேட முடியவில்லை! எனவே சினேகா படம்! மற்றபடி ஒன்றுமில்லை!
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து பிரபலப் படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2