Posts

Showing posts from March, 2019

கார் கட்டு!

Image
   கார் கட்டு!                   அந்த தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து நகரினுள் வேகமாக நுழைந்தது பெருவேகமாய் வந்த கார். காரை ஒரு இருபது வயது இளம்  யுவதி செலுத்திவர மேலே பேனெட்டில்  இளைஞன் ஒருவன் கட்டப்பட்டிருந்தான். அவன் வாய், ஏய்… நிறுத்து…! நிறுத்து..! ஸ்டாப்…! ஸ்டாப்..!  ஸ்டாப் தட் இடியட் கேர்ள்!  இதற்கெல்லாம் நீ அனுபவிப்பாய்! என்று கத்திக் கொண்டிருக்க, கடைத்தெருவில் காய்கறி வாங்குவதிலும் மளிகைப் பொருட்களை வாங்குவதுமாய் இருந்தவர்களும் உடன் பயணித்த வாகனத்தில் இருந்தவர்களும் வித்தியாசமாய் பார்த்தார்கள்.    ஏய்.. அதோ பாருடா! காரு மேல ஒருத்தன் கட்டிப் போட்டிருக்கு..!  சினிமா ஷூட்டிங்கா? அந்த பொட்டைப் பொண்ணுக்கு என்னா துணிச்சல் இருந்தா ஒரு ஆம்பளையை இப்படி கார்மேல கட்டி வச்சிக்கிட்டு போவும்…! ஆளாளுக்கு முணுமுணுத்தார்களே தவிர ஒருவரும் அந்த காரை மடக்கவோ வழிமறிக்கவோ இல்லை.   கார் மிகவேகமாக அந்த நகரத்தைக் கடந்து ஒரு கிளைச்சாலையில் பிரவேசித்தது. ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்று ஒரு தன்னந்தனியான பங்களா முன் நின்றது.   காரை நிறுத்தி இறங்கிய அந்தப் பெண். காரின் மேல் கத்திக் கொண்டிர

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

Image
தளிர் ஹைக்கூ கவிதைகள்! வெள்ளை அடிக்கையில் அழுக்காகிப் போனது! பக்கத்துவீடு! கொளுத்தும் வெயில் குடையாய் வந்தன மரங்கள்! பிம்பங்கள் பெரிதாகையில் தொலைந்து போகின்றது! நிஜம்! தொட்டியில் அடைபட்டது வாஸ்து மீனின் சுதந்திரம்! கண்டித்தாலும் விடுவதில்லை குழந்தைக்கு மண்ணாசை! மேடு பள்ளங்கள்! தடுத்து நிறுத்துகிறது வாழ்க்கையின் ஓட்டத்தை! விரல் அசைவில் பிறக்கின்றன எழுத்துக்கள்! நினைவுகள் பூக்கையில் வாசம் வீசியது நட்பு. இருள் கவ்விய சாலைகள்! மிளிர்ந்தன வாகன வெளிச்சம்! அமாவாசை இரவு நெருங்கி வந்தன நட்சத்திரங்கள்! விழித்து எழுந்ததும் கலைந்து போனது கனவு! இலையுதிர்த்த மரங்கள்! காணாமல் போனது நிழல்! கொட்டிக்கிடந்தது பிச்சைக்காரர்களிடம் சில்லறை! தூரப் போகிறார் கடவுள்! நீண்டு கொண்டே போகிறது! தர்ம தரிசனம்! விலை நிர்ணயம் ஆனதும் உரிமை பறி போகிறது! தேர்தல்! நிறுத்தம் வந்ததும் பிரிந்து போகிறது சிநேகம்! பேருந்துப் பயணம்! பின் குறிப்பு} நீ,,,,ண்ட இடைவெளிக்குப் பிறகு ஹைக்கூ எழுதியுள்ளேன்!

சின்னப்பூக்கள்! சிறுவர் மின்னிதழ் மார்ச் 2019

தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ்! மார்ச் 2019