தேன்சிட்டு அக்டோபர்: 2020 சிறுகதை படைப்புகள்!
அன்பார்ந்த வாசக பெருமக்களே!
அன்பார்ந்த தேன்சிட்டு வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!
சென்ற மாத தேன்சிட்டு இதழை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.
தேன்சிட்டு என்னும் மின்னிதழை கடந்த இரண்டு ஆண்டுகளாய் எனக்குத் தெரிந்த அளவில் வடிவமைத்து வேர்ட் பைலாய் உருவாக்கி அதை பி.டி,எஃப் பைலாக ஒரு புத்தகமாக அனைவருக்கும் பகிர்ந்துவந்தேன். வடிவமைப்பு கலை நான் கற்றவன் அல்ல. தேன்சிட்டு மூலம் அக்கலையை பயின்றேன். கற்றுக்கொண்டேன். வேர்டை விட கோரல் ட்ரா என்ற சாப்ட்வேரில் வடிவமைப்பு செய்தால் இன்னமும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆனால் அந்த சாப்ட்வேர் நான் கற்கவில்லை. என்னிடம் அந்த சாப்ட்வேர் இல்லவும் இல்லை. அதனால் என்னால் முடிந்தவரை வேர்டில் வடிவமைத்துவந்தேன்.
என்னதான் கஷ்டப்பட்டு வடிவமைத்தாலும் சிறு சிறு குறைகள் ஏற்பட்டுவிடுகின்றது. எழுத்துக்கள் கண்களை உறுத்துகிறது. பத்திகள் மாறி விடுகின்றது. எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றது. என் ஒருவனால் இவை அனைத்தையும் கவனித்து இதழை சரியான நேரத்தில் வெளியிடுவது என்பது சுமையை அதிகரித்தது. குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவழிக்க இயலவில்லை.
நேரம் செலவழிக்கும் தேன்சிட்டு மின்னிதழால் எனக்கு ஆத்ம திருப்தியைத் தவிர வேறெதுவும் வருமானமில்லை. ஒட்டுமொத்தமாக மின்னிதழை நிறுத்திவிடலாம் என்றாலும் மனசு கேட்கவில்லை. எனவே இந்த மாதம் முதல் தேன்சிட்டு மின்னிதழை இணைய இதழாக உருமாற்றம் செய்துள்ளேன். ஏற்கனவே நீங்கள் இணையத்திலும் வாசித்ததுதான். அப்போது பி.டி.எஃப் பைலும் கிடைக்கும். இந்தமாதத்தில் இருந்து அந்த பி.டி.எஃப் வடிவம் மட்டும் கிடையாது. மற்ற எல்லா பகுதிகளும் தனித் தனிப் பதிவுகளாக தேன்சிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
படிப்பதற்கு வசதியாக இருக்கும். கண்களை உறுத்தாது. என்னுடைய பணிச்சிரமமும் குறையும். வாசகர்கள் எப்போதும் போல் தங்கள் ஆதரவினை அளித்து தேன்சிட்டு சிறகடிக்க உதவி செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
இணைய இதழாக இருப்பதால் மாதம் இருமுறை பதிவுகளை பதிவேற்றலாம் என்று நினைத்துள்ளேன். இந்த முதல் இதழுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவினை பொறுத்து அதை முடிவு செய்ய உள்ளேன்.
வழக்கம் போல உங்கள் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு படைப்புக்களையும் அனுப்பி வைத்து இதழ் சிறக்க உறுதுணையாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன். வணக்கம்.
அன்புடன்
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு.
கூடு: 2 தேனீ: 2
அக்டோபர்:2020
தேன்சிட்டு இணைய இதழில் வெளியாகும் கதைகளில்வரும், சம்பவங்கள் இடங்கள் போன்றவை கற்பனையே! படைப்புகளை சுருக்கவும் மாற்றி அமைக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.
தேன்சிட்டு இதழுக்கு படைப்புகளை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி
ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் வரும் படைப்புகள் அடுத்த இதழுக்கு பரிசீலிக்கப்படும். நவம்பர் இதழுக்கான படைப்புகள் 15-10-2020க்குள் வந்து சேரவேண்டும்.
பிற இதழ்கள், இணைய தளங்கள், பழைய புத்தகங்களில் இருந்து படைப்புகளை எடுத்து அனுப்புவதை தவிர்க்கவும்.
படைப்புகளை அனுப்புகையில் இது தம் சொந்த படைப்பு என்றும் வேறு எங்கும் வெளியாகவில்லை என்ற உறுதி மொழி இணைத்தும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேன்சிட்டு இணைய இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு தற்சமயம் சன்மானம் எதுவும் வழங்குவது இல்லை. எனவே சன்மானம் குறித்து தொடர்புகொள்வதோ படைப்பு வெளியாகுமா என்று கேட்பது போன்றவை தவிர்க்கவும்.
தகுதியான படைப்புகள் ஒரு மாத இடைவெளியில் பிரசுரமாகும். உதாரணமாக செப்டம்பர் மாதம் படைப்பு அனுப்பி இருந்தால் அக்டோபர் அல்லது நவம்பரில் பிரசுரமாகும். அதற்குமேல் பிரசுரம் காணாவிடில் படைப்பு தேர்வாகவில்லை என்று உணர்ந்து கொள்ளவும்.
கனவுச் சாமியார்
சிறுகதை : முகில் தினகரன்.
“ம்மா…நானும் வர்றேன்மா…எப்பப் பார்த்தாலும் நீ அவனை மட்டுமே கூட்டிட்டுப் போறே…என்னைய எங்கியும் கூட்டிட்டுப் போறதேயில்லை…ப்ளீஸ்!…இன்னிக்காவது என்னையக் கூட்டிட்டுப் போம்மா” கெஞ்சினான் பாபு.
“தொந்தரவு பண்ணாதே பாபு…உன்னைய நாளைக்குக் கூட்டிட்டுப் போறேன்…சரியா,” அவனை சமாதானப் படுத்த முயன்றாள் நிர்மலா.
“போம்மா…நீ இப்படித்தான் சொல்லுவே அப்புறம் கூட்டிட்டே போக மாட்டே” அழ ஆரம்பித்தவனை சிறிதும் சட்டையே செய்யாமல் உள் அறைக்குள் சென்ற நிர்மலா சின்னவன் மோகனுக்கு உடை மாற்ற ஆரம்பித்தாள்.
பெரியவன் பாபுவின் அழுகையைச் சகிக்க மாட்டாத நிர்மலாவின் மாமியார் அறைக்குள் வந்து, “ஏம்மா..அவன் கேக்கறதும் நியாயம்தானே,..ஏன் இன்னிக்கு ஒரு நாள் அவனைக் கூட்டிட்டுப் போனா என்ன கொறைஞ்சு போய்டும்,” சற்று கோபமாகவே கேட்டாள்.
“ம்….கௌரவம் கொறைஞ்சுதான் போகும்” 'வெடுக்”கென்று நிர்மலா சொல்ல,
மேலும்படிக்க: கனவுச்சாமியார்
அழுக்கு மூட்டைக்காரி
சிறுகதை: இளவல் ஹரிஹரன், மதுரை
அடித்துப் போட்ட மாதிரி இரவு வீதியில் கிடந்து
இருந்தது. தெரு விளக்குகள் கோபித்துக் கொண்டு எரி
யாமல் இருந்தன மின்வெட்டைக் காரணம் காட்டி.
தூரத்தில் யாரோ உரக்கப் பாடிக்கொண்டே
நடப்பது காலடிச் சத்தத்தில் இருந்து கேட்டிருக்குமா.....
பாட்டுச் சத்தம் தான் தெரிவித்தது. அது இருளைத்
தவிர்ப்பதற்கான பயம் என்பது குரலின் நடுக்கத்தில்
இருந்து புலப்பட்டது.
இருளாயி ( என்ன பொருத்தமான பெயர்......
இருளைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் போது, கதா
பாத்திரத்தின் பெயர் கூட இருளாயி என்று வந்து விடுகி
றதே.....) தன் அழுக்கு மூட்டையுடன் பெட்டிக் கடை ஓரம்
மூட்டையோடு மூட்டையாக ஒதுங்கி உட்கார்ந்திருந்தாள்.
இருளைக் கண்டு அவளுக்குப் பயம் ஏதுமில்லை.
மேலும் வாசிக்க:அழுக்குமூட்டைக்காரி
இருமல்
ஒருபக்க கதை : மலர்மதி
ஓவியம்: அ. செந்தில் குமார்
ஆள் அரவமற்ற சாலையில் அவள் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
சாலையோரம் அரட்டை அடித்துக்கொண்டிருந்த அந்த நால்வரின் காமப் பார்வையில் எக்குத்தப்பாய்ச் சிக்கினாள்.
“மச்சி... செம ஃபிகருடா!”
“என்ன சொல்றே?”
“வேறென்ன சொல்ல? வழக்கம்போல் விருந்துதான்!”
மேலும் வாசிக்க: இருமல்
ச ங் க ரி யி ன் க தை.
செல்வி...செல்வி...எங்க...
இருக்கே.....!
இதோ வந்துட்டேன்... என்று
சொல்லிக்கொண்டே தன்னை
அழைத்த மரகதத்தை, வீட்டுக்கு
வெளியே வந்து, வா...மரகதம்.....
எங்க இரண்டு நாளா உன்ன இந்த பக்கத்துலேயே காணும்...அப்படி
எங்க போன....
கிராமத்துல என்னோட அண்
ணன் பொன்னுக்கு கல்யாணம்...
அதுக்கு போயிருந்தேன்....செல்வி..
மேலும் வாசிக்க சங்கரியின் கதை
அடுத்த வேளைச் சாப்பாடு
ஒருபக்க கதை: பூபதி பெரியசாமி
காலை 9.00 மணி… படுடென்ஷனாய் இருந்தாள் கவிதா. காரணம், சமையல்காரி தனம் இன்னும் வேலைக்கு வந்தபாடில்லை. கோபமாய்ப் போனை எடுத்தாள். அப்போது, வேகமாய் ஓடிவந்த சமையல்காரி… “அம்மா மன்னிச்சிடுங்கம்மா. கொஞ்சம் லேட்டாயிடுச்சு…”
உடனே, சலிப்பாய்…“சரி… சரி போய் வேலையப்பாரு. நிறைய வேலை கிடக்கு…” என்றாள் கவிதா.
மேலும் வாசிக்க: அடுத்த வேளைச் சாப்பாடு
சின்னத்தாய்!
ஒருபக்க கதை: கி.ரவிக்குமார்
வெளியே ஜோவென மழை பெய்து கொண்டிருந்தது.
இரவு மணி ஏழு! எட்டாம் வகுப்பு படிக்கும் வர்ஷிணி மும்முரமாக தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா விமலா இரவு சாப்பாட்டுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். மூன்று வயது அஸ்வின், பொம்மை உலகில் ஆழ்ந்திருந்தான்.
திடீரென வாந்தி எடுக்கும் சத்தம். ஹாலுக்கு வந்து பார்த்தாள் விமலா.
மேலும் வாசிக்க:சின்னத்தாய்
கனவு நாற்காலி
சிறுகதை: கி.இலட்சுமி
********************
ஓவியம்: அ. செந்தில் குமார்
என்ன இருந்தாலும் கற்பகத்துக்கு நாற்பது வயதில் இப்படிபட்ட ஆசை வந்திருக்க கூடாதுதான் ...அட நாற்பது வயதானால் என்ன ஆசை பட்டு போய்விடுமா என்ன ...அவளும் உயிரும் உணர்வும் உள்ள ஒரு பெண்தானே ...அப்படி என்ன பெரிதாக ஆசைப்பட்டு விட்டாள்...ஒரு சாய்வு நாற்காலி...அதில் சாய்ந்தபடி சுற்றுப்புறத்தை ரசிக்க வேண்டும் ..கூடவே கண்களை மூடி தனிமையில் சாய்ந்தாடியபடி பழைய இனிமையான நினைவுகளில் மூழ்க வேண்டும்...சிறுவயதில் தாத்தா சாய்வு நாற்காலியில் சாய்ந்தாடியபடி அவளை தூக்கி அமரவைத்துக்கொண்டு எத்தனையோ கதைகளை சொல்லிக் கொடுப்பார்...அப்போதிலிருந்தே அவளுக்கும் அந்த நாற்காலியில் தானும் அமரவேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டது... காலஓட்டத்தில் தாத்தாவும் இல்லை...சாய்வு நாற்காலியும் உடைந்து போய்விட்டது...திருமணம் ..புகுந்த வீடு..குழந்தை.. பிறப்பு வளர்ப்பு...என மற்றவர்களின் தேவைக்காக சுற்றிக்கொண்டே இருந்ததில் அவளுள் இருந்த ஆசைகள் அடிமனதில் புதைக்கப்பட்டு விட்டன...
மேலும் வாசிக்க: கனவு நாற்காலி
பிரகாசம்
சிறுகதை: கவிமுகில் சி.சுரேஷ்
மனசு நேற்று போல் இன்று இல்லை ஏன் அடிக்கடி எண்ணம் பச்சோந்தியின் வண்ணமாய் மாற்றும் கொள்கிறது
ஒவ்வொரு நாளும் உணர்ச்சி அலைகளில் மனம்உரு குழைந்து போகிறது ஒருநாள் கதாநாயகனாகவும் அடுத்தநாள் வில்லனாகவும் இருக்கிறேன் ஏன் என மனதுக்குள் குழம்பிப்போய் தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்
கணேஷ்
மேலும் வாசிக்க:பிரகாசம்
Comments
Post a Comment